நாளை முதல் நாடாளுமன்றம்- தேர்தல் ஆணையர் நியமன மசோதா முதல் விவாதிக்கப்படப் போகும் லிஸ்ட் ரிலீஸ்!
டெல்லி: லோக்சபா தேர்தலுக்கு முந்தைய செமி பைனல் ஆட்டம் போல தெலுங்கானா, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் சட்டசபை தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகின்றன. மிசோரம் தேர்தல் முடிவுகள் நாளை வெளியாகும். இந்த பரபரப்பான சூழ்நிலையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நாளை தொடங்குகிறது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்னதாக, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களுடனான கூட்டம் நேற்று நடைபெற்றது.

நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தமது தொடக்க உரையில், நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 4-ந் தேதி திங்களன்று தொடங்கும்; இந்தக் கூட்டத்தொடர் டிசம்பர் 22 வெள்ளிக்கிழமை முடிவடையும் என்றார். இந்த கூட்டத்தொடர் 19 நாட்களுக்கு 15 அமர்வுகளைக் கொண்டதாக அமையும் என்று அவர் கூறினார்.
இந்த கூட்டத்தொடரில் உத்தேசமாக 19 சட்ட மசோதாக்கள் மற்றும் 2 நிதி மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு விவாதிக்க அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் பிரகலாத் ஜோஷ்டி தெரிவித்தார்.
நடைமுறை விதிகளின் கீழ் எந்தவொரு பிரச்சினையையும் அவையில் விவாதிக்க அரசு எப்போதும் தயாராக உள்ளது என்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி மேலும் கூறினார். நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் சுமூகமாக நடைபெற அனைத்துக் கட்சித் தலைவர்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். இந்தக் கூட்டத்தில் சட்டம் மற்றும் நீதித் துறை இணையமைச்சரும் (தனிப்பொறுப்பு) நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சருமான அர்ஜூன் ராம் மேக்வாலும் பங்கேற்றார்.
பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களின் கருத்துக்களைக் கேட்ட பின்னர் பேசிய, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அரசியல் கட்சிகள் கூறிய பிரச்சினைகள் குறித்து நாடாளுமன்றத்தின் விதிகளின்படி விவாதிக்க அரசு தயாராக உள்ளது என்று கூறினார்.
மொத்தம் 23 கட்சிகளைச் சேர்ந்த 30 தலைவர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
17-வது மக்களவையின் 14-வது கூட்டத்தொடரிலும், மாநிலங்களவையின் 262-வது கூட்டத்தொடரிலும் விவாதிக்கப்படும் மசோதாக்களின் பட்டியல்
I - சட்ட மசோதா அலுவல்கள்:
1. ரத்து மற்றும் திருத்த மசோதா- 2023, மக்களவையில் ஏற்கெனவே நிறைவேற்றப்பட்டது
2. வழக்கறிஞர்கள் (திருத்த) மசோதா - 2023 மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது
3. பத்திரிகை மற்றும் பருவ இதழ்கள் பதிவு மசோதா - 2023 மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.
4. அரசியலமைப்பு (ஜம்மு காஷ்மீர்) பட்டியல் சாதிகள் உத்தரவு (திருத்தம்) மசோதா - 2023
5. அரசியலமைப்பு (ஜம்மு-காஷ்மீர்) பட்டியல் பழங்குடியினர் ஆணை (திருத்தம்) மசோதா - 2023
6. ஜம்மு-காஷ்மீர் இடஒதுக்கீடு (திருத்த) மசோதா - 2023
7. ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு (திருத்த) மசோதா - 2023
8. பாரதிய நியாய சன்ஹிதா - 2023 எனப்படும் இந்திய நீதித்துறை சட்ட மசோதா - 2023
9. பாரதிய நகரிக் சுரக்ஷா சன்ஹிதா - 2023 எனப்படும் இந்திய குடிமைப் பாதுகாப்புச் சட்ட மசோதா
10. பாரதிய சாக்ஷய அதினியம், 2023 எனப்படும் இந்திய சாட்சியச் சட்ட மசோதா
11. தபால் அலுவலக மசோதா - 2023
12. தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்கள் (நியமனம், பணி நிபந்தனைகள் மற்றும் பதவிக்காலம்) மசோதா - 2023
13. கொதிகலன்கள் மசோதா - 2023
14. இடைக்கால வரி வசூல் மசோதா - 2023
15. மத்திய சரக்கு மற்றும் சேவை வரி (இரண்டாவது திருத்தம்) மசோதா - 2023
16. ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு (திருத்த) மசோதா - 2023
17. யூனியன் பிரதேசங்களின் அரசு (திருத்த) மசோதா - 2023
18. டெல்லியின் தேசிய தலைநகரப் பகுதி சட்டங்கள் (சிறப்பு ஏற்பாடுகள்) இரண்டாவது (திருத்த) மசோதா - 2023
19. மத்திய பல்கலைக்கழகங்கள் (திருத்த) மசோதா - 2023
II - நிதி மசோதா நடைமுறைகள்:-
1. 2023-24 ஆம் ஆண்டிற்கான துணை மானியக் கோரிக்கைகளின் முதல் தொகுதி சமர்ப்பித்தல், விவாதம் மற்றும் வாக்கெடுப்பு மற்றும் தொடர்புடைய ஒதுக்கீட்டு மசோதாவை அறிமுகப்படுத்துதல், பரிசீலித்தல் மற்றும் நிறைவேற்றுதல்
2. 2020-21 ஆம் ஆண்டிற்கான கூடுதல் மானியக் கோரிக்கைகளைச் சமர்ப்பித்தல், விவாதித்தல் மற்றும் வாக்கெடுப்பு மற்றும் தொடர்புடைய ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை அறிமுகப்படுத்துதல், பரிசீலனை செய்தல் மற்றும் நிறைவேற்றுதல்.
-
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?












Click it and Unblock the Notifications