உச்சத்துக்கு போனது.. பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத உயர்வு.. கதிகலங்கும் வாகன ஓட்டிகள்
பெட்ரோல் டீசல் விலை இன்றும் உயர்ந்துள்ளது
டெல்லி: பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 26 காசுகள் உயர்ந்து 101 ரூபாய் 26 காசுகளுக்கும், ஒரு லிட்டர் டீசல் விலை 34 காசுகள் உயர்ந்து 96 ரூபாய் 60 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
பெட்ரோல், டீசல் விலையை தினசரி நிர்ணயிக்கும் நடைமுறையை எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து கடைபிடித்து வருகின்றன. இதனால், அதன் விலையும் தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது.
தினம் தினம் புதிய உச்சத்தை தொட்டு வந்த பெட்ரோல், டீசல் விலையானது, கடந்த ஆகஸ்டு மாதம் 2-வது வாரத்தில் இருந்து விலை குறைந்து காணப்பட்டது... ஆனால், அதன் பிறகு அடிக்கடி விலையும் குறைந்தது.

சரிவு
தொடர்ந்து அதுபோலவே விலை சரியும் என்று எதிர்பார்த்து இருந்த நேரத்தில் கடந்த மாதம் 28-ந்தேதியில் இருந்து பெட்ரோல் விலையும், கடந்த மாதம் 24-ந்தேதி முதல் டீசல் விலையும் மறுபடியும் எகிற தொடங்கிவிட்டன. அப்போதிருந்து இப்போது வரை குறையவே இல்லை.. சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 100 ரூபாய் 75 காசுகளுக்கும், ஒரு லிட்டர் டீசல் விலை 96 ரூபாய் 26 காசுகளுக்கும் விற்பனை செய்யப்பட்டது.

விலை உயர்வு
இந்நிலையில், பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்ந்துள்ளது... அதன்படி, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 26 காசுகள் உயர்ந்து 101 ரூபாய் 26 காசுகளுக்கும், ஒரு லிட்டர் டீசல் விலை 34 காசுகள் உயர்ந்து 96 ரூபாய் 60 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது. இப்படி தினம் தினம் விலை உயர்ந்து கொண்டு போவதால், வாகன ஓட்டிகள் கலங்கி போயுள்ளனர்.

ராஜஸ்தான்
அதேபோல, டேராடூன், சண்டீகா், கவுகாத்தி, ராஞ்சி போன்ற நகரங்களில் மட்டும் பெட்ரோல் விலை ரூ.100-க்கு கீழ் உள்ளது... மற்றபடி, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், ஒடிஸா, ஆந்திர பிரதேசம், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் உள்ள பல்வேறு நகரங்களில் டீசல் விலை ரூ.100-ஐ ஏற்கனவே தாண்டி சென்று விட்டது. ராஜஸ்தான் எல்லையோர நகரமான ஸ்ரீகங்கா நகரில்தான் நாட்டிலேயே அதிகபட்சமாக பெட்ரோல் லிட்டருக்கு ரூ.115.14-ஆகவும், டீசல் ரூ.105.64-ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
Recommended Video

விற்பனை
யூனியன் பிரதேசமான டாமனில் நாட்டிலேயே குறைந்தபட்சமாக பெட்ரோல் லிட்டருக்கு ரூ.98.26-ஆக விற்பனை செய்யப்படுகிறது... இந்தியாவில் கடந்த ஜூலை 18 முதல் செப்டம்பா் 23 வரை பெட்ரோல் டீசல் விலை உயா்த்தப்படவில்லை. அந்தக் காலகட்டத்தில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.0.65 காசுகளும், டீசல் 1.25 காசுகளும் குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications