இறங்கி அடிங்க.. இதுதான் சரியான நேரம்.. பாகிஸ்தான் ராணுவத்தை தாக்க மாஜி லெப்டினன்ட் ஜெனரல் ஐடியா
டெல்லி: ஜம்மு காஷ்மீரில் நேற்று முன்தினம் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பலியாகினர். இந்நிலையில் தான் பாகிஸ்தானை தாக்க வேண்டிய சரியான நேரம் இது. பாகிஸ்தான் ராணுவத்தை வீழ்த்துவதற்கான போதுமான பலம் நம்மிடம் இருக்கிறது என்று இந்திய ராணுவத்தின் ஒய்வு பெற்ற லெப்டினன்ட் ஜெனரல் கேஜேஎஸ் தில்லான் ஐடியா கொடுத்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் உள்ள மிக முக்கிய சுற்றுலா தலமாக பஹல்காம் உள்ளது. இங்குள்ள புல்மேடு பகுதியில் நேற்று முன்தினம் சுற்றுலா பயணிகள் நிறையபேர் சென்றனர். அப்போது 4 பயங்கரவாதிகள் சுற்றுலா பயணிகளை துப்பாக்கியால் சுட்டு கொன்றனர்.

விட்டுவிடும்படி கெஞ்சியும் கூட மனம் இறங்காமல் அப்பாவி மக்களை இந்த பயங்கரவாதிகள் கொன்று குவித்தனர். மேலும் 12 பேர் காயமடைந்துள்ளனர். ஆனாலும் பலரும் எச்சரிக்கையாக சம்பவ இடத்தில் இருந்து ஓடியதால் அதிர்ஷ்டவசமாக தப்பித்தனர்.
இந்த தாக்குதலுக்கு எல்இடி எனும் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் கிளையாக செயல்படும் ‛தி ரெசிஸ்டென்ட் ஃப்ரண்ட்' என்ற
பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க இந்தியா தயாராகி வருகிறது. இதனால் விரைவில் பாகிஸ்தான் மீது போர் விமானங்கள் அல்லது ஏவுகணை மூலம் நம் நாடு தாக்குதல் நடத்தலாம் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே தான் பாகிஸ்தான் ராணுவத்தை தாக்க இதுதான் சரியான நேரம் என்பது இந்திய ராணுவத்தின் 15வது கார்ப்ஸின் ஓய்வு பெற்ற முன்னாள் கமாண்டிங் ஆபிசரான லெப்டினன்ட் ஜெனரல் கேஜேஎஸ் தில்லான் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் ஆக்ரோஷமாக கூறியதாவது: நமது நாட்டில் பயங்கரவாத தாக்குதல்கள் நடைபெறுவதற்கு பாகிஸ்தான் மட்டுமே காரணம். பாகிஸ்தானை வீழ்த்துவதற்கு தேவையான பலம் நம்மிடம்
உள்ளது.
மேலும் இந்த பயங்கரவாத தாக்குதல் என்பது தற்செயல் நிகழ்வு அல்ல. பிரதமர் சவூதி அரேபியா சென்ற நிலையில், அமெரிக்க அதிபர் இந்தியாவுக்கு சுற்றப்பயணம் செய்யும் வேளையில் நடந்துள்ளது. இதன்மூலம் பயங்கரவாதிகள் உரத்த செய்தியை நமக்கு அனுப்பி உள்ளனர். உலகம் முழுவதும் கவனத்தை திசைதிருப்பவும், ஜம்மு காஷ்மீரில் அதிகரித்து வரும் அமைதியை சீர்க்குலைக்கவும் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதனால் தான் வெளிநாட்டு தலைவர் இந்தியா வந்தபோது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தற்போது காஷ்மீரில் முழு அமைதி திரும்பி அடுத்தக்கட்ட முன்னேற்றத்துக்கான காலம் வருவதை நாம் அனைவரும் பார்க்க வேண்டும். ஆனால் தற்போதைய தாக்குதல் அத்தகைய முன்னேற்றத்துக்கு சவால் விடுக்கும் வகையில் உள்ளது.
நாங்கள் இந்திய ராணுவத்தை சேர்ந்தவர்கள். பயங்கரவாதிகள் என்று தவறாக நினைக்க வேண்டாம் என்று நம் வீரர்கள் பொதுமக்களிடம் கூறும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பாகிஸ்தானை தாக்க வேண்டிய சரியான தருணம். அதற்கான பலம் அனைத்தும் நம்மிடம் உள்ளது'' என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
-
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஐஎஸ்ஐ தீவிரவாதிகளின் புது சதி.. இந்திய அரசியலுக்குள் ஊடுருவ திட்டம்.. அதிர வைக்கும் பயங்கர பிளான்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications