Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திடீரென நெருங்கிய தாலிபான் - இந்தியா.. கண்ணில் வெண்ணெயை ஊற்றி கவனிக்கும் பாகிஸ்தான்.. ஒரே பயம்?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியா ஆப்கானிஸ்தான் இடையே ஏற்பட்டுள்ள நெருக்கத்தை பாகிஸ்தான் தீவிரமாக கண்காணித்து வருகிறதாம். இந்தியாவின் வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி கடந்த வாரம் துபாயில் தற்காலிக ஆப்கானிஸ்தான் வெளியுறவு மந்திரி அமீர் கான் முட்டாக்கியை சந்தித்தார்.

இது இந்தியாவிற்கும் தாலிபான்களுக்கும் இடையிலான நெருக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. அந்தச் சந்திப்பு இரு தரப்பும் எடுத்த தொடர் முயற்சிக்கு பின் நடந்த சந்திப்பு ஆகும். தாலிபான்களுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் மோதல் நடக்கும் நிலையில்தான் இந்த சந்திப்பு நடந்தது. இதனால் இந்தியா ஆப்கானிஸ்தான் இடையே ஏற்பட்டுள்ள நெருக்கத்தை பாகிஸ்தான் தீவிரமாக கண்காணித்து வருகிறதாம்.

taliban pakistan afghanistan

இதனால் எங்கே தங்களுக்கு கூடுதல் நெருக்கடி வருமோ என்று பாகிஸ்தான் அஞ்சுவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்து உள்ளன.

இந்தியா தாலிபான் உறவு:

இந்தியா பாகிஸ்தான் தாலிபான் ஆப்கானிஸ்தானை ஆண்டு வரும் தாலிபான் இந்தியாவிடம் முக்கியமான உதவி ஒன்றை கேட்டு உள்ளது. பாகிஸ்தான் - தாலிபான் இடையே மோதல் நடந்து வரும் நிலையில் தாலிபான் இந்தியாவிடம் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளது.

ஆப்கானிஸ்தியர்களுக்கு விசா வழங்க வேண்டும், அதில் நிலவும் கட்டுப்பாடுகளை களைய வேண்டும் என்று தாலிபான் இந்தியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. ஆப்கானிஸ்தான் தொழிலதிபர்கள், மாணவர்கள் மற்றும் நோயாளிகளுக்கான விசாவை மீண்டும் முறைப்படி வழங்க வேண்டும் என்று தாலிபான் இந்திய அரசாங்கத்திடம் முறையான கோரிக்கையை விடுத்துள்ளது.

துபாயில் ஆப்கானிஸ்தானின் தற்காலிக வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முட்டாகி மற்றும் இந்தியாவின் வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி ஆகியோருக்கு இடையேயான உயர்மட்ட சந்திப்பின் போது இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டது.


ஆப்கானிஸ்தான் மக்களுக்கு ஏன் இந்தியா எளிதாக விசா வழங்குவது இல்லை:

1. அதிகாரப்பூர்வமாக ஆப்கானிஸ்தான் அரசை இன்னும் இந்தியா அங்கீகரிக்கவில்லை: தாலிபான் அரசாங்கத்தை இந்தியா முறையாக அங்கீகரிக்கவில்லை.

2. ஆப்கானிஸ்தானில் இருந்து விசா கோரி வருபவர்கள் குறித்து உளவுத்துறை அடிக்கடி எச்சரிக்கை விடுத்ததும் இதற்கு காரணம்.

3. ஆப்கானிஸ்தான் வழியாக பாகிஸ்தானியர்கள் சிலர் ஊடுருவும் அச்சம் உள்ளது.

இதனால் ஆப்கானிஸ்தியர்களுக்கு எளிதாக விசா கிடைப்பது இல்லை. சமயங்களில் விசா தரப்படுவதே இல்லை. ஆகஸ்ட் 2021 இல் தலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய பிறகு ஆப்கானிஸ்தான் மக்களுக்கு விசா வழங்க இந்தியா கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது. 'இ-எமர்ஜென்சி எக்ஸ்-மிஸ்க்' பிரிவின் கீழ் இ-விசாக்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகின்றன. மற்ற விசாக்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டு வருகின்றன.

இந்தியா பாகிஸ்தான் தலிபான் மோதல்:

பாகிஸ்தான் - தாலிபான் இடையே மோதல் நடந்து வரும் நிலையில் தாலிபான் இந்தியாவிடம் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளது.

ஆப்கானிஸ்தான் தாலிபான் - பாகிஸ்தான் இடையே மோதல் ஏற்பட்டு உள்ளது. இந்த மோதலில் தாலிபானுக்கு ஆதரவாக இந்தியா களமிறங்கி உள்ளது. ஏற்கனவே பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத அமைப்புகளை எதிர்ப்பதில் இந்தியா ஆப்கானிஸ்தானை அவ்வப்போது நாடுவதாக வாதம் உள்ளது.

இப்படிப்பட்ட நிலையில்தான் ஆப்கானிஸ்தானுக்கு ஆதரவாக இந்தியா களமிறங்கி உள்ளது. பாகிஸ்தான் இது போன்ற நடவடிக்கைகளை கைவிட வேண்டும். அப்பாவி பொதுமக்கள் மீதான தாக்குதலை நாங்கள் சந்தேகத்திற்கு இடமின்றி கண்டிக்கிறோம். பாகிஸ்தானின் உள்நாட்டு தோல்விகளுக்கு அண்டை நாடுகளை குற்றம் சாட்டுவது பழைய வழக்கம். பாகிஸ்தான் அண்டை நாடுகள் மீது தாக்குதல் நடத்துவதை எக்காரணம் கொண்டு ஏற்றுக்கொள்ளவே முடியாது என்று இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

கண்டனம் :

தாலிபான் மீதான பாகிஸ்தானின் தாக்குதல்களை ஆப்கானிஸ்தான் அரசு கடுமையாக கண்டித்து உள்ளது.

பாகிஸ்தானின் வான்வழித் தாக்குதலைக் கண்டித்த ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சகம், இஸ்லாமிய எமிரேட் ஆஃப் ஆப்கானிஸ்தான் மீதான இந்த தாக்குதலை ஏற்றுக்கொள்ள முடியாது. குழந்தைகள், பெண்கள், குடும்பங்களை குறி வைத்து தாக்கி உள்ளனர். இது மிருகத்தனமான தாக்குதல். இதை ஏற்றுக்கொள்ள முடியாது. இதுபோன்ற ஒருதலைப்பட்ச நடவடிக்கைகள் எந்தவொரு பிரச்சனைக்கும் தீர்வாகாது.

இதை ஆப்கானிஸ்தான் ஒரு போதும் ஏற்றுக்கொள்ளாது. நாங்கள் இதற்கு பதிலடி கொடுக்காமல் இருக்க மாட்டோம். இந்த கோழைத்தனமான செயலுக்கு பதிலடி கொடுப்போம். எங்கள் பகுதிகளை பாதுகாப்பதே எங்களின் நோக்கம். அதற்காக எந்த எல்லைக்கும் செல்வோம். எங்கள் எல்லைக்குள் நுழைந்து தாக்குதல் நடத்துவதை ஏற்றுக்கொள்ள மாட்டோம். இதற்கு உரிய பதிலடி தருவோம் என்று ஆப்கானிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், கைபர் பக்துன்க்வாவின் பஜூர் மாவட்டத்தில் உள்ள சலர்சாய் பகுதியில் இருக்கும் பாகிஸ்தான் ராணுவ தளத்தை தாலிபான் கைப்பற்றி உள்ளது. தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் (TTP) படையினர் மூலம் பாகிஸ்தானின் இந்த ராணுவ தளம் கைப்பற்றப்பட்டு உள்ளது. டிசம்பர் 30, 2024 அன்று காலை பாகிஸ்தானின் ராணுவ தளத்தை கைப்பற்றியதாக TTP கூறியுள்ளது. இந்தப் பகுதியில் பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினரை குறிவைத்து தாலிபான் படையினர் களமிறக்கப்பட்டதாகவும்.. அந்த தாக்குதலில் தாலிபான் வென்றதாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+