5வது நாளாக இன்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு.. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூபாய் 101.27

பெட்ரோல் டீசல் விலை 5வது நாளாக இன்றும் உயர்ந்துள்ளது

Subscribe to Oneindia Tamil

டெல்லி: சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 26 காசுகள் உயர்ந்து 101 ரூபாய் 27 காசுகளுக்கும், ஒரு லிட்டர் டீசல் விலை 33 காசுகள் உயர்ந்து 96 ரூபாய் 93 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது..

பெட்ரோல், டீசல் விலையை தினசரி நிர்ணயிக்கும் நடைமுறையை எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து கடைபிடித்து வருகின்றன. இதனால், அதன் விலையும் தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது.

தினம் தினம் புதிய உச்சத்தை தொட்டு வந்த பெட்ரோல், டீசல் விலையானது, கடந்த ஆகஸ்டு மாதம் 2-வது வாரத்தில் இருந்து விலை குறைந்து காணப்பட்டது... ஆனால், அதன் பிறகு அடிக்கடி விலையும் குறைந்தது.

டீசல்

டீசல்

ஆனால், கடந்த மாத இறுதியில் இருந்து பெட்ரோல் விலையும், கடந்த மாதம் 24-ந்தேதி முதல் டீசல் விலையும் மறுபடியும் அதிகமாக தொடங்கிவிட்டன. அப்போதிருந்து இப்போது வரை அந்த விலை குறையவே இல்லை.. ஒருநாள் குறைந்தாலும், மறுநாளே இரட்டிப்பாகும் அளவுக்கு உயர்ந்துவிடுகிறது. அந்த வகையில், சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 101 ரூபாய் 01 காசுகளுக்கும், ஒரு லிட்டர் டீசல் விலை 96 ரூபாய் 60 காசுகளுக்கும் விற்பனை செய்யப்பட்டது.

உயர்வு

உயர்வு

இந்நிலையில், பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்ந்துள்ளது... அதன்படி, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 26 காசுகள் உயர்ந்து 101 ரூபாய் 27 காசுகளுக்கும், ஒரு லிட்டர் டீசல் விலை 33 காசுகள் உயர்ந்து 96 ரூபாய் 93 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது... இப்படி தினம் தினம் விலை உயர்ந்து கொண்டு போவதால், வாகன ஓட்டிகள் கலங்கி போயுள்ளனர். தொடர்ந்து 5வது நாளாக இந்த விலை உயர்ந்துள்ளது.

Recommended Video

    மீண்டும் சதம் அடித்த பெட்ரோல் விலை… வாகன ஓட்டிகள் கவலை!
    நகரங்கள்

    நகரங்கள்

    அதேபோல, டேராடூன், சண்டீகா், கவுகாத்தி, ராஞ்சி போன்ற நகரங்களில் மட்டும் பெட்ரோல் விலை ரூ.100-க்கு கீழ் உள்ளது... மற்றபடி, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், ஒடிஸா, ஆந்திர பிரதேசம், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் உள்ள பல்வேறு நகரங்களில் டீசல் விலை ரூ.100-ஐ ஏற்கனவே தாண்டி சென்று விட்டது. ராஜஸ்தான் எல்லையோர நகரமான ஸ்ரீகங்கா நகரில்தான் நாட்டிலேயே அதிகபட்சமாக பெட்ரோல் லிட்டருக்கு ரூ.115.14-ஆகவும், டீசல் ரூ.105.64-ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

    பட்ஜெட்

    பட்ஜெட்

    யூனியன் பிரதேசமான டாமனில் நாட்டிலேயே குறைந்தபட்சமாக பெட்ரோல் லிட்டருக்கு ரூ.98.26-ஆக விற்பனை செய்யப்படுகிறது... நாடு முழுதும், வைரஸ் பரவலை தடுக்க, மார்ச் இறுதியில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், மே வரை, பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாறுதலும் செய்யாமல் இருந்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், தற்போது, அவற்றின் விலையை உயர்த்தி வருகின்றன. தமிழக பட்ஜெட்டில் வெளியான அறிவிப்பால் பெட்ரோல் விலையில் 3 ரூபாய் குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+