Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்தியா போரை தொடங்கினால் பாகிஸ்தான் பதிலடியைத் தாங்க முடியாது: பாக். பாதுகாப்பு நிபுணர்கள் மிரட்டல்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஈடுபட்டதற்கான தகவல் வெளியானதைத் தொடர்ந்து, பாகிஸ்தானுடனான அனைத்து உறவுகளையும் இந்தியா நிறுத்தியுள்ளது. பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா எடுத்துள்ள ஐந்து முக்கிய முடிவுகளில், சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்திவைத்ததே மிகவும் முக்கியமானது. இந்த ஒப்பந்தத்தின் கீழ், சிந்து, செனாப், ஜீலம், பியாஸ், ரவி மற்றும் சட்லஜ் நதிகளிலிருந்து பாகிஸ்தான் தண்ணீர் பெற்று வந்தது. இந்த நதிகள் அனைத்தும் இந்தியா வழியாகப் பாகிஸ்தானுக்குச் சென்று, குடிநீர், நீர்ப்பாசனம், மின் உற்பத்தி போன்றவற்றுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்திவைக்கப்பட்டதால் பாகிஸ்தான் கலக்கமடைந்துள்ளது.

எனவே பாகிஸ்தானின் பிரபல பாதுகாப்புத் துறை நிபுணர்கள் பயந்துபோய் இந்தியாவை மிரட்டும் தொனியில் பேசத் தொடங்கிவிட்டனர். இந்தியா போரைத் தொடங்கினால், பாகிஸ்தான் கொடுக்கும் பதிலடியை இந்தியாவால் தாங்க முடியாது என்று கூறி வருகின்றனர்.

pakistan india river kashmir

பாகிஸ்தானின் டிவி சேனலான ARY News நிகழ்ச்சியொன்றில் பேசிய பாகிஸ்தான் பாதுகாப்பு ஆய்வாளர் தாரிக் ரஷீத், "நான் ஒரு ஆபரேஷன்ஸ் மேலாளராக இருந்தபோது, ​​இந்தியாவில் இருந்து ஒரு குண்டு வந்தால், பதிலுக்கு 10 குண்டுகளைப் போடுங்கள் என்று எங்களுக்கு உத்தரவிடப்பட்டது... அவர்கள் அமைதியாகும் வரை தொடர்ந்து சுடுங்கள். எங்கள் பதில் 'பதிலுக்குப் பதில்'" என்று கூறினார்.

அணு ஆயுத மிரட்டல்

சர்வதேச நாணய நிதியத்திடம் (IMF) கடன் வாங்கி பிழைப்பு நடத்துகிறது பாகிஸ்தான். அதேபோல, இந்தியாவுக்கு எதிராக இதுவரை நடந்த அனைத்துப் போர்களிலும் தோல்வியடைந்ததுதான் பாகிஸ்தான் நாடு. ஆனால் தாரிக் ரஷீத்தோ டிவி ஷோவில் நெஞ்சை நிமிர்த்தி உட்கார்ந்தபடி மிரட்டல் விடுத்தார். "இந்தியா ஒரு போரைத் தொடங்கலாம். ஆனால் அந்தப் போர் ஒரு குறிப்பிட்ட போராக இருக்காது. அது இறுதிப் போராக இருக்கும். அதற்கு கடுமையான விளைவுகள் ஏற்படும். அது இந்தியாவின் முழுப் பகுதியையும் கைப்பற்றும் நிலையில்தான் முடியும்" என்று கூறினார்.

pakistan india river kashmir

மேலும் கூறுகையில், "பாகிஸ்தானிடம் அணுசக்தி திறன், தற்காப்புத் தன்மை உள்ளது. அவர்கள் தங்கள் எல்லையைக் கடந்தால், எங்கள் பதில் எங்கள் விருப்பப்படி இருக்கும்... அது மிகவும் ஆபத்தானதாகவும் மிகவும் வேதனையாகவும் இருக்கும் என்பதை நாங்கள் அவர்களுக்குச் சொல்ல வேண்டும். எங்கள் பதில் மோசமாக இருக்கும். அதை நீங்கள் (இந்தியா) தாங்க முடியாது" என்றார்.

தாரிக் ரஷீத் கூறுகையில், பாகிஸ்தான் பலவீனமாகக் கருதப்படக்கூடாது என்பதற்காக இந்தியாவுக்கு வலுவான பதிலடி கொடுக்க வேண்டும் என்றார். பஹல்காம் தாக்குதல் நடந்து பல மணி நேரங்கள் ஆகியும் பாகிஸ்தானின் தொடர்பு குறித்து, இந்தியா இதுவரை எந்த ஆதாரத்தையும் சமர்ப்பிக்கவில்லை என்றும் அவர் கூறினார்.

இந்த நிபுணரின் கருத்துக்கு, பதிலளித்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர், இந்தியாவிடம் உலகில் எந்த நாடுதான் ஆதாரம் கேட்கும். ஏனெனில், இந்தியாவிடம் பணம் உள்ளது. உலகம் அந்த நாட்டுடன் நிறைய வணிகம் செய்கிறது, இத்தகைய சூழ்நிலையில் எந்த நாடும் இந்தியாவிடம், ஆதாரம் கேட்பதில்லை என்று தன் பங்குங்கு புலம்பினார்.

கமர் சீமா என்ன சொன்னார்?

