செல்லப்பிராணியுடன் ரயிலில் சென்ற பெண்..வீடியோ பகிர்ந்த மத்திய அமைச்சர்..என்ன சொல்லிருக்காரு பாருங்க

ரயிலில் ஏசி வகுப்பில் பெண் ஒருவர் தனது செல்லப்பிராணியான நாயுடன் பயணிக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ரயிலில் ஏசி வகுப்பில் பெண் ஒருவர் தனது செல்லப்பிராணியான நாயுடன் பயணிக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த வீடியோவை மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஸ்ணவ் தனது ட்விட்டர் பகத்தில் பகிர்ந்துள்ளார்.

இந்திய போக்குவரத்து துறையில் ரயில்வே முக்கிய பங்கு வகிக்கிறது. நாடு முழுவதும் தினமும் ஆயிரக்கணக்கான மக்களின் பயண தேவையை ரயில்வே பூர்த்தி செய்து வைக்கிறது.

சாலை போக்குவரத்தை விட ரயில் பயணம் பாதுகாப்பு மற்றும் சொகுசானது என்பதால் பலருக்கும் பிரியமாக இருப்பது ரயில் பயணம்தான். மலிவு கட்டணம், சரியான நேரத்தில் பயண இலக்கை அடைவதால், வசதி படைத்தவர்கள் கூட ரயில் பயணத்தையே அதிகம் நாடுவதுண்டு.

 ரயில்வேயில் பல்வேறு வசதிகள்

ரயில்வேயில் பல்வேறு வசதிகள்

இதனால் சாமானிய மக்கள் வசதி படைத்தவர்கள் வரை அனைத்து தரப்பினராலும் ரயில் பயணம் அதிகம் விரும்பப்படுகிறது. பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு ரயில்வேயும் தற்போது வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது. ரயில்வேயில் விமானத்திற்கு நிகரான சொகுசு வசதிகளும் மேம்படுத்தி வருகிறது. குறிப்பாக வந்தே பாரத், சதாப்தி, ராஜ்தானி என்ற உயர் ரக சொகுசு வசதிகள் கொண்ட ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

ரயில்வே அமைச்சர் ட்விட்

ரயில்வே அமைச்சர் ட்விட்


ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ரயிலில் மேம்படுத்தப்படும் வசதிகள் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவ்வப்போது பதிவிட்டு வருவார். அதேபோல், ரம்மியமான இயற்கை சூழலுக்கு மத்தியில் ரயில்கள் செல்லும் காட்சிகளையும் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வெளியிடுவதுண்டு. அதுமட்டும் இன்றி சில நேரங்களில் பயணிகள் எழுப்பும் புகார்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகளுக்கு ரயில்வே அமைச்சர் உத்தரவிடுவார்.

 எட்டிப்பார்த்த நாய்

எட்டிப்பார்த்த நாய்

இந்த நிலையில், இளம்பெண் ஒருவர் ரயிலில் தனது செல்லப்பிராணியுடன் பயணிக்கும் வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ரயிலில் குளிர்சாதன பெட்டியில் பயணிக்கும் இளம் பெண், போர்வையில் தனது செல்ல நாயை மறைத்து வைத்திருப்பது போல் மூடி வைத்துள்ளார். உடன் பயணிக்கும் ஒருவர் இளம்பெண்ணை தட்டி எழுப்பவும் போர்வையை விலக்குகிறார். உடனே நாய் தலையை தூக்கி எட்டிப்பார்க்கிறது. கியூட் ஆக உள்ள இந்த வீடியோ இணையத்தில் அதிகம் பரவி வருகிறது.

உங்கள் சேவையில் எப்போதும்..

உங்கள் சேவையில் எப்போதும்..

இன்ஸ்டாகிராமில் முதலில் பரவிய இந்த வீடியோ சுமார் 27 லட்சம் வியூஸ்களை பெற்றுள்ளது. அதைத்தொடர்ந்து பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் அதிகம் பரவியது. ட்விட்டரில் சித்தார்த் பகாரியா என்பவர் இந்த வீடியோவை பகிர்ந்து, இந்திய ரயில்களில் பயணிப்பது மிகவும் அருமையானது.. உங்கள் அனுபவத்தை பகிருங்கள் என்ற கேப்ஷனுடன் இந்த வீடியோவை பகிர்ந்து இருந்தார். இந்த ட்விட்டை ரீடுவிட் செய்துள்ள மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், "உங்கள் சேவையில் எப்போதும் இந்திய ரயில்வே 24x7" என பதிவிட்டுள்ளார்.

நெட்டிசன்கள் கலகல கருத்து

நெட்டிசன்கள் கலகல கருத்து

நெட்டிசன்கள் பலரும் இந்த ட்விட் பதிவிற்கு கீழே தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். நெட்டிசன் ஒருவர் கூறுகையில், ''ரயில்களில் செல்லப்பிராணிகள் கொண்டு செல்ல ஏசி முதல் வகுப்பு (கூபே) அல்லது கேபினில் 4 இருக்கைகளும் நீங்கள் புக் செய்து இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படும். எனவே பிற பயணிகளுக்கு தொந்தரவு இன்றி செல்லப்பிராணிகளை கொண்டு செல்லலாம். செல்லப்பிராணிகளுக்கு ஏற்றுவதற்கு முன்பாக உரிய வேக்‌ஷின் மற்றும் பிட்னஸ் சான்றிதழ் பரிசோதிக்கப்படும்" என்று பதிவிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+