ஒடிசா டூ சிங்கப்பூர் சென்ற பனாமா நாட்டு சரக்கு கப்பல் நடுக்கடலில் மூழ்கியது! 22 பேர் மாயம்

Subscribe to Oneindia Tamil

புவனேஷ்வர்: ஒடிசாவில் இருந்து புறப்பட்டு சென்ற பனாமா நாட்டு கப்பல், வங்காள விரிகுடா கடலில் மூழ்கியுள்ளது. கப்பலில் பயணம் செய்த 2 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில் மாயமான 22 பேரை மீட்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. ஒடிசாவில் உள்ள பாராதீப் கடற்கரையில் இருந்து 240 நாட்டிக்கல் மைல் தொலைவில் கப்பல் மூழ்கியுள்ளது.

ஒடிசா கடலோர பகுதியில் இருந்து 240 நாட்டிக்கல் மைல் தொலைவில் பனமா நாட்டு கொடியுடன் சென்ற கப்பல் மூழ்கியுள்ளது. எம்.வி ஓசேன் வின்னர் என்ற அந்த கப்பல், ஒடிசாவில் இருந்து இரும்பு தாதுக்களை ஏற்றிக்கொண்டு சிங்கப்பூர் நோக்கி புறப்பட்ட நிலையில் திடீரென மூழ்க தொடங்கியுள்ளது.

Panama-flagged cargo ship sank 240 nautical miles off the Odisha coast while enroute singapore

கப்பல் மூழ்கும் தகவல் கிடைத்ததும் நிகழ்விடத்திற்கு இந்திய கடலோர காவல் படை விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பனாமா நாட்டு சரக்கு கப்பலில் 24 சிப்பந்திகள் இருப்பதாக கடலோர காவல் படை வட்டாரங்கள் கூறுகின்றன. அவர்களை மீட்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

கப்பலில் உள்ள சிப்பந்திகளில் இந்தியர்கள் யாரும் இல்லை என்று முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது. தற்போது கிடைத்துள்ள தகவலின் படி, 20 பேர் சீனாவை சேர்ந்தவர்கள் என்றும் மூன்று பேர் மியான்மர், ஒருவர் வங்கதேசத்தை சேர்ந்தவர் எனவும் தெரியவந்துள்ளது. இன்று காலை 11.48 மணிக்கு பனாமா நாட்டு கப்பலுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டதாக ஸ்ரீ விஜயபுரத்தில் உள்ள கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திற்கு தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து உடனடியாக இந்திய கடலோர காவல் படை மற்றும் இந்திய கடற்படை இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளது. கடலோர காவல் படையின் வரத் மற்றும் அன்மோல் கப்பல் மீட்பு பணிக்காக அனுப்பப்பட்டுள்ளது. விஜித் என்ற கப்பலும் தற்போது கூடுதல் பணிக்காக அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறது.

இது குறித்து ஒடிசாவை சேர்ந்த மூத்த போலீஸ் அதிகாரி கூறியதாவது:- கப்பலில் இருந்து எத்தனை சிப்பந்திகள் மீட்கப்பட்டுள்ளனர் என்ற விவரம் எங்களுக்கு தெரியவில்லை. கப்பலில் இருந்த பெரும்பாலான சிப்பந்திகள் சீன நாட்டை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது. வெள்ளிக்கிழமை கப்பல் ஒடிசாவில் இருந்து புறப்பட்டு சென்றுள்ளது" என்றார்.

எம்.வி ஓசோன் வின்னர் கப்பல் மூழ்கி வரும் பகுதியில் நிற்கும் பிற கப்பல்களுகும் கடலோர காவல் படை அலர்ட் செய்துள்ளது. மீட்பு பணியில் அந்த கப்பல்களும் உதவி அளிப்பதற்காக அலர்ட் செய்து இருக்கிறோம் என்று காவல்துறை உயர் அதிகாரி கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+