டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நாடாளுமன்றத்தை நடுங்க வைத்த காங்., திமுக.. எதிர்க்கட்சிகள் போராட்டம்.. முதல் நாளே பெரும் அமளி!

குளிர்கால கூட்டத்தொடரில் முதல் நாளே நாடாளுமன்றத்தில் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் முக்கியமாக பிரச்சனைகளை எழுப்பி போராடி வருகிறார்கள்.

Google Oneindia Tamil News

டெல்லி: குளிர்கால கூட்டத்தொடரில் முதல் நாளே நாடாளுமன்றத்தில் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் முக்கியமாக பிரச்சனைகளை எழுப்பி போராடி வருகிறார்கள். பொருளாதார மந்தநிலை, வேலைவாய்ப்பின்மை, காஷ்மீர் பிரச்சனை ஆகியவை குறித்து இவர்கள் குரல் எழுப்பி வருகிறார்கள்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி உள்ளது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்றில் இருந்து டிசம்பர் 13ம் தேதி வரை நடக்க உள்ளது.

பல்வேறு மசோதாக்கள் இந்த கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் பல முக்கிய சட்டங்கள், திட்டங்கள் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. 27 கட்சியை சார்ந்த எம்பிக்கள் இன்றைய கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

இன்று சீர்கேடு

இன்று சீர்கேடு

இந்த நிலையில் நாடாளுமன்றத்தில் இன்று பொருளாதார சீர்கேடு தொடர்பான பிரச்சனை விஸ்வரூபம் எடுத்தது. இந்தியாவில் பொருளாதாரம் மிக மோசமாக இருக்கிறது . வேலைவாய்ப்பு இல்லை. நாளுக்கு நாள் பொருளாதாரம் யாரும் எதிர்பார்க்காத நிலையை அடைந்து வருகிறது. முக்கியமான பொதுத்துறை நிறுவனங்கள் நஷ்டம் காரணமாக தனியாருக்கு அளிக்கப்படுகிறது.

திமுக

திமுக

இதை பற்றி இன்று காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், திமுக, சிவசேனா, கம்யூனிஸ்ட், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் எம்பிக்கள் கடுமையாக குரல் எழுப்பினார்கள். இந்தியாவின் ஜிடிபி தொடங்கி பணமதிப்பு வரை எல்லாம் மோசமாகிவிட்டது என்று கூறி இவர்கள் குரல் எழுப்பினார்கள்.

பெரிய குழப்பம்

பெரிய குழப்பம்

இதனால் அவையில் குழப்பம் நிலவியது. அதேபோல் காங்கிரஸ் எம்பிக்கள் இன்னொரு பக்கம் காஷ்மீர் பிரச்சனையை எழுப்பினார்கள். காஷ்மீரில் முன்னாள் முதல்வர் மற்றும் எம்பி பரூக் அப்துல்லா உள்ளிட்ட தலைவர்கள் வீட்டு சிறையில் வைக்கப்பட்டு இருப்பது தொடர்பாக அவையில் கேள்வி எழுப்பப்பட்டது.

காஷ்மீர்

காஷ்மீர்

இது தொடர்பாக காங்கிரஸ் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வந்தது. காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், திமுக உறுப்பினர்கள் அவைக்கு உள்ளேயே போராட்டம் செய்தனர். காஷ்மீரில் தலைவர்கள் அடைக்கப்பட்டு இருப்பதற்கு எதிராக அவையில் எதிர்க்கட்சிகள் கூச்சல் போட்டனர். இவர்களை அமரும்படி சபாநாயகர் உத்தரவிட்டும் கூச்சல் குழப்பம் தொடர்ந்து நீடித்து வருகிறது.

English summary
Parliament winter session starts with the ruckus: Opponents shouts over Kashmir and Economic slowdown.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X