பான் 2.0ல் வரும் மேஜர் மாற்றங்கள்.. ஏன் முக்கியம்.. யாருக்கெல்லாம் பயன் தரும்!
டெல்லி: மத்திய அரசு இப்போது பான் 2.o என்ற திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. பான் கார்டுகளை முழுக்க முழுக்க டிஜிட்டல் மயமாக்குவதே இதன் நோக்கமாகும். மத்திய அரசு இதற்கு ஒப்புதல் அளித்துள்ள நிலையில், இத்திட்டம் யாருக்குப் பயன்படும். இதன் முக்கிய நோக்கம் என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
மத்திய அரசு டிஜிட்டல் சார்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. டிஜிட்டல் முறையைச் செயல்படுத்துவதன் மூலம் எந்தவொரு திட்டத்தின் செயல்திறனும் அதிகரிக்கிறது.. செலவும் குறைகிறது.

இதனால் மத்திய அரசு அனைத்து துறைகளையும் திட்டங்களையும் டிஜிட்டல் மயமாக்க முயன்று வருகிறது. இதற்கிடையே இப்போது பான் கார்டுகளை டிஜிட்டல் மயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
பான் கார்டு: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு நேற்று நவ. 25ம் தேதி PAN 2.0 திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது. வரி செலுத்துவோருக்குக் கூடுதல் வசதிகளைத் தர தற்போதுள்ள பான்/ டான் முறையை மாற்றியமைக்கும் நோக்கத்தில், இந்தத் திட்டத்திற்காக மத்திய அரசு ₹1,435 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது.
அஸ்வினி வைஷ்ணவ்: இது தொடர்பாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில், "நடுத்தர வர்க்கத்தினர், சிறு வணிகர்களுக்கு பான் கார்டு ரொம்பவே முக்கியமான ஒன்றாகும். இந்த பான் 2.o திட்டம் மக்களுக்கு மிகவும் பயனுள்ள ஒன்றாக இருக்கும். இதற்கு மத்திய அரசு இப்போது ஒப்புதல் அளித்துள்ளது.. இது முழுக்க முழுக்க டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இயங்கும்" என்றார்.
அப்கிரேட்: PAN 2.0 என்பது நிரந்தர கணக்கு எண் (PAN) அமைப்பின் முக்கியமான அப்கிரேட் ஆகும். வரி செலுத்துவோருக்கு எல்லா விஷயங்களிலும் தடையற்ற டிஜிட்டல் கட்டமைப்பை உருவாக்குவதே இதன் நோக்கமாகும். இந்த திட்டத்தில் பான் மற்றும் டான் கார்டுகளின் கோர் மற்றும் நான்- கோர் சேவைகள் ஒரே இடத்தில் ஒருங்கிணைக்கப்படும். இது முழுக்க முழுக்க டிஜிட்டல் முறையில் இருக்கும். மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டத்துடன் இது இணைக்கப்படும்.
இதில் பான் தொடர்பான அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் ஒருங்கிணைந்த போர்டல் இருக்கும். யூசர்களின் தரவைப் பாதுகாக்க மேம்படுத்தப்பட்ட இணையப் பாதுகாப்பைக் கொண்டிருக்கும். மத்திய அரசு தொடர்பான அனைத்து டிஜிட்டல் தொடர்புகளுக்கான பொதுவான ஒரே அடையாளமாக பான் கார்ட்டை வைத்திருப்பதே இதன் நோக்கமாகும்.
யாருக்கு பலன் தரும்: பான் தொடர்பான அனைத்து சேவைகளும் மிக விரைவாக வரி செலுத்துவோருக்குக் கிடைக்கும். டேட்டா சார்ந்த பிழைகள் அனைத்தும் குறைக்கப்படும். மேலும், தற்போதுள்ள பான் கார்டுகள் இலவசமாகவே அப்கிரேட் செய்யப்படும். பான் 2.o டிஜிட்டல் மயமாக்கப்பட்டதாக இருக்கும் என்பதால் சுற்றுச்சுழல் மாசும் இருக்காது.
இதில் இடம்பெற உள்ள மிக முக்கிய வசதி என்றால் அது பான் க்யூஆர் கோட்கள் தான். வரி செலுத்துவோர் விவரங்களை விரைவாக அணுகவும் சரிபார்க்கவும் இது உதவும். நாம் எப்படி இப்போது யுபிஐ க்யூஆர் கோட் மூலம் நொடிகளில் கூகுள் பே மூலம் பணம் அனுப்புகிறோமோ.. அதேபோல நொடிகளில் பான் யூசர்களின் தரவுகளை செக் செய்ய முடியும். மேலும், பான் தொடர்பான அனைத்து சேவைகளையும் ஒருங்கிணைத்து ஒரே இடத்தில் வழங்கப்படுவதால் அதை அணுகவும் ஈஸியாக இருக்கும்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications