பாகிஸ்தான் இப்படி செய்யும் என்று நினைக்கவில்லை.. உள்துறை அதிகாரிகள் அதிர்ச்சி.. புதிய கட்டுப்பாடு!
பாகிஸ்தான் தொடர்பான பிரச்சார வீடியோக்கள் சில இந்தியா முழுக்க பரவி வருவது மத்திய உள்துறை அமைச்சகத்தை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
Recommended Video
டெல்லி: பாகிஸ்தான் உருவாக்கிய காஷ்மீர் தொடர்பான பிரச்சார வீடியோக்கள் சில இந்தியா முழுக்க பரவி வருவது மத்திய உள்துறை அமைச்சகத்தை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அதிகாரத்தை இந்தியா கடந்த சில வாரங்கள் முன்பு நீக்கியது. இதனால் இந்தியா பாகிஸ்தான் இடையே கசப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.
இந்த நிலையில் குஜராத் வழியாக பாகிஸ்தான் கமாண்டோக்கள் இந்தியாவிற்குள் நுழைய வாய்ப்பு உள்ளதாக மத்திய அரசுக்கு உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதற்கு மத்தியில் மத்திய அரசை வேறு ஒரு விஷயம் கவலைக்கு உள்ளாக்கி உள்ளது.

ஜம்மு காஷ்மீர்
ஜம்மு காஷ்மீர் பிரச்சனை குறித்து பாகிஸ்தான் நிறைய பிரச்சார வீடியோக்களை உருவாக்கி வருகிறது. காஷ்மீரில் இந்திய ராணுவம் எப்படி அத்துமீறுகிறது, அங்கு மக்கள் எப்படி கொடுமை படுத்தப்படுகிறார்கள், காஷ்மீரிகள் எப்படி துன்பங்களை அனுபவிக்கிறார்கள் என்று வீடியோக்கள் உருவாக்கப்பட்டு வருகிறது.

முக்கியம்
மிக முக்கியமாக இதில் சில வீடியோக்கள் பொய்யானது என்பது குறிப்பிடத்தக்கது. ஆம், பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் வைத்து இருக்கும் காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவத்தினர் இந்திய ராணுவத்தின் உடையில் மக்களை தாக்குகிறார்கள். பின் அதை வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிடுகிறார்கள் என்று புகார் எழுந்துள்ளது.

எப்படி உள்துறை
ஆனால் உள்துறை அமைச்சகத்திற்கு இது கூட பிரச்சனையாக இல்லை. இந்த வீடியோக்கள் தற்போது நாகலாந்து வரை சென்று இருப்பதுதான் பிரச்சனையாக மாறி உள்ளது. ஆம் வடகிழக்கு மாநிலங்களில் நிறைய புரட்சி குழுக்கள் இருக்கிறது. முக்கியமாக நாகலாந்து மக்கள் மாநில அந்தஸ்து கேட்டு போராடி வருகிறார்கள்.

யார் எல்லாம்
இப்படி புரட்சி குழுக்கள், எழுத்தாளர்கள் வரை இந்த வீடியோ சென்று சேர்ந்துள்ளது. இது மற்ற மாநிலங்களிலும் வேகமாக பரவி வருவது உள்துறை அமைச்சகத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. வெளிநாடுகளிலும் இந்த வீடியோக்கள் வைரலாகி வருகிறது.

காஷ்மீர் வீடியோ
இந்த நிலையில் காஷ்மீர் தொடர்பான தவறான வீடியோக்களை இணையத்தில் இருந்து அகற்ற மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. பாகிஸ்தான் இப்படி செய்யும் என்று நினைக்கவில்லை என்று உள்துறை அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். அதேபோல் இந்த வீடியோக்களை ஷேர் செய்யும் நபர்களை கண்காணிக்கவும் மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.












Click it and Unblock the Notifications