இந்தியாவுடன் இணையும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்? ராஜ்நாத் சிங் சொன்னதை கவனிச்சீங்களா
டெல்லி: "பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK)மக்கள் இந்திய குடும்பத்தின் ஒரு பகுதியினர். அவர்கள் தாமாக முன்வந்து இந்தியாவின் முக்கிய நீரோட்டத்துக்குத் திரும்பும் நாள் வெகு தொலைவில் இல்லை" என்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
நம் நாட்டுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே கடந்த 7 ம் தேதி முதல் 10ம் தேதி வரை கடும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் நம்மிடம் அடிவாங்கிய பாகிஸ்தான் சரணடைந்தது. நம் நாட்டின் ஏவுகணை தாக்குதலில் பாகிஸ்தானின் 9 பயங்கரவாத முகாம்கள் காலியாகின. அதேபோல் ராணுவ தளம் விமான தளம் என்று மொத்தம் 12 இடங்கள் கடும் சேதமடைந்தன.

இந்த தாக்குதலில் நிலைக்குலைந்துபோன பாகிஸ்தான் ‛‛நாங்கள் உங்களை தாக்கமாட்டோம். தயவு செய்து தாக்குவதை நிறுத்துங்கள்'' என்று கெஞ்சியது. இதையடுத்து நம் நாடு மோதலை கைவிட்டது. தற்போது எல்லையில் அமைதி நிலவி வருகிறது.
இருப்பினும் பயங்கராதிகளுக்கு பாலூட்டி வளர்க்கும் பாகிஸ்தானை நம்ப முடியாது. எப்போது வேண்டுமானாலும் பயங்கரவாதிகளை நம் நாட்டுக்குள் அனுப்பலாம் என்பதால் எல்லையில் கண்காணிப்பு பணிகள் தீவிரமாக்கப்பட்டுள்ளது.
நம் நாட்டுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையேயான மோதலுக்கு முக்கிய காரணம் என்பது காஷ்மீர் தான். நமக்கு சொந்தமான காஷ்மீரை பாகிஸ்தான் உரிமை கொண்டாடி வருகிறது. மேலும் நம்மிடம் இருக்கும் காஷ்மீரையும் கைப்பற்ற பயங்கரவாதிகளை வைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. அப்படியான ஒரு தாக்குதல் தான் கடந்த மாதம் 22ம் தேதி பஹல்காமில் நடந்தது. இப்படி பாகிஸ்தான் பயங்கரவாதிகளை வைத்து அச்சுறுத்தினாலும் நம் நாடு ஒருபோதும் பயப்பட்டது இல்லை. இனியும் பயப்படபோவது இல்லை.
பாகிஸ்தானின் பயங்கரவாத செயல்களுக்கு உடனடியாக நம் நாடும் உரிய பதிலடியை கொடுத்துள்ளது. அதுமட்டுமின்றி பாகிஸ்தான் வசம் உள்ள ஆக்கிரமிப்பு காஷ்மீரை எப்படியாவது நம் நாட்டுடன் இணைக்க வேண்டும் என்பது மத்திய அரசின் மிக முக்கிய குறிக்கோளாக உள்ளது. இதனால் தான் நம் நாட்டுடன் சிந்து நதிநீரை பெறுவது தொடர்பாக சமாதான பேச்சுவார்த்தைக்கு துடிக்கும் பாகிஸ்தானிடம், ஆக்கிரமிப்பு காஷ்மீர் பற்றி மட்டுமே பேசலாம் என்று அதிரடியாக அறிவித்துள்ளது.
இதற்கிடையே தான் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் நம்நாட்டுடன் சேரும் நாள் வெகு தூரத்தில் இல்லை என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியிருப்பது அதிக கவனத்தை பெற்றுள்ளது. டெல்லியில் சிஐஐ (CII or Confederation of Indian Industry)வணிக உச்சி மாநாடு நேற்று நடந்தது. இதில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
‛‛இந்திய அரசு தனது யுக்தி மற்றும் பயங்கரவாதத்துக்கு எதிரான பதிலை மறுவடிவமைப்பு செய்து மறுவரையறை செய்துள்ளது. பாகிஸ்தான் உடனான பேச்சுவார்த்தை என்பது பயங்கரவாதம் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறித்து மட்டுமே இருக்கும். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் நம்முடையது. அங்குள்ள மக்கள் நம்முடைய மக்கள். அவர்கள் நமது குடும்பத்தின் ஒரு பகுதியினர் என்று நான் நம்புகிறேன்.
புவியியல் ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் இன்று அவர்கள் நம்மிடம் இருந்து பிரிக்கப்பட்டு இருக்கலாம். ஆனால் அங்குள்ள நமது சகோதரர்கள் ஒருநாள் அவர்களின் ஆன்மாவின் குரலை கேட்டு இந்தியாவின் முக்கிய நீரோட்டத்துக்கு திரும்புவார்கள் என்று நாங்கள் முழு நம்பிக்கை கொண்டுள்ளோம்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பெரும்பாலான மக்கள் இந்தியாவுடன் ஆழமான தொடர்பை உணர்கிறார்கள். அவர்களில் சிலர் மட்டுமே தவறாக வழிநடத்தப்பட்டுள்ளனர். இந்தியா எப்போதும் இதயங்களை இணைப்பது பற்றி பேசுகிறது. அன்பு, ஒற்றுமை மற்றும் உண்மையின் பாதையில் நடப்பதன் மூலம், நமது சொந்தப் பகுதியான பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரும் திரும்பி வந்து, நான் இந்தியா, நான் திரும்பி வந்துவிட்டேன் என்று கூறும் நாள் வெகு தொலைவில் இல்லை.
பயங்கரவாதத்தை ஊக்குவிப்பது ஒருபோதும் செலவை குறைக்காது அது மிகப் பெரிய விலையை கேட்கும் என்பதையும் பாகிஸ்தான் இப்போது உணர்ந்திருக்கும். சிந்தூர் நடவடிக்கையின்போது, நமது தளங்களும் அமைப்புகளும் தங்கள் வலிமையை காட்டியதால், இந்தியாவின் உள்நாட்டு அமைப்புகள் முழு உலகையும் ஆச்சரியப்படுத்தி உள்ளன. இன்று, நாம் போர் விமானங்கள் அல்லது ஏவுகணை அமைப்புகளை மட்டும் உருவாக்கவில்லை, மேலும் புதுயுக போர் தொழில்நுட்பத்துக்கும் தயாராகி வருகிறோம்'' என்றார். இதன்மூலம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள் இந்தியாவின் ஒரு பகுதி தான். அவர்கள் இந்தியாவுடன் இணையலாம் என்ற மெசேஜை ராஜ்நாத் சிங் அனுப்பி உள்ளார். அதுமட்டுமின்றி ‛ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கைக்கு பிறகு ராஜ்நாத் சிங் இப்படி பேசி உள்ளதால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை கைப்பற்ற மத்திய அரசு வேறு திட்டம் எதுவும் வைத்துள்ளதா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
-
"பில் கட்டக் கூட காசு இல்லையா?" கம்பி நீட்டிய பாகிஸ்தான்.. இது எவ்வளவு பெரிய அசிங்கம் தெரியுமா -
பாகிஸ்தான் சட்டையை பிடிக்கும் அமீரகம்! "அந்த ₹25,000 கோடியை உடனே திருப்பி தாங்க.." எகிறும் நெருக்கடி -
இந்தியாவுக்கு வந்து இருக்கோம்.. பயத்துடன் இருந்த பாகிஸ்தான் பெண்! கடைசியில் என்ன ஆச்சு தெரியுமா? -
அனைத்து ஊழியர்களுக்கும் ஐபோன் 17 Pro Max-ஐ கிப்ட் கொடுத்த சீன நிறுவனம்! இந்தியாவின் நிலைமையை பாருங்க -
50 ஆண்டுகளில் நடக்காத ஒன்று.. தென் மாநிலங்களுக்கு தண்டனையா! 1971 vs 2026.. அனல் பறக்கும் அரசியல்! -
அடுத்த தலைமுறைக்கான 'டிஜிட்டல் தங்கம்'.. உலகையே கண்ட்ரோலில் எடுக்கும் சீனா.. அப்போ இந்தியா எங்கே? -
இந்தியாவில் முதல்முறை! சிறந்த பணியிட மகிழ்ச்சி விருதுகள் அறிமுகம்! ஹர்ஷ் கோயங்கா தலைமையில் மெகா டீம் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு... தண்ணீர் ஊற்றி சரி செய்யும் டெலிவரி ஊழியர்! கொடுமையை பாருங்க! -
"எல்லை மீறி போறீங்க.." டெல்லி சாலைகளில் ஓடும் டிரம்ப் ஆட்டோக்கள்.. அப்படி என்ன காரணம் தெரியுமா? -
நீ கைய குடு பங்கு! அமெரிக்கா முட்டி மோத.. சத்தமில்லாமல் இந்தியா பார்த்த வேலை! தோள் கொடுத்த ரஷ்யா! -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி












Click it and Unblock the Notifications