நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்.. செப்டம்பர் 14ம் தேதி தொடங்க வாய்ப்பு!
கொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுக்க சட்டசபை, நாடாளுமன்ற கூட்டங்கள் நடக்காமல் தள்ளி போய் வருகிறது. கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களில் கடும் கட்டுப்பாடுகளுடன் சட்டசபை கூட்டங்கள் நடந்தது.
டெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்ட தொடர் செப்டம்பர் 14ம் தேதி தொடங்க வாய்ப்புள்ளது என்று தகவல்கள் வருகிறது. பாராளுமன்ற அலுவல்களுக்கான மத்திய அமைச்சரவை கமிட்டி இதற்கான பரிந்துரையை அளித்ததாக கூறப்படுகிறது.
கொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுக்க சட்டசபை, நாடாளுமன்ற கூட்டங்கள் நடக்காமல் தள்ளி போய் வருகிறது. கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களில் கடும் கட்டுப்பாடுகளுடன் சட்டசபை கூட்டங்கள் நடந்தது. இந்த நிலையில் நாடாளுமன்ற மழைக்கால கூட்ட தொடருக்கான ஏற்பாடுகள் தற்போது நடந்து வருகிறது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்ட தொடர் செப்டம்பர் 14ம் தேதி தொடங்க வாய்ப்புள்ளது என்று தகவல்கள் வருகிறது. இந்த கூட்டத்தொடர் அக்டோபர் 1ம் தேதி வரை நடக்கும் என்று கூறப்படுகிறது. மொத்தம் 18 நாட்கள் இந்த கூட்டம் நடக்கும் என்கிறார்கள்.
கொரோனா பாதிப்பு, சோதனை, சமூக இடைவெளி உள்ளிட்ட விஷயங்களை கருத்தில் கொண்டு கூட்டத்திற்கான ஏற்பாடுகளை செய்ய இருக்கிறார்கள். அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான பாராளுமன்ற அலுவல்களுக்கான மத்திய அமைச்சரவை கமிட்டி இதற்கான பரிந்துரையை அளித்ததாக கூறப்படுகிறது.
ராஜ்யசபா சபாநாயகர் வெங்கையா நாயுடு மற்றும் லோக்சபா சபாநாயகர் ஓபி பிர்லா ஆகிய இருவரிடமும் அமைச்சரவை அதிகாரிகள், செயலாளர்கள் இது தொடர்பாக ஆலோசனை செய்துள்ளனர். சமூக இடைவெளியுடன் இருக்கைகளுக்கு இடையே இடம் விட்டு அமரும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
இதனால் அமைச்சர்கள், எம்பிக்களின் இடம் இந்த கூட்டத்தொடரில் மாற்றப்பட வாய்ப்புள்ளது. பிரதமர் மோடிக்கு அருகே யாரும் அமர வாய்ப்பு இல்லை. இது தொடர்பாக அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications