பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க செப்.30 வரை அவகாசம் நீட்டிப்பு.. மத்திய அரசு
டெல்லி : ஆதார் எண்ணை பான் கார்டுடன் இணைக்க மேலும் 3 மாதம் அவகாசம் வழங்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஆதார் எண்ணை பான் கார்டுடன் இணைக்க செப்டம்பர் 30 வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 30ம் தேதியுடன் அவகாசம் முடிவடையவுள்ள நிலையில், ஆதார் எண்ணை பான் கார்டுடன் இணைக்க செப்டம்பர் 30ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய இணை அமைச்சர் அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார்.

வருமான வரி சட்டப்படி 2021 வரும் செப்டம்பர் 30ம் தேதிக்குள் பான் கார்ட் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும். ஆதார் - பான் இணைக்கவில்லை என்றால் உங்கள் வாடிக்கையாளர்களை அறிந்து கொள்ளுங்கள் என்கிற கே.ஓய்.சி செல்லாது. மேலும், பான் எண்ணும் செயல்பாட்டில் இருக்காது.
பான் கார்டு, ஆதார் கார்ட் இணைப்பு எப்படி: உங்கள் மொபைல் நம்பர் மூலமே எளிதாக இணைக்கலாம். மொபைலில் இருந்து SMS மூலமும் இணைக்கலாம். நீங்கள் 567678 அல்லது 56161 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்புவதன் மூலம் இணைத்து கொள்ளலாம். உங்கள் மொபைல் எண்ணிலிருந்து இருந்து UIDPAN 12 இலக்க ஆதார் எண், 10 இலக்க பான் நம்பரை டைப் செய்து எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும்.
ஆன்லைன் மூலமாகவும் இணைக்கலாம். ஆன்லைனில் இணைக்க https://eportal.incometax.gov.in/iec/foservices/#/pre-login/bl-link-aadhaar இந்த லிங்கில் உங்களின் பான் மற்றும் ஆதார் எண், பெயர், பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் ஆகியவற்றை நிரப்ப வேண்டும். ஒரு முறை பயன்படுத்தும் பாஸ் வேர்ட் (ஓடிபி) வரும். அதைப் பதிவு செய்த பின்னர் லிங்க் ஆதார் என்பதை க்ளிக் செய்து இணைக்கலாம். ஆன்லைனிலோ, எஸ்.எம்.எஸ் மூலமாகவே இணைக்க தெரியாவிட்டால் அல்லது முடியாவிட்டால், நீங்கள் நீங்கள் பான் சேவை மையத்துக்கு நேரில் சென்றும் இணைக்கலாம்.












Click it and Unblock the Notifications