போதும் போதும்.. முன்கூட்டியே முடிவடைந்த நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டம்! தேதி சொல்லாமல் ஒத்திவைப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் திட்டமிட்டதை விட முன்கூட்டியே முடிவுக்கு வந்துள்ளது. இந்நிலையில் கடந்த மாதம் 22ம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஆகஸ்ட் மாதம் 12ம் தேதி வரை நடக்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில் முன்கூட்டியே இன்றுடன் முடித்து கொள்ளப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் முடிவடைந்த நிலையில் 2024-25ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் ஜூலை 22 ம் தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 12ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

parliament budget session lok sabha

அதன்படி கடந்த மாதம் 22ம் தேதி மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. கடந்த மாதம் 23ம் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

இந்த பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாகின. வருமான வரி செலுத்துவதில் பழைய வரி முறையில் மாற்றம் செய்யப்படவில்லை. புதிய வரி விதிப்பு முறையில் உச்சவரம்புகளில் சின்ன சின்ன மாற்றங்கள் செய்யப்பட்டது. மேலும் தங்கம், வெள்ளி, பிளாட்டினம் மீதான இறக்குமதி வரி குறைக்கப்பட்டுள்ளது. இதனால் தங்கம், வெள்ளி, பிளாட்டினத்தின் விலை மளமளவென சரிந்துள்ளது.

இதையடுத்து மத்திய பட்ஜெட் மீதான விவாதங்கள் நடந்தது. அதன்பிறகு நாடாளுமன்றத்தில் ராஜ்யசபா, லோக்சபா அமர்வுகள் தொடர்ந்து நடந்து வந்தன. நேற்றைய தினம் வக்பு வாரியத்துக்கான சட்ட திருத்த மசோதாவை மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கிரண் ரிஜூஜூ தாக்கல் லோக்சபாவில் தாக்கல் செய்தார். இந்த மசோதா வக்பு வாரியத்தின் அதிகாரத்தை குறைக்கும் நோக்கத்தில் இருப்பதாக எதிர்க்கட்சி எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து லோக்சபாவில் அந்த மசோதா நிறைவேற்றப்படாமல் நாடாளுமன்ற கூட்டு குழுவின் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் இன்றயை தினம் நாடாளுமன்ற கூட்டு குழுவில் இடம்பெறும் 31 எம்பிக்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டன. இத்தகைய சூழலில் தான் இன்றுடன் லோக்சபா மற்றும் ராஜ்யசபாக்கள் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டன. வரும் 12ம் தேதி வரை நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடக்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில் இன்றுடன் முன்கூட்டியே முடிவுக்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+