ARY News இன் மற்றொரு நிகழ்ச்சியில் பேசிய பாகிஸ்தானின் பிரபல பாதுகாப்பு ஆய்வாளர் கமர் சீமா, கடந்த முறை போல இந்த முறை பாகிஸ்தான் மீது இந்தியா எந்த வான்வழித் தாக்குதலையும் நடத்தாது என்றார்.

pakistan india river kashmir

கமர் சீமா கூறுகையில், "அவர்கள் தாக்குதல் நடத்தினால், உடனடியாகப் பதிலடி கிடைக்கும் என்பதை அவர்கள் அறிவார்கள். அதனால்தான் இந்த முறை அதைச் செய்ய மாட்டார்கள். உலகம் முழுவதும் இந்த செய்தியை பரப்பி பதற்றத்தை உருவாக்குவார்கள். இதுவரை உலகின் அனைத்துப் பெரிய நாடுகளும், அமெரிக்கா, ரஷ்யா, சவுதி அரேவியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா... இந்தியாவிடம் தங்கள் கண்டனங்களை வரிசையாக பதிவு செய்துள்ளன. இதைத்தான் அவர்கள் விரும்புகிறார்கள். அவர்களின் அடுத்த கட்ட நடவடிக்கை உலகத் தலைவர்களை அழைத்து, தங்களைத் தாங்களே பாதிக்கப்பட்டவர்களாகக் காட்டிக்கொள்வதுதான்" என்றார்.

சீமா மேலும் கூறுகையில், "பாகிஸ்தானில் இந்தியா வான்வழித் தாக்குதல்களை நடத்தாது. ஏனென்றால், அதன் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்படும், கீழே விழும், அபிநந்தன் போல விங் கமாண்டர்கள் பிடிக்கப்படுவார்கள், இதை இந்தியா அறியும். எனவே அவர்கள் இதைத் தவிர்க்க விரும்புவார்கள். அதற்கு பதிலாக அவர்கள் உலகத் தலைவர்களுடன் பேசுவார்கள்" என்றார்.

சிந்து நதி நீர் ஒப்பந்தம்

பஹல்காம் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததற்கும் 17 பேர் காயமடைந்ததற்கும் பாகிஸ்தானைத் தவிர இந்தியாவும் உலக நாடுகளும் துக்கம் அனுசரிக்கின்றன. பாகிஸ்தான் நிபுணர்கள் மட்டும் அசால்டாக கருத்து தெரிவிக்கிறார்கள். சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்திவைப்பதற்கான ஒரு சாக்குப்போக்குதான் பஹல்காம் சம்பவம் என்று கூறுகின்றனர்.

முன்னாள் பாகிஸ்தான் எம்.பி. முஷாத் ஹுசைன் சயீத் கூறுகையில், சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்திவைக்க பஹல்காம் தாக்குதலை இந்தியா ஒரு சாக்குப்போக்காகப் பயன்படுத்துகிறது. ஏனென்றால் இந்தச் சதியின் மூலம் பாகிஸ்தான் மீது அழுத்தம் கொடுக்க இந்தியா விரும்புகிறது என்றார்.

pakistan india river kashmir

சிந்து நதி நீர் ஒப்பந்தம் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான ஒரு இருதரப்பு சர்வதேச ஒப்பந்தம் என்று அவர் கூறினார். மோடி அரசு பாகிஸ்தானுக்குத் தண்ணீர் தருவதை நிறுத்தினால், அது சர்வதேச சட்டங்களை மீறியதாகக் கருதப்படும். அது ஒரு போர் போன்றதாக இருக்கும் என்றும் அவர் கூறினார். அத்துடன், பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா சுமத்தும் பொய்யான குற்றச்சாட்டுகள் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளருக்குத் தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

இந்தியாவின் அதிரடி

சிந்து நதி ஆசியாவின் மிக நீளமான நதிகளில் ஒன்றாகும். செனாப், ஜீலம், பியாஸ், ரவி மற்றும் சட்லஜ் ஆகியவை அதன் துணை நதிகள். இந்த நதிகள் திபெத்தில் உள்ள மானசரோவர் ஏரி, இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள லாஹவுல் ஸ்பிதி, ரோஹ்டாங் கணவாய் ஆகியவற்றிலிருந்து உருவாகி ஜம்மு காஷ்மீர் வழியாகப் பாகிஸ்தானுக்குச் செல்கின்றன.

1960 இல், உலக வங்கியின் உதவியுடன் சிந்து நதி நீர் பங்கீடு தொடர்பாக இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே சிந்து நதி நீர் ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆனால் இந்த ஒப்பந்தம் சர்ச்சைகள் நிறைந்தது. நதிகள் இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்குப் பாய்கின்றன. இதனால் இந்தியா நதிகளின் நீரை நிறுத்திவிடும் என்று பாகிஸ்தான் எப்போதும் அஞ்சியது. பாகிஸ்தானின் விவசாயம் இந்த நதிகளின் நீரைச் சார்ந்துள்ளது. இப்போது, ​​பாகிஸ்தானின் நடவடிக்கைகளால் தொந்தரவுற்ற இந்தியா, அதையே செய்ய முடிவு செய்துள்ளது. இது பாகிஸ்தானை வார்த்தைகள் இன்றித் தவிக்க வைத்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+