இனி எம்பிக்களை நெருங்க முடியாது! வரும் கண்ணாடி கவசம்.. நாடாளுமன்ற பாதுகாப்புக்கு புதுதிட்டம்.. அடடே
டெல்லி: நாடாளுமன்றத்தின் பார்வையாளர் மாடத்தில் இருந்து இன்று 2 பேர் திடீரென்று குதித்து மஞ்சள் நிற புகையை வெளியிடும் ஸ்பிரே அடித்து தாக்குதல் நடத்தினர். இதுதொடர்பாக பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் நாடாளுமன்றத்தில் எம்பிக்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி உள்ள நிலையில் மத்திய அரசு அலர்ட்டாகி புதிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.
கடந்த 2001ம் ஆண்டு டிசம்பர் மாதம் 13ம் தேதி நாடாளுமன்றத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதன் 22ம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது. இந்நிலையில் தான் இன்று லோக்சபாவில் அசம்பாவித சம்பவம் ஒன்று நடந்துவிட்டது.

அதாவது நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் இன்று வழக்கம்போல் தொடங்கியது. லோக்சபா, ராஜ்யசபாவில் நடக்கும் விவாதங்களை பொதுமக்கள் பார்வையாளர் மாடத்தில் இருந்து பார்த்து கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென்று 2 பேர் பார்வையாளர் மாடத்தில் இருந்து லோக்சபா அரங்குக்குள் குதித்தனர். மஞ்சள்நிற ஸ்பிரே அடித்ததோடு எம்பிக்களின் மேஜை மீது ஏறினர். இதனால் எம்பிக்கள் பதறிப்போயினர். இருப்பினும் துணிச்சலாக சில எம்பிக்கள் செயல்பட்டு 2 பேரையும் பிடித்து தர்மஅடி கொடுத்து பாதுகாவலர்களிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் லோக்சபாவுக்குள் நுழைந்து ஸ்பிரே அடித்தவர்கள் கர்நாடகாவின் மைசூரை சேர்ந்த சாகர் சர்மா மற்றும் டி மனோ ரஞ்சன் (வயது 35) என்பது தெரியவந்தது.
அதேபோல் நாடாளுமன்ற வளாகத்தில் ஸ்பிரே அடித்தது ஹரியானா மாநிலம் ஹிசார் பகுதியை சேர்ந்த நீலம் (42) மற்றும் அமோல் ஷிண்டே (25) என்பதும் தெரியவந்தது. இவர்கள் 4 பேரும் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்கள் திட்டமிட்ட லோக்சபா மற்றும் நாடாளுமன்ற வளாகத்தில் ஸ்பிரே அடித்ததும் தெரியவந்தது. இவர்கள் 4 பேரும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் 2 பேர் தலைமறைவாக உள்ளனர். அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்த சம்பவத்துக்கு காங்கிரஸ், திமுக உள்பட பல்வேறு கட்சிகளின் எம்பிக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். நாடாளுமன்றத்தில் இருக்கும் எம்பிக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்குவதில் மத்திய அரசு தவறிவிட்டது. இந்த சம்பவம் என்பது மத்திய அரசின் பாதுகாப்பு குறைபாட்டின் ஒரு பகுதியாகவே நடந்துள்ளது. இதுபற்றி நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும். மத்திய உள்துறை அமைச்சர் லோக்சபா, ராஜ்யசபாக்களில் விளக்கம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தான் நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் என்பது அதிகரிக்க மத்திய அரசு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி முதற்கட்டமாக நாடாளுமன்ற நடவடிக்கைகளை பொதுமக்கள் பார்வையிட அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் எம்பிக்கள், நாடாளுமன்ற பணியாளர்கள், பத்திரிகையாளர்கள் ஆகியோர் நாடாளுமன்றத்துக்குள் செல்ல தனித்தனி நுழைவு வாயில்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மேலும் மக்கள் நாடாளுமன்ற செயல்பாடுகளை பார்வையிட அனுமதிக்கப்படும் பட்சத்தில் அவர்கள் 4வது நுழைவு வாயில் வழியாக மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
மேலும் பார்வையாளர்கள் மாடம் என்பது தற்போது திறந்த நிலையில் உள்ளது. இதனை கண்ணாடி கூண்டு போட்டு மூட முடிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது பார்வையாளர் மாடத்தின் விளிம்பு பகுதியில் கண்ணாடி பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன்மூலம் பார்வையாளர் மாடத்தில் இருந்து பொதுமக்கள் யாரும் லோக்சபா, ராஜ்யசபா அரங்குக்குள் குதிப்பதை தடுக்க முடியும். இதுமட்டமின்றி வரும் நாட்களில் விமான நிலையங்களை போல் ஒருவரின் உடல் முழுவதையும் பரிசோதிக்கும் ஸ்கேன் இயந்திரங்கள் நாடாளுமன்ற வாயில்களில் பொருத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
-
பணிகள் கிட்டத்தட்ட ஓவர்.. இனி 4 வழி இல்லை.. சென்னையின் முக்கிய பகுதியில் மிகப்பெரிய 6 வழி சாலை -
அலர்ட்..! 10000 ரூபாய்க்கு மேல் பணம் அனுப்பினால் 'லாக்'.. ஆர்பிஐ கொண்டு வரும் புது ரூல்ஸ்! -
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
ஐடி ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த TCS.. மாச மாசம் பணம் சொளையா வரப்போகுது! -
சிறகடிக்க ஆசை: மீனாவிடம் முத்து மறைக்கும் உண்மை! விஜயா பற்றி அண்ணாமலைக்கு தெரிந்த பெரிய ரகசியம்! -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
விஜய்யுடன் சேர்ந்து முதல்வராக முயன்ற எடப்பாடி! நான்தான் முறியடித்தேன்.. போட்டு உடைத்த செங்கோட்டையன் -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ஈரான் வேலையை காட்டியது.. ஹார்முஸ்-ல் கப்பல் செல்ல அனுமதி மறுப்பு.. அமெரிக்கா ஷாக்! -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்!












Click it and Unblock the Notifications