குஜராத் கடற்பகுதியில் பிடிபட்ட பாகிஸ்தான் படகு.. 400 கோடி மதிப்பிலான 77 கிலோ ஹெராயின் சிக்கியது
டெல்லி: குஜராத் கடற்பகுதியில் இருந்த பாகிஸ்தான் நாட்டிற்குச் சொந்தமான படகில் இருந்து சுமார் ரூ 400 கோடி மதிப்பிலான 77 கிலோ ஹெராயின் போதைப் பொருட்களை இந்தியக் கடற்படையினர் பறிமுதல் செய்தனர்.
இந்தியாவுக்குச் சொந்தமான கடற்பகுதியின் மூலம் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்கள் தொடர்ந்து போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வருவதாகக் கடந்த சில காலமாகவே தகவல்கள் வெளியாகி வருகின்றனர்.
இந்தச் சூழலில் பாகிஸ்தான் நாட்டிற்குச் சொந்தமான படகின் மூலம் பல கிலோ ஹெராயின் போதைப் பொருள் கடத்தப்படுவதாகப் பாதுகாப்புப் படையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

பாகிஸ்தான் படகு
இந்தத் தகவலின் அடிப்படையில் இந்தியக் கடலோர காவல் படையினரும், குஜராத் தீவிரவாதத் தடுப்புப் படையினரும் இணைந்து திங்கள்கிழமை காலை திடீர் சோதனையில் ஈடுபட்டனர். குஜராத் மாநிலத்திற்கு ஒட்டியுள்ள கடற்பகுதிகளில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டது. அப்போது சுமார் 35 கடல் மைல் தொலைவில் அல் ஹூசைனி என்ற பெயருடைய படகு ஒன்று குஜராத் கடற்பகுதிக்குள் வருவதைக் கடலோர பாதுகாப்புப் படையினர் கவனித்துள்ளனர்.

400 கோடி ரூபாய்
இதையடுத்து, அந்தப் படகைச் சுற்றி வளைத்த பாதுகாப்புப் படையினர், அந்த படகில் சோதனை செய்த போது அதில் 77 கிலோ ஹெராயின் போதைப்பொருள் இருந்தது கண்டுபிடித்தனர். இதன் மதிப்பு மட்டும் சுமார் 400 கோடி ரூபாய் ஆகும். மேலும், அந்த படகில் இருந்த பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த 6 பேரையும் பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர்..

யார் அவர்கள்
இதையடுத்து அவர்களைக் குஜராத்தின் ஜகு கடற்கரைக்கு அழைத்து வந்துள்ள பாதுகாப்புப் படையினர், அடுத்த கட்ட விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளது. அந்த படகு பாகிஸ்தானின் கராச்சி துறைமுகத்தில் இருந்து கிளம்பியுள்ளதாகவும் குறிப்பிட்ட ரேடியோ சிக்னல் மூலம் அவர்கள் சிலரை தொடர்பு கொள்ள முயன்றுள்ளதாகவும் குஜராத் பயங்கரவாத ஒழிப்பு படையினர் தெரிவித்துள்ளனர். அதாவது கராச்சி துறைமுகத்தில் இருந்து 6 மைலுக்கு அப்பால் வந்த பிறகு, இந்த ஹெராயின் போதைப்பொருள் அந்த படகில் ஏற்றப்பட்டுள்ளது.

பஞ்சாப் தாதா
பாகிஸ்தானைச் சேர்ந்த கடத்தல்காரர் ஹாஜி ஹசன் மற்றும் ஹாஜி ஹாசம் ஆகியோரை இந்த போதைப்பொருளை அனுப்பியுள்ளனர். பஞ்சாபில் இருக்கும் சில நிழல் உலக தாதாவுக்கு இந்த போதைப்பொருள் அனுப்பப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது. அதேநேரம் போதைப் பொருள் கடத்தும் பாகிஸ்தான் படகை இந்தியக் கடற்படை பிடிப்பது இது முதல் முறை இல்லை.

முதல்முறை இல்லை
முன்னதாக கடந்த ஏப்ரல் மாதம் பாகிஸ்தான் படகில் கடத்தி வரப்பட்ட சுமார் ரூ 300 கோடி மதிப்பிலான 33 கிலோ ஹெராயின் இந்தியக் கடற்படையினரால் பிடிக்கப்பட்டது. கடந்த 2018 ஆகஸ்ட் முதல் 2021 டிசம்பர் வரை மட்டும் இந்தியக் கடற்படையினரால் பாகிஸ்தானில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ 4,600 கோடி மதிப்பிலான 920 கிலோ போதைப் பொருள் பிடிக்கப்பட்டுள்ளது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications