தேர்தல் நேரத்தில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தால்.. ஓராண்டு சிறை.. புதிய சட்டம் வருகிறது!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தால் ஓராண்டு சிறை தண்டனை விதிக்க வகை செய்யும் சட்டத்தை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் அரசியல் கட்சிகள் மக்களுக்கு பணம் கொடுக்கும் நிலை மாறும் என்று மத்திய அரசு நம்பிக்கை தெரிவித்திருக்கிறது.

வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் நடைமுறை என்பது ஏறத்தாழ அனைத்து பெரிய கட்சிகளும் செய்து வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த செயல் தவறு என்று தெரிந்தாலும் பெரும்பாலான மக்கள் இப்பணத்தை பெற்றுகொள்கின்றனர். ஒவ்வொரு தேர்தலின் போதும் கோடிக்கணக்கான பணம் இப்படி விளையாடுகிறது. தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 6.2 கோடி பேர் வாக்காளர்கள் இருக்கின்றனர். இந்தியா முழுவதும் 94.50 கோடி பேர் இருக்கின்றனர். இவர்களுக்கு தலா ரூ.1,000 என்று கொடுத்தால்கூட சுமாராக ரூ.10 லட்சம் கோடி வருகிறது.

Passage of a bill that would lead to a one-year jail term for paying bribes to voters during elections

நம்முடைய இந்த ஆண்டு ஒட்டுமொத்த பட்ஜெட் தொகையே ரூ.24 லட்சம் கோடிதான். இவ்வளவு பெரிய தொகை ஏன் மக்களின் திட்டங்களுக்கு செலவிடப்படாமல் லஞ்சமாக தேர்தல் நேரத்தில் மக்கள் கைகளில் கொடுக்கப்படுகிறது? இந்த அளவுக்கு பெரிய பணம் எங்கிருந்து வருகிறது? இதை உருவாக்கியவர்கள் யார்? அவர்கள் இதற்கு வரி கட்டினார்களா? இதை உருவாக்கியதற்கான சட்டப்பூர்வமான ஆதாரங்களை கொண்டிருக்கிறார்களா? அல்லது கருப்பு பணமா? என பல்வேறு கேள்விகள் எழுகின்றன.

எனவே இப்படியான லஞ்சமாக கொடுக்கப்படும் பணத்தை தடுக்க வேண்டும். ஓட்டு என்பது ஒவ்வொரு குடிமகனின் உரிமை. இந்திய நாட்டில் இருப்பவர்கள் ஏழையாக இருந்தாலும், பணக்காரராக இருந்தாலும், குடியரசுத் தலைவராக இருந்தாலும் சாதாரண குடிமகனாக இருந்தாலும் வாக்கு என்பது அனைவருக்கும் ஒன்றுதான். இதுதான் ஜனநாயகத்தின் பலமாக பார்க்கப்படுகிறது. அப்படி இருக்கும் வாக்குகளை யாருக்கு போட வேண்டும் என்பதை தீர்மானிக்க முடியாத அளவுக்கு இந்த பணம் விளையாடுகிறது.

எனவே வாக்காளர்களுக்கு தேர்தலின்போது பணம் கொடுக்கும் நடைமுறையை தடுக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று அதற்கான சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த ஜூலை மாதம் 20ம் தேதி தொடங்கிய மழைக்கால கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடைகிறது.

23 நாட்கள் 11 அமர்வுகளாக நடைபெற்ற இந்த கூட்டத்தொடரில் மத்திய அரசு 32 மசோதாக்களை நிறைவேற்ற திட்டமிட்டிருந்தது. இருப்பினும் தற்போது வரை 21 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. கூட்டத்தொடர் தொடங்கியது முதலேயே எதிர்க்கட்சிகள் மணிப்பூர் விவகாரத்தை கையில் எடுத்ததால் இரு அவைகளும் முடங்கின.

இருப்பினும் டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதா, டெல்லி அதிகாரிகள் நியமன மசோதா என 21 மசோதாக்களை நிறைவேற்றியுள்ளது. இதன் தொடர்ச்சியாக தற்போது வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தால் ஓராண்டு சிறை தண்டணை விதிக்க வகை செய்யும் சட்டத்தையும் நாடாளுமன்றத்தில் மத்திய பாஜக அரசு அறிவித்திருக்கிறது. இந்த குறித்து பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா,

இந்த சட்டம் அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க முடியும் என்று கூறியுள்ளார். ஏற்கெனவே இந்த சட்டம் அமலில் இருந்தாலும் மேலும் பல கூறுகளை சேர்த்து இச்சட்டம் பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சட்டம் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தல் என இரண்டுக்கும் பொருந்தும். முன்னதாக இந்த குற்றத்திற்கு 2 ஆண்டுகள் தண்டனை விதிக்க மத்திய அரசு பரிசீலித்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+