‛எனக்கு நீ வேண்டும்’.. பாகிஸ்தான் சமையல்காரரால் அலறிய இந்திய பெண்.. தூதரக அதிகாரி வீட்டில் இப்படியா?
டெல்லி: டெல்லியில் பாகிஸ்தான் தூதரக உயரதிகாரியின் வீட்டில் வேலை செய்த பெண்ணை ஆசைக்கு இணங்கும்படி தொடர்ந்து வலியுறுத்தியதோடு பாலியல் தொல்லை கொடுக்க முயன்றதாக பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த சமையல்காரர் மீது பரபரப்பான புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் பாகிஸ்தான் சென்றுள்ள சமையல்காரரை கைது செய்வதற்கான நடவடிக்கையை தொடங்கி உள்ளனர்.
டெல்லியில் பல்வேறு நாடுகளின் தூதரக அலுவலகம் அமைந்துள்ளது. அதோடு தூதரக அதிகாரிகள் அங்கேயே வசித்து கொண்டு பணியாற்றி வருகின்றனர். அந்த வகையில் பாகிஸ்தான் நாட்டின் தூதரக உயரதிகாரியான சாத் அகமது வராய்ச் என்பவரின் இல்லம் என்பது டெல்லியில் திலக் மார்க் பகுதியில் உள்ளது.

அதிகாரி சாத் அகமது வராய்ச்சின் வீட்டில் பாகிஸ்தானின் நாட்டை சேர்ந்த மினாஜ் உசேன் (வயது 54) என்பவர் சமையல்காரராக பணியாற்றி வருகிறார். அதேபோல் நம் நாட்டை சேர்ந்த பெண் ஒருவரும் அங்கு வீட்டு வேலை செய்து வருகிறார். குடும்ப கஷ்டத்தின் காரணமாக அவர் அங்கு வீட்டு வேலைகளை செய்து வருகிறார். இந்த பெண் தூதரக அதிகாரியின் வீட்டின் ஒருபக்கத்தில் உள்ள வீட்டு வேலைக்காரர்களுக்கான அறையில் தங்கி பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் தான் கடந்த பிப்ரவரி மாதம் முதல் சமையல்காரர் மினாஜ் உசேனின் நடவடிக்கை என்பது மாற தொடங்கியது. அதாவது அவர் வீட்டு வேலை செய்யும் இந்திய பெண்ணை தவறான கண்ணோட்டத்தில் பார்க்க தொடங்கி உள்ளார். அதுமட்டுமின்றி அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்றுள்ளார். அதாவது வீட்டில் யாரும் இல்லாத நிலையில் மினாஜ் உசேன், அந்த பெண்ணிடம் பேசி தனது ஆசைக்கு இணங்கும்படி வலியுறுத்தி வந்துள்ளார்.
ஆனால் அந்த பெண் அவரை விட்டு விலகி சென்றுள்ளார். அதோடு தொடர்ந்து தொல்லை கொடுத்தால் உயரதிகாரியிடம் தெரிவிப்பதாக கூறியுள்ளார். ஆனாலும் கூட மினாஜ் உசேன் திருந்தவில்லை. பெண்ணிடம் அத்துமீறி பாலியல் தொல்லை கொடுக்க முயற்சித்துள்ளார்.
இதனால் பயந்துபோன அந்த பெண் சம்பவம் குறித்த தூதரக அதிகாரியான சாத் அகமது வராய்ச்சிடம் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து அவர் மினாஜ் உசேனை எச்சரித்துள்ளார். அதுமட்டுமின்றி பக்ரித் பண்டிகையை காரணமாக வைத்து அவரை பாகிஸ்தானுக்கு அனுப்பி உள்ளார். அதன்பிறகு பாகிஸ்தான் தூதரகம் சார்பில் அந்த பெண் வீட்டு வேலையில் இருந்து எந்த முன்னறிவிப்பும் இன்றி நீக்கப்பட்டுள்ளார். பணி நீக்கம் பற்றி கேட்டதற்கு தங்கியுள்ள இடத்தை விட்டு ஜூன் 30ம் தேதிக்குள் வெளியேறும்படி கூறியுள்ளது.
இதனால் அந்த பெண் மன உளைச்சலுக்கு ஆளானார். இதற்கிடையே தான் பாகிஸ்தான் சென்ற சமையல்காரர் மினாஜ் உசேன் மீண்டும் அங்கு வந்து பணி செய்துள்ளார். இது அவருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. அதாவது பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த சமையல்காரர் மினாஜ் உசேனை காப்பாற்ற தன்னை வேலையில் இருந்து நீக்கியதாக அவர் எண்ணினார். இதையடுத்து அந்த பெண் சம்பவம் தொடர்பாக கடந்த ஜூன் 28ம் தேதி திலக் மார்க் போலீசில் சமையல்காரர் மினாஜ் உசேனுக்கு எதிராக புகாரளித்தார். இந்த புகாரை தொடர்ந்து போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இதனால் மினாஜ் உசேன் கைது செய்யப்படும் நிலை ஏற்பட்டது. இதுபற்றி அறிந்த பாகிஸ்தான் தூதரகம் மீண்டும் மினாஜ் உசேனை பாகிஸ்தானுக்கே அனுப்பி உள்ளது. இத்தகைய சூழலில் தான் சம்பவம் தொடர்பாக டெல்லி திலக் மார்க் போலீசார் விசாரணை மேற்கொண்டு மினாஜ் உசேனை கைது செய்வதற்கான நடவடிக்கையை தொடங்கி உள்ளது.
மேலும் மினாஜ் உசேன், பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தாலும் அவர் மீது தூதரகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்படாமல் அவரை சொந்த நாட்டுக்கு அனுப்பியிருப்பது என்பது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. அதோடு மினாஜ் உசேனின் குற்ற செயலை மறைத்து அவரை காப்பாற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டனரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதுபற்றி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications