பாக். உளவாளிகள் செய்யும் காரியம்! "இந்த" நம்பரிலிருந்து கால் வந்தால் அலர்ட்! இந்திய ராணுவம் வார்னிங்
டெல்லி: இந்தியா பாகிஸ்தான் இடையேயான மோதல் கடந்த வாரம் நடந்தது. அப்போது இந்தியாவுக்கு எதிராகப் பாகிஸ்தான் பல்வேறு தந்திரங்களைப் பயன்படுத்தியது. அப்படி தான் இந்திய பாதுகாப்புத் துறை அதிகாரிகளைப் போல தங்களைக் காட்டிக்கொள்ளும் பாகிஸ்தான் உளவாளிகள் பொதுமக்களைத் தொடர்பு கொள்வதாக இந்திய பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்தியா பாகிஸ்தான் இடையே கடந்த சில வாரம் மோதல் போக்கு தொடர்ந்தது. ஆபரேஷன் சிந்தூர் வெற்றியைப் பொறுக்க முடியாமல் பாகிஸ்தான் அத்துமீறித் தாக்குதல் நடத்தியது. அதற்கு இந்தியாவும் தக்க பதிலடி கொடுத்தது. பாகிஸ்தானின் ராணுவ முகாம்களைக் குறிவைத்து இந்தியா தாக்குதல் நடத்தியது. இதைப் பாகிஸ்தான் சற்றும் எதிர்பார்க்கவே இல்லை.

பாகிஸ்தான் உளவாளிகள்
இதே நிலை தொடர்ந்தால் பாதிப்பு மோசமாக இருக்கும் எனக் கருதி பாகிஸ்தான் மோதலை முடிவுக்குக் கொண்டு வரத் தூதுவிட்டது. இந்தியாவும் அதை ஏற்கவே மோதல் முடிவுக்கு வந்தது. அதேநேரம் மோதல் இருந்தபோது பாகிஸ்தான் பல்வேறு தந்திரங்களை இந்தியாவுக்கு எதிராகப் பயன்படுத்தியது. ஆனால், எதுவும் வேலை செய்யவில்லை. இதற்கிடையே மோதல் இருந்த போது பாகிஸ்தான் செய்த மற்றொரு விஷயம் குறித்து முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது பாகிஸ்தானின் உளவுத்துறை அதிகாரிகள் இந்திய பாதுகாப்பு அதிகாரிகளைப் போல நடித்துள்ளனர். ஆபரேஷன் சிந்தூரில் என்ன தான் நடக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள இந்தியாவைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள் மற்றும் பொதுமக்களுக்குப் பாகிஸ்தான் உளவு அதிகாரிகள் கால் செய்துள்ளனர். தங்களை இந்திய பாதுகாப்பு அதிகாரிகள் போலக் காட்டிக்கொண்ட இவர்கள், உளவுத் தகவல்களைச் சேகரிக்க முயல்வதால் எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பாதுகாப்புத் துறை எச்சரிக்கை
மேலும், +91 7340921702 என்ற இந்திய எண்ணிலிருந்து வரும் இதுபோன்ற அழைப்புகளுக்குப் பதிலளிக்க வேண்டாம் என்றும் இந்திய அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர். பல்வேறு ஊடகத்தினருக்கும் இதுபோல கால் சென்றுள்ளது. தங்களைப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் போலக் காட்டிக்கொண்ட இவர்கள், உளவுத் தகவல்களைச் சேகரிக்க முயன்றுள்ளனர்.
முதலில் கால் செய்யும் பாகிஸ்தான் உளவாளிகள், டெல்லியில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக பிரஸ் மீட் நடைபெற உள்ளதாகக் கூறுகிறார்கள். பின்னர், அந்த பிரஸ் மீட்டில் என்ன மாதிரியான கேள்விகளைக் கேட்கவுள்ளீர்கள் என ஆரம்பித்து, அப்படியே மெல்லப் பாகிஸ்தான் தாக்குதலில் இந்தியாவில் எவ்வளவு சேதம் ஏற்பட்டிருக்கும் என நினைக்கிறீர்கள் உள்ளிட்ட கேள்விகளையும் கேட்கிறார்கள்.
வார்னிங்
இது தொடர்பாகப் பாதுகாப்புத் துறை செய்தி தொடர்பாளர் லெப்டினன்ட் கர்னல் சுனீல் பர்த்வால் கூறுகையில், "எச்சரிக்கை: பத்திரிகையாளர்கள் மற்றும் பொதுமக்களுக்குச் சிலர் கால் செய்கிறார்கள். அவர்கள் இந்திய பாதுகாப்பு அதிகாரிகள் போல் நடித்து தகவல்களைச் சேகரிக்க முயல்கிறார்கள். பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரிகள் இந்திய நம்பர் வாட்ஸ்அப் எண்: 7340921702ஐ பயன்படுத்தி, தற்போது நடைபெற்று வரும் ஆபரேஷன் சிந்தூர் பற்றிய தகவல்களைப் பெற முயல்கிறார்கள். தயவுசெய்து இதுபோன்ற முயற்சிகளுக்கு ஏமாறாதீர்கள்" என்று தெரிவித்தார்.
முதல்முறை இல்லை
அதேநேரம் பாகிஸ்தான் இதுபோல செய்வது இது முதல்முறை இல்லை. ஏற்கனவே கடந்த காலங்களில் போர் ஏற்பட்ட போது பாகிஸ்தான் இதுபோல உளவுத் தகவல்களைச் சேகரிக்க முயன்றுள்ளன. ஜம்மு-காஷ்மீரில் பத்திரிகையாளர்களைத் தொடர்பு கொள்ளும் பாகிஸ்தான் உளவாளிகள் தங்களைப் பாதுகாப்புப் படை அதிகாரிகளைப் போலக் காட்டிக்கொண்டு முக்கிய தகவல்களைச் சேகரிக்க முயல்வார்கள். இப்போதும் மீண்டும் அதையே பாகிஸ்தான் முயல்கிறது.
-
அதானிக்கு கிடைத்த மெகா அங்கீகாரம்.. உலகின் அழகான விமான நிலையங்கள் பட்டியலில் 2 இந்திய ஏர்போர்ட்டுகள் -
இந்தியாவில் டெலிகாரம் செயலிக்கு தடை.. ஜூன் 22 வரை யூஸ் செய்ய முடியாது! நீட் லீக் விவகாரத்தில் அதிரடி -
அலறும் சீனா - பாகிஸ்தான்.. இந்தியாவிடம் இனி வாலாட்ட முடியாது.. கைக்கு வந்த LRLACM ஏவுகணை.. வெற்றி -
ஹார்முஸை பத்திரமாக கடந்த முதல் இந்திய டேங்கர் திஷா.. அமைதி ஒப்பந்தம் வந்தவுடனேயே நடந்த மாற்றம்! -
கரப்பான் பூச்சி நிறுவனரை தாக்கிய ஆர்எஸ்எஸ் அமைப்பினர்? திப்கே பகிரங்க குற்றச்சாட்டு.. என்ன நடந்தது -
டாக்டர் சீட்டு இல்லையா? இனி சிரப் வாங்கவே முடியாது.. மத்திய அரசு புதிய கட்டுப்பாடு.. பின்னணி -
வளைகுடா போர் நிறுத்தத்தால் மிடில் கிளாஸ் மக்களுக்கு என்ன லாபம்? சத்தமில்லாமல் மாற போகும் 5 மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு












Click it and Unblock the Notifications