உச்சநீதிமன்றத்தில் மீண்டும் வாங்கி கட்டிய பாபா ராம்தேவ்.. நேரில் ஆஜராக கறார் உத்தரவு!
டெல்லி: உச்சநீதிமன்றம் அனுப்பிய நோட்டீஸுக்கு பதிலளிக்காத யோகா மாஸ்டரும் பதஞ்சலி குழும தலைவருமான பாபா ராம்தேவுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர் நீதிபதிகள். மேலும் பாபா ராம்தேவ் மீது ஏன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரக் கூடாது? எனவும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
யோகா மாஸ்டரான பாபா ராம்தேவ் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருபவர். கொரோனா பரவிய காலத்தில் கொரோனாவுக்கு மருந்து கண்டு பிடித்துவிட்டதாக கூறியதால் கடுமையாக விமர்சிக்கப்பட்டவர் பாபா ராம்தேவ். நீதிமன்றங்களாலும் அவர் கண்டிக்கப்பட்டார்.

இதனிடையே பாபா ராம்தேவின் பதஞ்சலி ஆயுர்வேத மருந்துகளுக்கான விளம்பரங்களில் தவறான தகவல்கள் இடம் பெறுவதை தடை செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டன. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், விளம்பரங்களில் தவறான தகவலைத் தரக் கூடாது என பாபா ராம்தேவை எச்சரித்தது. அத்துடன் இது தொடர்பாக பதிலளிக்க வேண்டும் எனவும் பாபா ராம்தேவுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.
இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் ஹிமா கோலி, அமானுல்லாஹ் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பாக பாபா ராம்தேவ் நிறுவனத்துக்கு எதிரான வழக்கு விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணையின் போது, உச்சநீதிமன்றம் அனுப்பிய நோட்டீஸுக்கு பாபா ராம்தேவ் தரப்பு பதிலளிக்கவில்லை; விசாரணைக்கு ஒருநாள் முன்னதாகத்தான் பதில் மனு தாக்கல் செய்தது என சுட்டிக்காட்டப்பட்டது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், பாபா ராம்தேவ் மீது ஏன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரக் கூடாது எனவும் கேள்விகள் எழுப்பினர்.
மேலும் இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணையின் போது பதஞ்சலி நிறுவனத்தின் பாபா ராம்தேவ், நிர்வாக இயக்குநர் ஆச்சார்யா பாலகிருஷ்ணா இருவரும் உச்சநீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் எனவும் நீதிபதிகள் காட்டமான உத்தரவையும் பிறப்பித்துள்ளனர்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications