பேரறிவாளன் விடுதலை.. நீதிமன்றத்தில் தீவிரமாக எதிர்த்த மத்திய அரசு! வாதங்களை புறந்தள்ளிய நீதிபதிகள்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: உச்ச நீதிமன்றத்தில் பேரறிவாளன் விடுதலை வழக்கு விசாரணையின் போது மத்திய அரசு தமிழ்நாடு அரசை கடுமையாக எதிர்த்தது. இதில் பேரறிவாளனை விடுதலை செய்யும் அதிகாரம் தமிழ்நாடு அரசுக்கு இல்லை என்றும், ஆளுநர் இந்த தீர்மானத்தை குடியரசுத் தலைவருக்கு அனுப்பியது சரிதான் என்று வாதம் வைத்தது.

Recommended Video

    Perarivalan Release Case | மத்திய அரசு முன்வைத்த வாதங்கள்! | Oneindia Tamil

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தன்னை விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து பேரறிவாளன் 2016ல் மனுதாக்கல் செய்து, அதன்பின் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து இருந்தார். இந்த வழக்கில் வழக்கில் பேரறிவாளனை விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது.

    கடந்த மே 11ம் தேதி வரை இந்த வழக்கில் வாதங்கள் வைக்கப்பட்டன. வாதங்கள் முடிந்த நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. உச்ச நீதிமன்றம் தனக்கு உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி, வழக்கில் 142-வது பிரிவைச் செயல்படுத்தி, விடுதலை செய்துள்ளது.

    மத்திய அரசு வாதம்

    மத்திய அரசு வாதம்

    மத்திய அரசு சார்பாக கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் நடராஜன் ஆஜர் ஆனார். இவர் பேரறிவாளன் தண்டனையை குறைக்க கூடாது என்று கடும் வாதம் வைத்தார். அவர் வைத்த வாதத்தில்,

    1 . பேரறிவாளன் வழக்கில் தண்டனை குறைக்கும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு மட்டுமே உள்ளது. ஏற்கனவே அவரின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டுவிட்டது. அவருக்கு ஏற்கனவே ஒரு நீதி சலுகை வழங்கப்பட்டுவிட்டது. இதனால் மீண்டும் அவரின் தண்டனையை குறைக்க கூடாது.

    2. அவரை இந்த வழக்கில் இருந்து விடுதலை செய்ய கூடாது. இந்த அதிகாரம் மாநில அரசுக்கும் கிடையாது, என்று வாதம் வைத்தார். இதில் கூடுதல் விசாரணை நடத்த இருக்கிறோம். முதலில் இருந்து ஆதாரங்களை எடுத்து விசாரிக்க உள்ளோம். அதனால பேரறிவாளனை விடுவிக்க கூடாது.

     யாருக்கு அதிகாரம்

    யாருக்கு அதிகாரம்

    3. குடியரசுத் தலைவர் மட்டுமே இதில் முடிவு எடுக்க முடியும். ஸ்ரீஹரன் வழக்கு இதற்கு உதாரணம். அவருக்கு மட்டுமே சட்ட விதி 432 (7)ன் கீழ் அதிகாரம் உள்ளது. என்று குறிப்பிட்டார்.

    4. இந்திய சட்ட பிரிவு, ஆயுத பிரிவு, வெளிநாட்டு சட்ட பிரிவு, தடா சட்டம் உள்ளிட்ட சட்டங்களின் கீழ் விசாரணை நடப்பதாக மத்திய அரசு தரப்பு கூறியது. அதனால் மத்திய அரசு மட்டுமே விடுதலை செய்ய முடியும்.

    விசாரணை ஆணையம்

    விசாரணை ஆணையம்

    5. இந்த வழக்கில் மத்திய புலானய்வு அமைப்பு விசாரித்த வழக்கு. இதன் காரணமாக அதில் குடியரசுத் தலைவர் முடிவு எடுக்கவே அதிகாரம் உள்ளது.

    6. மாநில அரசோ, ஆளுநரோ அதில் முடிவு எடுக்கும் அதிகாரம் இல்லை. இது மாநில அரசின் வரம்பிற்கு கீழே வராது, மாநில அரசின் விசாரணை ஆணையம் விசாரித்த வழக்கு என்றால் மட்டுமே அதில் மாநில அரசு முடிவு எடுக்க முடியும்.

    ஆளுநர் முடிவு

    ஆளுநர் முடிவு

    7. ஆளுநர் ஏற்கனவே குடியரசுத் தலைவருக்கு இந்த மனுவை அனுப்பிவிட்டார். இதனால் அவர்தான் இதில் முடிவு எடுக்க வேண்டும்.

    8. சட்டப்பிரிவு 432 படி குடியரசுத் தலைவருக்கு இதில் முடிவு எடுக்கும் அதிகாரம் உள்ளது என்று மத்திய அரசு வாதம் வைத்தது. மத்திய அரசுக்கு மட்டுமே இதில் முடிவெடுக்க கூடுதல் அதிகாரம் உள்ளது. இந்த சட்டம் மாநில அரசு மத்திய அரசுக்கும் பொருந்தும் என்றாலும், விசாரணை ஆணையம் எது என்பதை பொறுத்து மத்திய அரசு முடிவு எடுக்கலாம்.

    ஆளுநருக்கு அனுப்பும் அதிகாரம்

    ஆளுநருக்கு அனுப்பும் அதிகாரம்

    9. மத்திய அரசுக்கே கூடுதல் அதிகாரம் உள்ளது. IPCயின் கீழ் தண்டனை பெற்றவர்களுக்கு கருணை வழங்கும் விவகாரத்தில், சட்டவிதிகளை மீறி அமைச்சரவையின் முடிவு இருந்தால் அதனை குடியரசுத் தலைவருக்கு அனுப்ப ஆளுநருக்கு அதிகாரம் உண்டு மத்திய அரசு வாதம் வைத்தது.

    10. ஏற்கனவே இந்த தீர்மானம் குடியரசுத் தலைவருக்கு சென்றுவிட்டது. இதனால் இனி ஆளுநரை இதில் முடிவு எடுக்கும்படி கூற முடியாது. அதனால் குடியரசுத் தலைவர்தான் இதில் முடிவு எடுப்பார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+