Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இப்ப சந்தோஷமா.. லேடி டானை திருமணம் செய்த டெல்லி பிரபல தாதாவுக்கு நடந்த ட்விஸ்ட்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: சிறையில் இருந்து பரோலில் வந்து பெண் ரவுடியை திருமணம் செய்த பிரபல தாதா, தனது சொந்த கிராமத்திற்கு போகலாம் என்று ஆசையாடு இருந்த நிலையில், திடீரென அவரது பரோலுக்கு போலீசார் எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால், தாதாவின் பரோல் உத்தரவை நீதிமன்றம் ரத்து செய்தது. இதனால் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.

அரியானா மாநிலம் சோனிபட் பகுதியைச் சேர்ந்த சந்தீப்பை டெல்லியில் காலா ஜாதேடி என்று அழைக்கிறார்கள். 12ம் வகுப்பு வரை படித்திருக்கும் இவர், கேபிள் ஆப்ரேட்டராக தனது வாழ்க்கையை தொடங்கினார். இன்று டெல்லியின் பெரிய ரவுடிகளில் ஒருவராக திகழ்கிறார்.

Parole cancelled for famous Dada kala jathedi who married rowdy women in Delhi

டெல்லி மாநகரில் கொலை, கொள்ளை, மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட ஏராளமான வழக்குகள் காலா ஜாதேடி மீது நிலுவையில் இருக்கிறது.. கூலிப்படைகளை வைத்து கொலையும் செய்ததாக சில வழக்குகள் இவர் மீது உள்ளது.

இதனிடையே காலா ஜாதேடி டெல்லியில் எப்படி பிரபல ரவுடியோ, அதுபோலவே அனுராதா சவுத்ரி என்ற பெண்ணும் டெல்லியில் ரவுடித்தொழிலில் பிரபலமாக இருக்கிறார் ஆட்களை கடத்துவது, தொழில் அதிபர்களை மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் அனுராதா சவுத்ரி மீது நிலுவையில் இருக்கிறது..

இதனிடையே கடந்த 2020-ம் ஆண்டு நடந்த ஒரு பிரச்சனையில் பெண் ரவுடி ஆனந்த்பால் சிங்கின் சகோதரர் விக்கிசிங்குக்கு உதவுவதற்காக மத்தியபிரதேச மாநிலம் இந்தூருக்கு காலா ஜாதேடி சென்றிருக்கிறார். அப்போது அனுராதா சவுத்ரியை முதல் முதலாக கலா ஜாதேடி சந்தித்தார். இருவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டு பின்னர் காதல் மலர்ந்திருக்கிறது. இதனிடையே இவர்கள் இருவரும் காதலை வளர்த்து வந்த நிலையில், கடந்த 2021-ம் ஆண்டு உத்தரபிரதேசத்தில் ஒரு ஓட்டலில் தங்கியிருந்தனர். இதனை எப்படியோ மோப்பம் பிடித்த டெல்லி போலீஸ் அவர்களை பிடித்து கைது செய்தது. காலா ஜாதேடி, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். அனுராதா சவுத்ரியும் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், ஜாமீனில் வெளியே வந்தார். ஆனால் கலா ஜாதேடிக்கு நீதிமன்றம் ஜாமீன் தரவில்லை..

இந்தநிலையில் காலா ஜாதேடி- அனுராதா சவுத்ரி ரவுடி காதல் ஜோடி, திருமணம் செய்ய விரும்பி உள்ளார்கள். இதனைத்தொடர்ந்து இவர்கள் நீதிமன்றத்தை நாடினார்கள். அதன்பேரில் திருமணத்துக்காக கலா ஜாதேடிக்கு டெல்லி நீதிமன்றம் நேற்று முன்தினம் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை 6 மணி நேரம் பரோல் அனுமதி வழங்கியது.

இதையடுத்து ரவுடி அனுராதா சவுத்ரியின் வழக்கறிஞர்கள், டெல்லி திகார் சிறையில் இருந்து 7 கி.மீ. தொலைவில் ஒரு மண்டபத்தை திருமணத்திற்காக முன்பதிவு செய்தார்கள். அங்கு காலா ஜாதேடி- அனுராதா சவுத்ரி ரவுடி காதல் ஜோடியின் திருமணம் நடந்தது.. இந்த திருமணத்திற்கு வரலாறு காணாத பாதுகாப்பு கொடுத்தது டெல்லி போலீஸ். இந்த திருமணத்தில் மொத்தம் 150 பேர் மட்டுமே பங்கேற்றார்கள்.

திருமணம் முடிந்ததும் காலா ஜாதேடி மீண்டும் மாலை 4 மணி அளவில் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவருக்கு நேற்று சடங்கு சம்பிரதாயங்களுக்காக பரோல் வழங்கப்பட்டு இருந்தது. இதன்படி திருமண சடங்கு சம்பிரதாயங்களுக்காக காலா ஜாதேடி தன் மனைவியுடன் சொந்த கிராமமான அரியானா சோனிபட்டில் உள்ள ஜத்தேரி கிராமத்துக்கு நேற்று செல்ல திட்டமிட்டிருந்தார். இதற்காக அவருக்கு காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை 3 மணி நேரம் பரோல் வழங்கப்பட்டிருந்தது.

புது மனைவியுடன் தன் சொந்த வீட்டில் கால் வைக்க காலா ஜாதேடி ஆவலோடு எதிர்பார்த்திருந்தார். ஆனால் அரியானா போலீசார் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி செசன்சு நீதிமன்றத்தில் நேற்று காலை முறையிட்டனர். அரியானாவில் முன்னாள் முதல்வர் மனோகர்லால் கட்டாரின் ராஜினாமா மற்றும் டெல்லி ராம்லீலா மைதானத்தில் விவசாயிகள் போராட்டம் போன்ற காரணங்களால் பாதுகாப்பு வழங்குவது சவாலான காரியம் என்றும், எனவே பரோல் அனுமதியை ஒரு வாரம் கழித்து வழங்குமாறும் சோனிபட் போலீஸ் எஸ்பி தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதனை ஏற்றுக்கொண்ட செசன்சு கோர்ட் நீதிபதி, காலா ஜாதேடிக்கு வழங்கிய 3 மணி நேர பரோல் உத்தரவை ரத்து செய்தார். மேலும் பரோல் தொடர்பான புதிய மனுவை நாளை மறுநாள் (சனிக்கிழமை) தாக்கல் செய்யவும் அனுமதி வழங்கினார். இந்த எதிர்பாராத உத்தரவால் புதுமண ரவுடி தம்பதி பெரும் அதிர்ச்சி அடைந்து ஏமாற்றம் அடைந்துள்ளனர். மீண்டும் பரோலுக்கு விண்ணப்பம் அளிக்க முடிவு செய்துள்ளனர். பலரும் இவர்கள் திருமணத்தை பற்றி செய்திகள் பரப்பிய நிலையில், டெல்லியில் இவர்கள் திருமணம் பெரிய அளவில் பேசுபொருளானது.. கடைசியில் பரோலையே நீதிமன்றம் ரத்து செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+