பென்ஷன்.. நீதிபதி நியமனம், பணப்பலன்.. தமிழக தலைமை செயலாளர் சுப்ரீம் கோர்ட்டில் ஆஜராகி விளக்கம்.. ஏன்
டெல்லி: நிதித்துறை அதிகாரிகளுக்கான ஓய்வூதிய நிலுவை தொகை மற்றும் ஓய்வூதிய பலன்களை அளிப்பது தொடர்பான வழக்கில், தமிழக தலைமை செயலாளர் முருகானந்தம் இன்று, சுப்ரீம் கோர்ட்டில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
மாவட்ட நீதிபதிகள், நீதித்துறை அதிகாரிகளுக்கான ஊதியம், ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம், கொடுப்பனைவுகளுக்கான பரிந்துரைகளை எஸ்என்ஜேபிசி எனப்படும், இரண்டாவது தேசிய நீதித்துறை ஊதிய கமிஷன் வழங்கி வருகிறது.

ஓய்வூதிய பலன்கள்: ஆனால், நீதித்துறை அதிகாரிகளுக்கான ஓய்வூதிய நிலுவைத் தொகை, ஓய்வூதிய பலன்கள் தொடர்பாக கமிஷன் அளித்த பரிந்துரைகளை தமிழகம் உட்பட 18 மாநிலங்கள் முழுமையாக நிறைவேற்றவில்லை.
இந்த பட்டியலில் தமிழகம், மத்திய பிரதேசம், ஆந்திரா, மேற்கு வங்கம், சத்தீஸ்கர், டெல்லி, அசாம், நாகாலாந்து, மேகாலயா, ஹிமாச்சல், ஜம்மு - காஷ்மீர், லடாக், ஜார்க்கண்ட், கேரளா, பீஹார், கோவா, ஹரியானா மற்றும் ஒடிசா உள்ளிட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் இடம் பெற்றுள்ளன.
பரிந்துரைகள்: இந்த பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தும்படி, அனைத்திந்திய நீதிபதிகள் சங்கம் மற்றும் இதே கோரிக்கையை வலியுறுத்தி, 22 பேர் சுப்ரீம்கோர்ட்டில் மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், நாடு முழுதும் உள்ள நீதித்துறை அதிகாரிகளின் பணி நிலைமைகளில் ஒரே சீரான தன்மையை பராமரிக்க உத்தரவிட்டது.
முன்னதாக, நீதிபதிகள் மற்றும் சட்டத்துறையை சார்ந்த அதிகாரிகளை நியமனம் செய்வது, அதேபோன்று ஓய்வூதியம் வழங்குவது ஆகியவை தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களானது, சுப்ரீம்கோர்ட் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
நீதிபதிகள் உத்தரவு: அப்போது இந்த விவகாரத்தில் பதிலளிக்காத 18 மாநிலங்களின் தலைமை செயலாளர்கள் 27ம் தேதி (அதாவது இன்று) நேரில் ஆஜராக வேண்டும் என்று என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதற்கு தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் அமித் ஆனந்த் திவாரி மற்றும் சபரீஸ் சுப்ரமணியன் ஆகியோர், "இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக ஓய்வூதியம் வழங்குவது தொடர்பாக அதற்கான தொகை அரசு தரப்பில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விரைவில் அது நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. எனினும், 3 மாதங்கள் அவகாசம் வழங்க வேண்டும்...
கோரிக்கை: தமிழக தலைமை செயலாளர் கடந்த 19ம் தேதிதான் புதிதாக பொறுப்பேற்றுள்ளார் என்பதால் அவர் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களிக்க வேண்டும். தேவைப்பட்டால் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக ஆஜராவார். இதனை நீதிமன்றம் கருத்தில் கொண்டு அனுமதி வழங்க வேண்டும்" என்று நீதிபதிகளிடம் கோரிக்கையை வைத்தனர்.
இதையடுத்து, நீதிபதிகள், "இந்த விவகாரத்தில் 3 மாதம் அவகாசம் கண்டிப்பாக வழங்க முடியாது... வேண்டுமென்றால் 4 வாரம் தருகிறோம். அதேபோன்று தலைமை செயலாளர் நேரில் ஆஜராவதில் இருந்தும் எந்தவித விலக்கும் அளிக்க முடியாது என்று திட்டவட்டமாக கூறிய நீதிபதிகள், விசாரணையை இன்று 27ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டிருந்தனர்..
இன்று நேரில் ஆஜர்: அந்தவகையில், நீதிபதிகள் மற்றும் சட்டத்துறையை சார்ந்த அதிகாரிகள் நியமனம் செய்வது, ஓய்வூதியம் வழங்குவது ஆகியவை தொடர்பான விவகாரத்தில் தலைமை செயலாளர்கள் இன்று சுப்ரீம்கோர்ட்டில் நேரில் ஆஜராகியிருந்தனர்.. அந்தவகையில், தமிழ்நாடு தலைமை செயலாளர் முருகானந்தம், நிதித்துறை செயலாளர், உதயச்சந்திரன் ஆகியோர் நேரில் ஆஜரானார்கள்.
அப்போது மாவட்ட நீதிபதிகளுக்கு உயர்த்தப்பட்ட ஊதியத்தை அளிக்கும் உத்தரவை அமல்படுத்தும் விவகாரத்தில், எஸ்என்ஜேபிசி பரிந்துரைத்த நிதி ஒதுக்கப்பட்டு விட்டதாகவும், அதை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தலைமை செயலாளர் விளக்கம் அளித்தார்..
விளக்கம்: இந்த விளக்கத்தை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி சந்திரசூட், "4 வாரங்களுக்குள் உரிய பணப்பலன்களை வழங்கும் பணிகளை நடைமுறைப்படுத்த வேண்டும். நிதியை ஒதுக்கிவிட்டதால், தமிழ்நாட்டின் மீதான நடவடிக்கை கைவிடப்படுகிறது... இந்த வழக்கும் முடித்து வைக்கப்படுகிறது" என்று உத்தரவிட்டார்.
-
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்! -
ஹார்முஸில் வழிந்தோடும் ‘ரத்தம்’? பீதியில் உலக நாடுகள்.. கண்ணி வெடிகள் வேற குவிந்து கிடக்குதே












Click it and Unblock the Notifications