ரூல் 267.. மணிப்பூர் வன்முறையை விவாதிக்க மறுக்கும் ராஜ்யசபா! விடாத எதிர்கட்சிகள்! ஏன்? பரபர பின்னணி
டெல்லி: மணிப்பூரில் 2 பழங்குடியின பெண்கள் நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக இழுத்து செல்லப்பட்ட நிலையில் வன்முறை குறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கூறியதால் நாடாளுமன்றத்தின் இரு சபைகளும் முடங்கின. ராஜ்யசபாவில் ரூல் 267ன் கீழ் விவாதிக்க எதிர்க்கட்சிகள் கூறி வரும் நிலையில் அதற்கு தலைவர் ஜெகதீப் தன்கர் மறுப்பது பெரிய பிரச்சனையாக மாறிய நிலையில் அதன் பின்னணி பற்றிய விபரம் வெளியாகி உள்ளது.
மணிப்பூரில் பாஜக ஆட்சி நடக்கிறது. முதல்வராக பீரன் சிங் உள்ளார். இங்கு பழங்குடியின மக்கள் அதிகளவில் உள்ளனர். மலைப்பகுதியில் குக்கி எனும் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு மைத்தேயி எனும் இன மக்கள் உள்ளனர்.

இந்நிலையில் மைத்தேயி மக்கள் தங்களை பழங்குடியினர் பட்டியல் சேர்க்க வலியுறுத்தி வருகின்றனர். இதற்கு குக்கி இன மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுதொடர்பாக இருதரப்பினருக்கும் கடந்த மே மாதம் 3ம் தேதி மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் வன்முறையாக மாறிப்போனது.
இந்த வன்முறையின் ஒருபகுதியாக கடந்த மே மாதம் 4ம் தேதி பைனோம் கிராமத்தில் குக்கி பழங்குடியினத்தை சேர்ந்த 2 பெண்களை ஒரு கும்பல் நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக இழுத்து சென்றது. இதுதொடர்பான வீடியோ வெளியாகி நாட்டையை உலுக்கி உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் தொடங்கிய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்தது.
மணிப்பூர் வன்முறை பற்றி நாடாளுமன்றத்தில் விவாதிக்க எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன. மணிப்பூர் வன்முறை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கியுள்ளன. மழைக்கால கூட்டத்தொடர் கடந்த நேற்று முன்தினம் மற்றும் நேற்று துவங்கியது. இந்த 2 நாளும் மணிப்பூர் வன்முறை பற்றி விவாதிக்க எதிர்க்கட்சிகள் கூறிய நிலையில் அதனை சபை தலைவர்கள் ஏற்கவில்லை. இதனால் 2 நாட்களும் நாடாளுமன்றத்தின் பெரும்பாலான நேரம் என்பது விவாதமின்றி முடங்கியது.
இந்த முடக்கத்துக்கு முக்கிய காரணம் என்னவென்றால் மணிப்பூர் வன்முறையை எந்த விதியின் கீழ் விவாதிப்பது என்பது தான். இதற்காக மணிப்பூர் வன்முறை பற்றி விவாதிக்க நாடாளுமன்றத்தின் லோக்சபா (மக்களவை)மற்றும் ராஜ்யசபா (மாநிலங்களவை) ஆகியவற்றில் எதிர்க்கட்சி எம்பிக்கள் ஒத்திவைப்பு நோட்டீஸ் வழங்கி உள்ளனர்.
இந்த ஒத்திவைப்பு நோட்டீஸ் என்பது நாடாளுமன்றத்தில் அனைத்து அலுவல்களையும் ஒத்திவைத்துவிட்டு குறிப்பிட்ட பிரச்சனை பற்றி விவாதிப்பதை குறிக்கும். இந்த ஒத்திவைப்பு நோட்டீஸ் என்பது நாடாளுமன்ற விதிகளின் கீழ் வழங்கப்படும். மணிப்பூர் வன்முறை தொடர்பாக லோக்சபாவில் எதிர்க்கட்சிகள் 193வது விதியின் கீழ் ஒத்திவைப்பு நோட்டீஸ் வழங்கின.
இதனால் லோக்சபாவில் பெரிய அளவில் பிரச்சனை இல்லை. மணிப்பூர் வன்முறை குறித்து விவாதம் செய்யவும் அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ஆனால் ராஜ்யசபாவில் ஒத்திவைப்பு நோட்டீஸ் என்பது விதி 267 ன் கீழ் விவாதிக்க வேண்டும் என கூறுகின்றனர். இது தான் அங்கு பிரச்சனையாக உள்ளது.
அதாவது மணிப்பூர் விவகாரம் பற்றி விவாதிக்க நேற்று முன்தினம் 8 கட்சிகளின் 12 எம்பிக்கள் விதி 267 ன் கீழ் விவாதிக்க வேண்டும் என கூறினர். ஆனால் 176ன் கீழ் விவாதிக்க ஒப்புக்கொண்டது. விதி 176 என்பது ஒரு குறிப்பிட்ட பிரச்சனை பற்றி இரண்டரை மணிநேரத்துக்குள்ளான விவாதத்தை மட்டும் அனுமதிக்கும். ஆனால் விதி 267 என்பது நாடாளுமன்றத்தில் குறிப்பிட்ட நாளில் அனைத்து அலுவல் பணிகளையும் நிறுத்திவிட்டு ஒரு பிரச்சனையை பற்றி நாள் முழுவதும் விவாதிக்க அனுமதிக்கிறது.
இவ்வாறு செய்வதன் மூலம் நாள் முழுவதும் விவாதம் நடத்தலாம். இதனால் தான் 267 விதியின் கீழ் மணிப்பூர் விவகாரத்தை விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் ராஜ்யசபாவில் விடாப்பிடியாக உள்ளனர். ஆனால் ராஜ்யசபா தலைவரான ஜெகதீப் தன்கர் விதி 267 ன் கீழ் விவாதிக்க ஒப்புக்கொள்ளவில்லை என கூறப்படுகிறது.
ஏனென்றால் இந்த விதி 267 என்பது மிகவும் அரிதாகவே பயன்படுத்தப்படும். இதற்கு முன்பு அதாவது 1990ல் இருந்து இதுவரை விதி 267 ன் கீழ் மொத்தம் 11 முறை விவாதம் நடந்துள்ளது. கடைசியாக கடந்த 2016ல் முகமது ஹமீது அன்சாரி ராஜ்யசபா தலைவராக இருந்தபோது பணமதிப்பிழப்பு குறித்து ராஜ்யசபாவில் விவாதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக மணிப்பூர் வன்முறை பற்றி விவாதிக்க தயாராக இருக்கிறோம். மத்திய உள்துறை அமைச்சர் பதிலளிப்பார் என நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறியும் எதிர்க்கட்சிகள் விவாதம் வேண்டும் என கூறி வருவது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications