நாளை முதல் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர்! புயலை கிளப்பும் 'அதானி லஞ்சம்'! பதிலடிக்கு பாஜக ரெடி!
டெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நாளை தொடங்குகிறது. இந்த கூட்டத் தொடரில் வக்பு வாரிய மசோதா உள்ளிட்ட 16 மசோதாக்களை மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அறிமுகப்படுத்துகிறது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை இந்த கூட்டத் தொடரில் மத்திய அரசு தாக்கல் செய்யவில்லை. எதிர்க்கட்சிகளைப் பொறுத்தவரை 'அதானிக்கு அமெரிக்கா பிடிவாரண்ட்' பிறப்பித்த விவகாரத்தை முன்வைத்து பிரளயத்தை ஏற்படுத்தலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம், ஹரியானா, மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தல்களுக்குப் பின்னர் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நாளை தொடங்குகிறது. இந்தக் கூட்டத் தொடர் டிசம்பர் 20-ந் தேதி வரை நடைபெற உள்ளது.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் நாடு முழுவதும் லோக்சபா, சட்டசபை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வகை செய்யும் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா அறிமுகப்படுத்தப்படும் என பிரதமர் நரேந்திர மோடி ஏற்கனவே அறிவித்திருந்தார். ஆனால் தற்போது மத்திய அரசு இந்த மசோதாவை வரும் கூட்டத் தொடரில் தாக்கல் செய்யவில்லை. வக்பு வாரிய சட்ட திருத்தம் உள்ளிட்ட 16 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட இருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்தக் கூட்டத் தொடரில் தொழிலதிபர் அதானிக்கு எதிராக அமெரிக்கா நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ள விவகாரத்தை எதிர்க்கட்சிகள் எழுப்ப திட்டமிட்டுள்ளன. அதானியை உடனே கைது செய்ய வேண்டும் என்பது எதிர்க்கட்சிகளின் கோரிக்கை. அதானியை பிரதமர் நரேந்திர மோடிதான் பாதுகாக்கிறார்; பிரதமர் மோடியே அதானியின் கட்டுப்பாட்டில் இருக்கிறார் என ஏற்கனவே லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டி இருந்தார்.
அதேநேரத்தில் அதானி விவகாரத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கு பாஜக பதிலடி தரவும் தயாராக இருக்கிறதாம். அதானி லஞ்சம் கொடுத்ததே ஆந்திரா, தமிழ்நாடு, சத்தீஸ்கர் மாநில மின்சார வாரிய அதிகாரிகளுக்குதான் எனில்.. தமிழ்நாட்டில் எதிர்க்கட்சியான திமுக, சத்தீஸ்கரில் மற்றொரு எதிர்க்கட்சியான காங்கிரஸ்தானே ஆட்சி செய்கிறது.. திமுக- காங்கிரஸ் ஆட்சிகள்தான் அதானியிடம் லஞ்சம் வாங்கின என பதிலடி தரவும் பாஜக தரப்பு தயாராக இருக்கிறதாம். இதனால் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications