மணிப்பூர் விவகாரம்.. தொடர்ந்து முடங்கும் நாடாளுமன்றம்.. இரு அவைகளும் மதியம் வரை ஒத்திவைப்பு
டெல்லி: நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் மணிப்பூர் விவகாரம் காரணமாகத் தொடர்ந்து முடங்கி வருகிறது. இன்றும் அவை கூடியது முதலே எதிர்க்கட்சிகள் இது குறித்து முழக்கமிட்டதால் இரு அவைகளும் பிற்பகல் வரை ஒத்திவைக்கப்பட்டது.
நடப்பு ஆண்டின் ஏற்கனவே பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவடைந்துள்ள நிலையில், இப்போது அங்கே மழைக்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது.
இந்தக் கூட்டத்தொடர் தொடங்கும் முன்பு தான் மணிப்பூர் குறித்த வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. நாட்டை உலுக்குவதாக இந்தச் சம்பவம் இருந்தது.

இந்த சம்பவம் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து முடக்கி வருகின்றனர். சில மசோதாக்கள் மட்டும் எதிர்க்கட்சிகளின் பங்கேற்பு இல்லாமல் தாக்கலானது.
மணிப்பூர் விவகாரம் குறித்துக் குறுகிய விவாதம் நடத்த மத்திய அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளது. இருப்பினும், மணிப்பூர் விவகாரம் குறித்து நீண்ட விவாதம் நடத்த வேண்டும் என்றும் அப்போது பிரதமர் மோடி அவையில் இருக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இதற்கு மத்திய அரசு ஒப்புக்கொள்ளாததால் நாடாளுமன்றம் தொடங்கி முடங்கி வருகிறது. இதுவரை 8 நாட்களும் நாடாளுமன்றம் முடங்கிய நிலையில், 9ஆம் நாள் அமர்வு இன்று கூடியது. அப்போது எதிர்க்கட்சிகள் மணிப்பூர் விவகாரம் குறித்து கோஷமிட வேண்டும் என தொடர்ந்து முழங்கி வந்தன. இதையடுத்து லோக்சபா பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்?












Click it and Unblock the Notifications