ஜூலை 20ல் துவக்கம்! நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தேதி அறிவிப்பு.. புதிய கட்டடத்தில் விவாதம்
டெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடருக்கான தேதியை மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அறிவித்துள்ளார். அதன்படி ஜூலை 20ம் தேதி தொடங்கும் கூட்டத்தொடர் ஆகஸ்ட் மாதம் 11ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இதுதொடர்பாக மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி இன்று ட்விட்டர் பதிவு ஒன்றை செய்துள்ளார். அந்த பதிவில், ‛‛ 2023ம் ஆண்டுக்கான நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் மாதம் 11ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்த கூட்டத்தொடரின்போது அலுவல் மற்றும் இதர விஷயங்கள் தொடர்பான ஆக்கப்பூர்வமான விவாதங்கள் நடைபெறும். இந்த விவாதங்களுக்கு அனைத்து கட்சியினரும் பங்களிக்க வேண்டும்'' என தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் புதிதாக கட்டப்பட்ட நாடாளுமன்ற கட்டடத்தை கடந்த மே மாதம் 29ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைத்தார். அந்த கட்டடம் திறக்கப்பட்டபோது அடுத்த நாடாளுமன்ற கூட்டம் புதிய கட்டடத்தில் தான் நடக்கும் என பலரும் தெரிவித்தனர். அதன்படி ஜூலை 20ம் தேதி தொடங்கி நடைபெற உள்ள நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications