திடீரென முடங்கிய டிவி சேனல்! 2000+ தளங்கள் முடக்கம்.. நுபர் சர்மா விவகாரம்! இந்தியா மீது சைபர் போர்
டெல்லி: நுபர் சர்மா விவகாரம் தொடர்பாக இந்தியா மீது ஹேக்கர்கள் சைபர் தாக்குதலைத் தொடங்கி உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
பாஜகவின் செய்தித் தொடர்பாளராக இருந்த நுபுர் சர்மா, டிவி நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில் இஸ்லாமிய இறைத் தூதர் நபிகள் நாயகம் குறித்து சில சர்ச்சை கருத்துகளைத் தெரிவித்தார்.
இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில், அவர் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார். இதே விவகாரத்தில் மற்றொருவர் நிரந்தரமாக நீக்கப்பட்டார்.

நுபர் சர்மா
இருப்பினும், இந்த விஷயம் ஓய்ந்தபாடு இல்லை. கடந்த மாதம் தான் ராஜஸ்தானின் உதய்பூர் என்ற ஊரில் கன்ஹையா லால் என்ற டெய்லர் நுபர் சர்மாவுக்கு ஆதரவாகக் கருத்து பதிவிட்டதாக் கூறி படுகொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய கொலையாளிகள் சில மணி நேரத்திலேயே கைது செய்யப்பட்டனர். இருப்பினும், ராஜஸ்தானில் முழுமையாக அமைதி திரும்ப சில நாட்கள் வரை ஆனது.

ஹேக்கர்கள்
மலேசியா மற்றும் இந்தோனேசியாவைச் சேர்ந்த ஹேக்கர்கள், நுபுர் ஷர்மாவின் கருத்துக்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்தியாவுக்கு எதிராக சைபர் வாரை நடத்தி உள்ளனர். இதனை அகமதாபாத் குற்றப்பிரிவு போலீசார் உறுதி செய்துள்ளனர். ஹேக்கர் குழுக்களான டிராகன் ஃபோர்ஸ் மலேசியா மற்றும் ஹேக்டிவிஸ்ட் இந்தோனேசியா ஆகியவை தான் இந்த சைபர் தாக்குதலைத் தொடங்கி உள்ளன.

முஸ்லிம் ஹேக்கர்கள்
அது மட்டுமின்றி உலகெங்கும் உள்ள முஸ்லிம் ஹேக்கர்கள் இந்தியா மீது சைபர் தாக்குதல் நடத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர். அகமதாபாத்தின் சைபர் கிரைம் போலீசார் இது தொடர்பாக மலேசியா மற்றும் இந்தோனேசிய அரசுகளுக்குக் கடிதம் எழுதி உள்ளனர். மேலும், இது குறித்து இன்டர்போலுக்கும் லுக்அவுட் நோட்டீஸ் அனுப்புமாறு கடிதம் எழுதியுள்ளனர்.

டிவி சேனல்
தானே காவல்துறை, ஆந்திரப் பிரதேச காவல்துறை மற்றும் அசாமில் உள்ள ஒரு செய்தி சேனல் உட்பட 2000க்கும் மேற்பட்ட இணையதள பக்கங்கள் ஹேக் செய்யப்பட்டுள்ளன. செய்தி ஒளிபரப்பிக் கொண்டு இருக்கும் போதே, அந்த செய்தி சேனல் திடீரென பிளாக் அவுட் ஆனது. மேலும், அதில் பாகிஸ்தானின் கொடியும் தோன்றியது. சேனலின் கீழ் பகுதியில் "நபிகள் நாயகத்தை மதிக்க வேண்டும்" என்று ஓடியது. மேலும், revolution PK அமைப்பால் ஹேக் செய்யப்பட்டதாகவும் அதில் போடப்பட்டு இருந்தது.

நுபர் சர்மா தனிப்பட்ட விவகாரங்கள்
மேலும், சைபர் குற்றவாளிகள் சர்மாவின் தனிப்பட்ட விவரங்கள், முகவரி உள்ளிட்டவற்றை ஆன்லைனில் பரப்பி உள்ளது. நுபுர் சர்மா உட்பட பலரது ஆதார் அட்டை மற்றும் பான் கார்டு விவரங்களும் ஆன்லைனில் கசிந்துள்ளன. இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video

நடவடிக்கை
ஹேக்கர் குழுக்கள் தொடர்ச்சியாக பல்வேறு இணையதள பக்கங்களை ஹேக் செய்து வருகின்றனர். மேற்கொண்டு வேறு நிறுவனங்களின் தளங்களை ஹேக் செய்யாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
-
முரசொலி நிலம் வழக்கு: “புகார் அளித்தவர் பட்டியலினத்தவர் இல்லை”- ஐகோர்ட்டில் திமுக தரப்பு வைத்த வாதம் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான்












Click it and Unblock the Notifications