சிபிஐ கைதுக்கு எதிராக தாக்கல் செய்த மனுவை திரும்ப பெற்றார் ப.சிதம்பரம்
டெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்ஜாமீன் கோரிய வழக்கு நிலுவையில் இருந்தபோது சிபிஐ கைது செய்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை ப.சிதம்பரம் வாபஸ் பெற்றார்.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டார். அவர் ரௌஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 12 நாட்கள் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்த போது தான் கைது செய்யப்பட்டதை எதிர்த்து சிதம்பரம் தரப்பு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. அந்த மனு மீது 2-ஆம் தேதி விசாரணை நடத்தப்பட்டது.

வழக்கறிஞர்
அப்போது சிதம்பரத்துக்கு இடைக்கால ஜாமீன் அல்லது கடும் நிபந்தனைகளுடன் கூடிய வீட்டுக் காவலில் வைக்க வேண்டும் என சிதம்பரம் தரப்பு வழக்கறிஞர் கபில் சிபல் வாதிட்டார்.

தடை
அப்போது ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்ஜாமீன் மீதான தீர்ப்பு செப்.5-ஆம் தேதி அளிக்கவுள்ளதை சுட்டிக் காட்டி தனக்கு 74 வயதாகிறது என்றும் தன்னை திகார் சிறைக்கு அனுப்பிவிடாதீர்கள் என்றும் உச்சநீதிமன்றத்தில் ப.சிதம்பரம் கோரிக்கை வைத்தார். இதையேற்ற நீதிபதிகள் வரும் 5-ஆம் தேதி வரை சிதம்பரத்தை திகார் சிறைக்கு அனுப்ப தடை விதித்தனர்.

உச்சநீதிமன்றம்
மேலும் சிபிஐ காவலுக்கு எதிரான வழக்கில் சிதம்பரத்தை 5-ஆம் தேதி வரை சிபிஐ காவலில் வைக்க உத்தரவிட்டனர். இன்றுடன் சிதம்பரத்தின் காவல் முடிவடைகிறது. இந்த நிலையில் ஐஎன்எக்ஸ் மீடியா அமலாக்கத் துறை வழக்கில் முன்ஜாமீன் தர முடியாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

வழக்கு
இந்த நிலையில் ஜாமீன் கோரி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததற்கு இடையூறாக இருக்கும் என கருதி சிபிஐ கைதுக்கு எதிரான வழக்கை திரும்ப பெற்றார் ப.சிதம்பரம்.
-
எல்லாம் சரிதான்! SIRல் தவறு எதுவும் இல்லை! எல்லா மனுக்களையும் மொத்தமாக தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம் -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்!












Click it and Unblock the Notifications