பட்ட பாடெல்லாம் வீண் போகல.. திமுகவுக்கே கிடைக்காத சான்ஸ்.. ஓபிஎஸ் மகனுக்கு தேடி வந்தது.. சூப்பர்ல..!
ஓபிஎஸ் மகன் ஓபி ரவீந்திரநாத் துபாய் செல்கிறார்
டெல்லி: 6 எம்பிக்கள் கொண்ட குழுவை அடுத்த வாரம் அரபு நாடான துபாய்க்கு அனுப்பி வைக்கிறது மத்திய அரசு.. தமிழகத்திலிருந்து காங்கிரஸ் எம்பி டாக்டர் விஷ்ணுபிரசாத், அதிமுக எம்பி. ரவீந்திரநாத் உள்ளிட்டோரும் இதில் இடம் பெற்றுள்ளனர்.
வெளிநாடுகளில் உள்ள உள்கட்டமைப்பு, சாலைகள் வசதி, கழிவு நீரகற்றல், நீர் மேலாண்மை, போக்குவரத்து திட்டங்கள், சுகாதார கட்டமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை ஆராய்ந்து வருவதற்காக நாடாளுமன்ற நிலைக்குழுக்கள் வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வது வழக்கம்..
ஒவ்வொரு வருடமும் இந்த சுற்றுப்பயணங்களை மேற்கொள்வது வழக்கம்.. அப்படி வெளிநாடுகளுக்கு செல்லும் எம்பிக்கள், அங்கு செயல்படுத்தப்படும் திட்டங்களை இந்தியாவில் அமல்படுத்தும் வகையில் மத்திய அரசுக்கு அதை அறிக்கையாக சமர்ப்பிப்பார்கள்.

எம்பிக்கள்
ஆனால், இந்த 2 வருடமாகவே தொற்று நெருக்கடிகளால் எம்பிக்களால் வெளிநாடுகளுக்கு செல்ல முடியவில்லை.. தற்போது பெரும்பாலான நாடுகளில் கொரோனாவின் தீவிரம் தணிந்திருக்கிறது.. இப்படிப்பட்ட சூழலில் நம் நாட்டின் எம்பிக்கள் குழுவை அடுத்த வாரம் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்க மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது... முதல் குழு, நாடாளுமன்ற சபாநாயகர் தலைமையில் இந்த குழுவானது பயணம் மேற்கொள்ள உள்ளது.

மத்திய அரசு
இந்த குழுக்களை மத்திய அரசே அனுப்பி வைக்கிறது. அதற்கு மத்திய அரசே ஒப்புதலும் வழங்கி உள்ளது.. அந்த வகையில், நாடாளுமன்ற சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில், 6 எம்பிக்கள் கொண்ட குழுவை அடுத்த வாரம் அரபு நாடான துபாய்க்கு அனுப்பி வைக்கிறது மத்திய அரசு.. இந்த சுற்றுப்பயணத்தில் நாடாளுமன்ற செயலகத்தின் அதிகாரிகளும் செல்கின்றனர்...

சோனியா பரிந்துரை
6 எம்பிக்களில் தமிழகத்திலிருந்து காங்கிரஸ் எம்பி டாக்டர் விஷ்ணுபிரசாத், அதிமுக எம்பி. ரவீந்திரநாத் இடம் பெற்றுள்ளனர். இவர்களைத்தவிர தமிழகத்திலிருந்து வேறு எந்த கட்சியின் எம்பியும் இல்லை. காங்கிரஸ் தரப்பில் ஒரு எம்பியை பரிந்துரைக்க மத்திய அரசு சோனியாவுக்கு கடிதம் எழுதியது. தமிழக காங்கிரஸ் எம்பிக்களில் விஷ்ணுபிரசாத்தை பரிந்துரைத்திருக்கிறார். பாஜக லோக்சபா எம்பிக்கள் சங்கர்லால்வாணி, சுஜய் ராதாகிருஷ்ணா விகேபாட்டில் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

பன்னீர் மகன்
சபாநாயகர் தலைமையிலான இந்த குழு 21-ந்தேதி புறப்பட்டு துபாய் செல்கிறது. இவர்கள் அனைவரும் 25-ந்தேதி இந்தியா திரும்புகிறார்கள்.. தமிழகத்தை பொறுத்தவரை, திமுக தரப்பில்தான் அதிக அளவு எம்பிக்கள் உள்ளனர்.. டெல்லியின் இரு அவைகளில் குரல்களை எழுப்பி, பாஜக மேலிடத்தை திணறடிப்பதும் இவர்கள்தான்.. அப்படி இருந்தும் திமுக தரப்புக்கு கிடைக்காத வாய்ப்பு அதிமுகவின் ஒரே ஒரு எம்பியான பன்னீர் மகனுக்கு கிடைத்துள்ளது அக்கட்சியினரை குஷியில் ஆழ்த்தி வருகிறது.
Recommended Video


மகிழ்ச்சி
அதுமட்டுமல்ல, ஓபிஎஸ்ஸும் சரி, அவரது மகனும் சரி, இப்போது வரை பாஜகவுக்கு ஆதரவாளர்களாகவே உள்ளனர்.. அதிலும் வெளிப்படையான ஆதரவாளர்களாகவே இருந்து வருகின்றனர்.. எந்த காரணத்திற்காகவும் பாஜகவையோ, மத்திய அரசின் திட்டங்களையோ இவர்கள் பெரிதாக எதிர்த்தது இல்லை.. பாஜக மேலிடத்தில் நல்ல இணக்கமான போக்கை ஓபிஎஸ் தரப்பு எப்போதுமே கடைப்பிடித்து வருவதும்கூட.. அந்த வகையில்கூட, இந்த வாய்ப்பு ரவீந்திரநாத்துக்கு கிடைத்திருக்கலாம் என்கிறார்கள்.. எப்படி இருந்தாலும், திமுகவை இந்த விஷயத்தில் முந்தி கொண்டுவிட்டது அதிமுக..
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications