சைபர் அட்டாக் டூ அணு ஆயுதம் வரை.. பாக் வசம் இருக்கும் வாய்ப்புகள்! அடுத்து இதுதான் நடக்கும்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூருக்கு பதிலடி கொடுப்போம் என்று பாகிஸ்தான் கூறியிருக்கிறது. அந்நாடு தற்போது இருக்கும் சூழலில் பதிலடி எந்த மாதிரியாக இருக்கும் என்பதை இந்த செய்தி விவரிக்கிறது.

இந்தியா நடத்திய தாக்குதலில் பயங்கரவாதி மசூத் ஆசாத்தின் குடும்பத்தினர் 10 பேர் கொல்லப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும் பொதுமக்கள் உள்ள பகுதியிலும் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக பாக். குற்றம் சாட்டுகிறது.

pakistan india Pakistan

டிப்ளமேட்டிக் நடவடிக்கை

இது இந்தியாவுக்கான பதிலடி எச்சரிக்கையாகும். அப்படி பதில் தாக்குதல் நடத்தினால், பாக் முதலில் கையில் எடுக்கும் யுக்தி டிப்ளமேட்டிக் நடவடிக்கையாகத்தான் இருக்கும். அதாவது இந்தியா அத்துமீறிவிட்டது என்று ஐநா மற்றும் இஸ்லாமிய நாடுகளின் அமைப்பில் பாகிஸ்தான் முறையீடு செய்யும். இப்படி செய்வதன் மூலம் இஸ்லாமிய நாடுகளை வைத்து இந்தியாவை கண்டிக்க முயற்சிக்கும். ஐநா மூலம் சர்வதேச நெருக்கடியை ஏற்படுத்த முயலும்.

பாக் விமானப்படை

இரண்டாவது ஆப்ஷன், எல்லையை தாண்டி தாக்குதல். கடந்த 2019ல் இது நடந்தது. இந்தியா பாலகோட் தாக்குதலை நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்க பாகிஸ்தான் விமானப்படை 'ஆபரேஷன் ஸ்விப்ட் ரிடோர்ட்' எனும் பதிலடி நடவடிக்கையை மேற்கொண்டது. அந்நாட்டு விமானங்கள் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்றன. அதுபோன்று இந்த முறையும், எல்லை தாண்டிய ஊடுருவல் நடக்கலாம்.

ராணுவ பதிலடி

அந்நாட்டு ராணுவம் 'Full-spectrum deterrence' எனும் கொள்கையை கடைபிடித்து வருகிறது. அதாவது, சிறிய/பெரிய என எந்த தாக்குதல் நடந்தாலும் அதற்கு பதிலடி கொடுக்க ராணுவம் தயார் நிலையில் இருக்கிறது என்பதே இதன் பொருள். வேறு வடிவில் சொல்வதெனில், முழு அளவிலான தடுப்பு என்றும் பொருள் கொள்ளலாம். ஆக, ராணுவம் பதிலடிக்காக காத்திருக்கிறது. எப்போது வேண்டுமானாலும் இது நடக்கலாம்.

அணு ஆயுத தாக்குதல்?

மூன்றாவது ஆப்ஷன், அணு ஆயுதத்தை கையில் எடுக்கலாம். இது கொஞ்சம் ஓவரான ரியாக்ஷன்தான். இருப்பினும் இதற்கும் வாய்ப்பு இருக்கிறது. இப்படி நடந்தால் அது பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். காரணம் அணு ஆயுத தாக்குதல் நடத்தப்படும்போது, எதிரிகள் திருப்பி தாக்க முடியாதவது அடி இருக்க வேண்டும். அந்த அளவுக்கு பாகிஸ்தான் திறன் வாய்ந்ததா? இந்தியாவை ஒரே அடியில் முடக்கிவிட முடியும்மா என்பதெல்லாம் மில்லியன் டாலர் கேள்வி.

சைபர் அட்டாக்

சைபர் தாக்குதல் நான்காவது ஆப்ஷனாக இருக்கிறது. இது வழக்கமாக இருப்பதுதான். இந்திய பெண்கள் மற்றும் அவர்கள் பின்பற்றும் கலாச்சாரம் பற்றி பாகிஸ்தான் நெட்டிசன்கள் அவதூறு பரப்பி வந்தனர். ஆனால் ஆபரேஷன் சிந்தூர் பெண்களின் தலைமையில் நடைபெற்றதையடுத்து இந்த சைபர் புல்லிங் ஓரளவு குறைந்தது. இருப்பினும், பாக் ராணுவம் ஆதரவின் பேரில், இந்திய அரசை குறி வைத்து சைபர் தாக்குதல்கள் நடக்க வாய்ப்பு இருக்கிறது என்று சொல்லப்படுகிறது.

இதெல்லாம் தேவையா?

கடைசி ஆப்ஷன் நேரடி தாக்குதல். எல்லையில் நேரடி தாக்குதலை பாக் ராணுவம் நடத்தலாம். அந்நாட்டின் முப்படைகள் இணைந்து இந்த தாக்குதலை நடத்த வாய்ப்பு இருக்கிறது. ஆனால் இப்போது இருக்கும் பொருளாதார சூழலில் இந்த தாக்குதலை நடத்த பாகிஸ்தான் கொஞ்சம் யோசிக்க வேண்டியிருக்கும்.

அதாவது அந்நாட்டுக்கு தற்போது 131 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு கடன் இருக்கிறது. அதேபோல, அந்நிய செலவானி கையிருப்பு வெறும் 10 பில்லியனுக்கும் கீழே இருக்கிறது. இதை வைத்து வெறும் 2 மாதங்களுக்கு தேவையான பொருட்களை மட்டுமே அந்நாடு இறக்குமதி செய்ய முடியும். பணவீக்கம் 38% ஆகவும், தொழில்துறை சுருக்கம் 10.3 சதவிகிதமாகவும் இருக்கிறது. இந்த சூழலில் போர் எப்படி சாத்தியமாகும்?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+