4 பயங்கரவாதிகள்.. 30 நிமிடத்தில் 27 பேரை கொன்றது எப்படி? எந்த துப்பாக்கி வைத்திருந்தாங்க தெரியுமா
டெல்லி: ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலா தலத்தில் நேற்று பயங்கரவாதிகள் நுழைந்து துப்பாக்கியால் சுட்டு 27 பேரை கொடூரமாக கொன்றனர். இந்த சம்பவம் மொத்த உலகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இந்நிலையில் தான் இந்த பயங்கரவாதிகள் அரை மணிநேரத்தில் 30 பேரை சுட்டுக்கொன்றது எப்படி? என்பது பற்றிய திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.
தற்போது கோடைகாலம் தொடங்கி விட்டது. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையும் தொடங்கி உள்ளது. இதனால் பொதுமக்கள் குடும்பத்துடன், நண்பர்களுடன் குளிர் பிரதேசங்களுக்கு சுற்றுலா செல்ல தொடங்கி உள்ளனர். அந்த வகையில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை என்பது கணிசமாக அதிகரிக்க தொடங்கி உள்ளது.

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் பஹல்காம் என்ற சுற்றுலா தலம் உள்ளது. இது பசுமையான புல் மேடாகும். இங்கு குதிரை சவாரி செய்யலாம். ஜம்மு காஷ்மீரின் மிக முக்கிய சுற்றுலா தலங்களில் இதுவும் ஒன்றாகும். நேற்றைய தினம் பஹல்காம் சுற்றுலா தலத்தில் ஏராளமான பொதுமக்கள் கூடியிருந்தனர். குடும்பத்துடன் குதிரை சவாரி செய்து புல்வெளியில் ரிலாக்ஸ் செய்து கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென்று பயங்கரவாதிகள் நுழைந்து துப்பாக்கியால் பொதுமக்களை சுட்டு கொன்றனர். இதில் 27 பேர் பலியாகினர். தமிழ்நாடு, மகாராஷ்டிராவை சேர்ந்தவர்கள் உள்பட மொத்தம் 12 பேர் வரை காயமடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் இந்தியா மட்டுமின்றி மொத்த உலகத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. இது கோழைத்தனமான தாக்குதல் என்று பிரதமர் மோடி உள்பட பல உலக தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தின் லஷ்கர்-இ-தொய்பா (LeT) இன் பினாமி அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF) அமைப்புதான் பொறுப்பு ஏற்றுள்ளது.
இந்நிலையில் தான் தற்போது இந்த பயங்கரவாத அட்டாக் குறித்த திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது. அதாவது இந்த பயங்கவராத தாக்குதலை நிகழ்த்தியது 4 பேர். 4 பயங்கரவாதிகளும் ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் அமைப்பை சேர்ந்தவர்கள். இவர்கள் ராணுவ வீரர்கள் போன்று உடை அணிந்து பஹல்காம் சுற்றுலா இடங்களுக்கு சென்றுள்ளனர். பிறகு அங்குள்ள சுற்றுலா பயணிகளிடம் அவர்களின் பெயர், மதம் உள்ளிட்டவற்றை கேட்டுள்ளனர்.
நீங்கள் இந்துவா? என்று கேட்டுள்ளனர். ஆம் என்றதுமே யோசிக்காமல் துப்பாக்கியால் சுட்டு கொன்றுள்ளனர். இதனால் பொதுமக்கள் அலறியடித்து ஓடியுள்ளனர். ஆனால் அரை மணிநேரத்தில் 27 பேரை 4 பயங்கரவாதிகள் கொன்று குவித்துள்ளனர். மேலும் சிலரது மதத்தை அடையாளம் காண பேண்ட் ஜிப்பை அவிழ்த்து காட்டும்படி கூறி துப்பாக்கியால் சுட்டு கொன்றுள்ளனர். இந்த பயங்கரவாதிகள் மொத்தம் 2 வகையான துப்பாக்கியை பயன்படுத்தி இந்த கொடூரத்தை அரங்கேற்றி உள்ளனர்.
அதன்படி அமெரிக்கா தயாரிப்பான எம்4 கார்பைன் அசால்ட் ரைபிள், மற்றும் ஏகே 47 எஸ் ரக துப்பாக்கியை பயன்படுத்தி உள்ளனர். 2 பயங்கரவாதிகள் எம்4 கார்பைன் அசால்ட் ரைபிளையும், பிற 2 பயங்கரவாதிகள் ஏகே 47 எஸ் ரைபிளையும் பயன்படுத்தி உள்ளனர். இதில் ஏகே 47 ரக துப்பாக்கி எளிதாக கள்ளச்சந்தையில் கிடைக்கும். ஆனால் அமெரிக்காவின் எம்4 கார்பைன் துப்பாக்கி எளிதில் கிடைக்காது. ஆனால் தீவிரவாதிகள் அதனை பயன்படுத்தி உள்ளனர்.
இது சந்தேகத்தை கிளப்பி உள்ளது. அவர்களுக்கு எம் 4 கார்பைன் துப்பாக்கி கிடைத்தது எப்படி? என்பது பற்றிய தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் சம்பவ இடத்தில் இருந்து 50- 70 கையான Catridges பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதோடு பயங்கரவாதிகளில் 2 பேர் வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் என்று நேரில் பார்த்தவர்கள் கூறி உள்ளனர். இருப்பினும் 4 பயங்கரவாதிகளின் பெயர் விபரங்கள் என்ன? என்பது தெரியவில்லை.
தற்போது இந்த சம்பவம் குறித்து ஜம்மு காஷ்மீர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுபற்றிய விசாரணை விரைவில் என்ஐஏ எனும் தேசிய புலனாய்வு முகமை வசம் ஒப்படைக்கப்பட உள்ளது. முதற்கட்ட விசாரணையில் பயங்கரவாதிகள் கிஷ்த்வாரில் இருந்து கோக்கர்நாக் வழியாக உள்ளூரில் வசிக்கும் நபர்களின் ஆதரவுடன் பஹல்காம் வந்து துப்பாக்கியால் சுட்டு 27 பேரை கொன்றது தெரியவந்துள்ளது. தற்போது 4 பயங்ரவாதிகளும் தலைமறைவாகி உள்ளனர். அவர்களை தேடும் பணியில் போலீசார், பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு -
திரிஷா பற்றிய மொத்த பிரச்சனைகளுக்கும் ஒரே போஸ்டில் அவரே பதில்.. இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பார்க்கலையே












Click it and Unblock the Notifications