இந்திய கடற்படை கப்பலுடன் பாகிஸ்தான் கப்பல் மோதல்.. அரபிக்கடலில் திக் திக் சம்பவம்! என்ன நடந்தது?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: அரபிக்கடலில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த இந்திய கடற்படை கப்பல் மீது பாகிஸ்தான் கப்பல் மோதி அத்துமீறியுள்ளது. பாகிஸ்தான் கப்பல் மோதிய போதும் இந்திய கப்பலுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை. பாதுகாப்பற்ற முறையில் கப்பலை பாகிஸ்தான் செலுத்தியதால் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அரபிக்கடல் பகுதியில் நேற்று இந்திய கடற்படைக்கு சொந்தமான கப்பல் ரோந்து பணிகளில் ஈடுபட்டு வந்தது. வடக்கு அரபிக்கடலில் வழக்கமான ரோந்து பணி நடைபெற்று கொண்டிருந்த போது, இந்திய கடற்படை கப்பலை நோக்கி பாகிஸ்தான் கப்பல் ஒன்று திடீரன வந்துள்ளது. இந்திய கப்பல் இருந்த இடத்தில் இருந்து 220 கிலோ மீட்டர் தொலைவில் கிழக்கு ஒமன் கடல் பகுதியில் சென்று கொண்டிருந்த பாகிஸ்தான் கப்பல், திடீரென அசுர வேகத்தில் தாறுமாறாகவும் பாதுகாப்பற்ற முறையிலும் வந்தாக தகவல்கள் கூறுகின்றன. அப்போதுதான் இந்த மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

Pakistani vessel Collides with Indian naval warship in North Arabian Sea

என்ன நடந்தது?

சர்வதேச கடல் பகுதியில் நடைபெற்ற இந்த மோதலில் இந்திய கப்பலுக்கு சேதம் எதுவும் ஏற்பட்டதாக தெரியவில்லை. இந்திய கடற்படை கப்பல் மீது மோதிய பாகிஸ்தானின் கப்பலின் உண்மையான அடையாளம் தெரியவில்லை. எனினும், பாகிஸ்தானின் ஹுனைன் ரக கொர்வெட் போர்க்கப்பல் என்று தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன. இந்த மோதல் சம்பவம் நடைபெற்ற போது, கடல் சீற்றமாக இருந்ததாகவும்,உடனடியாக இரு கப்பல்களும் அங்கிருந்து நகர்ந்து சென்றதாகவும் கூறப்படுகிறது.

சீற்றமான கடலில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது தெரியாமல், பாகிஸ்தான் கடற்படையினர் ஆக்ரோஷமாகவும், அச்சுறுத்தும் வகையிலும், தொழில்முறையற்ற முறையிலும் நடந்து கொண்டனர் என்றும் தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன. இந்திய கடற்படை கப்பலுடன் பாகிஸ்தான் கப்பல் மோதுவது இது முதல் முறையல்ல. கடந்த 2011 ஆம் ஆண்டு பாகிஸ்தான் கடற்படைக்கு சொந்தமான பாபுர் என்ற கப்பல் ஐஎன்.எஸ் கோதாவரி கப்பலுடன் மோதியது.

இந்தியா கண்டனம்

இந்திய கப்பற்படை கப்பல் மீது பாகிஸ்தானுக்க்கு சொந்தமான கப்பல் மோதிய சம்பவத்தால் கடும் கோபம் அடைந்த இந்தியா, உடனடியாக பாகிஸ்தான் பொறுப்பு தூதருக்கு சம்மன் அனுப்பியுள்ளது. சம்பவம் குறித்து நேரில் வந்து விளக்கம் தருமாறு கோரியுள்ளது. மேலும், சர்வதேச நீர் பகுதியில் பாகிஸ்தான் கப்பலில் செயல் ஏற்றுக்கொள்ள முடியாதது எனவும் தனது கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளது.

ராணுவப் பயிற்சிகள், போர் ஒத்திகைகள் மற்றும் படைகளின் நகர்வுகள் குறித்து முன்கூட்டியே தகவல் தெரிவிப்பது தொடர்பாக இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே 1991-ம் ஆண்டு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் 10-வது பிரிவை நேரடியாக மீறும் வகையில், பாகிஸ்தானின் கடற்படை செயல்பாடு இருப்பதாக இந்தியா தனது கண்டத்தை பதிவு செய்துள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் தடுக்கும் வகையில், இரு நாடுகளுக்கும் இடையிலான ஒப்பந்தங்களின் விதிகளை பின்பற்ற வேண்டும்.

அனைத்து ராணுவப் பிரிவுகளும் உரிய கவனத்துடன் செயல்பட வேண்டியதன் அவசியத்தை பாகிஸ்தான் அதிகாரிகளிடம் தெரிவியுங்கள் என்றும் அந்த நாட்டின் பொறுப்பு தூதரிடம் இந்தியா எடுத்துரைத்துள்ளது. அரபிக்கடலில் இந்திய கப்பல் மீது தாறுமாறாக வந்து பாகிஸ்தான் கப்பல் மோதிய சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+