ஒரு நாள் முன்னதாக முடிந்த குளிர்காலக் கூட்டத்தொடர்.. 48 மணி நேர விவாதம்.. 10 மசோதாக்கள் நிறைவேற்றம்
டெல்லி: குளிர்காலக் கூட்டத்தொடர் ஒரு நாள் முன் கூட்டியே முடிந்துள்ள நிலையில், இந்தக் கூட்டத்தொடரில் வெறும் 48 மணி நேரம் மட்டுமே விவாதம் நடந்துள்ளதில் அதில் மொத்தம் 10 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கடந்த நவ.29ஆம் தேதி நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியது. அப்போது கடந்த கூட்டத்தொடரில் நாடாளுமன்ற விதிமுறைகளுக்கு எதிராகச் செயல்பட்டதாகக் கூறி 12 ராஜ்யசபா எம்பிகள் சஸ்பென்ட செய்யப்பட்டனர்.
இதை எதிர்த்தும், லக்கிம்பூர் சம்பவம், விவசாயிகள் போராட்டம் ஆகியவற்றை எதிர்த்தும் எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதனால் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் திட்டமிட்ட தேதியைக் காட்டிலும், ஒரு நாள் முன்னதாக, இன்றுடன் (டிச.22) நிறைவடைந்தது.

செயல்பட்ட நேரம்
இந்த நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் மக்களவை செயல்பட வேண்டிய 83.2 மணிநேரத்தில் வெறும் 26.5 மணிநேரம் மட்டுமே விவாதம் நடைபெற்றது. இதர அலுவல் பணிகளுக்காக மக்களவை 37 மணி நேரம் செயல்பட்டுள்ளது. அதேபோல மாநிலங்களவை 45.4 மணி நேரம் செயல்பட்டது. அதில் 21.7 மணி நேரம் மட்டும் புதிய மசோதாக்கள் மீது விவாதங்கள் நடத்தப்பட்டுள்ளது.

48 மணி நேரம் 10 மசோதாக்கள்
நாடாளுமன்றத்தில் இந்தக் குளிர்காலக் கூட்டத்தொடரில் மொத்தம் 48 மணி நேரம் விவாதம் நடத்தப்பட்டுள்ளது. அதில் மொத்தம் 12 புதிய மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே முந்தைய கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்தப்பட்ட இரண்டு மசோதாக்கள் உட்பட மொத்தம் 10 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. நாடாளுமன்றத்தில் பல முக்கிய மசோதாக்கள் குறுகிய நேர விவாதத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன.

வெறும் 2 நிமிடம்
விவசாய சட்டங்களை ரத்து செய்யும் மசோதாவைப் பொறுத்தவரை, மக்களவையில் வெறும் இரண்டு நிமிடமும் மாநிலங்களவையில் 8 நிமிடமும் மட்டுமே விவாதம் நடந்துள்ளது. மிகவும் முக்கியமான செயற்கை கருத்தரிப்பு மசோதா குறித்து மக்களவையில் 3.51 மணி நேரம் நடந்த விவாதத்தில் 18 எம்.பி.க்கள் பங்கேற்றனர். அதேபோல மாநிலங்களவையில் இது தொடர்பாக 1.17 மணி நேரம் நடந்த விவாதத்தில் 14 எம்.பி.க்கள் பங்கேற்றுள்ளனர்.

எந்த மசோதாவுக்கு அதிக விவாதம்
இந்த குளிர்கால கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களில், உயர் நீதிமன்ற மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் (சம்பளங்கள் மற்றும் சேவை நிபந்தனைகள்) திருத்த மசோதா மீது இரு அவைகளிலும் சேர்த்து அதிகபட்சமாக 9.37 மணி நேரம் விவாதம் நடந்துள்ளது. அதில் 27 லோக்சபா எம்.பி.க்களும் 17 ராஜ்யசபா எம்.பி.க்களும் பங்கேற்றுள்ளனர். அடுத்து அணை பாதுகாப்பு மசோதா மீது மீது இரு அவைகளிலும் சேர்த்து 9.1 மணி நேரம் விவாதம் நடந்துள்ளது. அதில் 22 ராஜ்யசபா எம்பிக்களும், 31 லோக் சபா எம்பிகளும் பங்கேற்றனர்.

நாடாளுமன்ற நிலைக்குழு
முக்கியமான சில மசோதாக்கள் மீது குறுகிய நேரம் மட்டுமே விவாதங்கள் நடந்துள்ளன. தேர்தல் சீர்திருத்த மசோதா மீது வெறும் 1.29 மணி நேரம் மட்டுமே விவாதாம் நடந்துள்ளது. ஆதர் கட்டையை வாக்காளர் அடையாள அட்டையை இணைக்கும் இந்த மசோதா குறித்து மக்களவையில் வெறும் 26 நிமிடங்கள் மட்டுமே விவாதம் நடந்துள்ளன. மொத்தம் 10 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், Prohibition Of Child Marriage Amendment Bill, Mediation Bill 2021, The Chartered Accountants- Cost and works accountants and Company secretaries (Amendment) Bill மற்றும் The Biological Diversity Amendment Bill 2021 ஆகிய 4 மசோதாக்கள் நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications