லோக்சபா தேர்தலுக்கு முன்பாக பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படுகிறதா? மத்திய அமைச்சர் பதில்
டெல்லி: நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே எஞ்சியுள்ள நிலையில், தேர்தலுக்கு முன்பாக மக்களின் ஆதரவை பெறும் விதமாக பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட உள்ளதா? என மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரியிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் பதில் அளித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் வரும் 2024 ஆம் ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறும் என எதிபார்க்கப்படுகிறது. மத்தியில் மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்து விடும் என்பதில் பாஜக தீவிரமாக உள்ளது. அதேவேளையில், பாஜகவை ஆட்சி அதிகாரத்தில் இருந்து அகற்றி விட வேண்டும் என்பதில் எதிர்க்கட்சிகள் முழு வீச்சில் இறங்கியுள்ளன. இதற்காக காங்கிரஸ் உள்பட பல்வேறு முக்கிய கட்சிகள் இணைந்து "இந்தியா" கூட்டணியை உருவாக்கியுள்ளன.

நாடு முழுவதும் ஒருங்கிணைந்து தேர்தலில் போட்டியிட இந்தியா கூட்டணியில் முடிவு செய்யப்பட்டு இது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. கடந்த தேர்தலை போல் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வரும் தேர்தல் கடும் சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கபடுகிறது. இதனால், தேர்தலுக்கு முன்பாக சில அறிவிப்புகளை மத்திய அரசு வெளியிடலாம் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் ஹர்திபி சிங் பூரியிடம், லோக்சபா தேர்தலுக்கு முன்பாக பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படுகிறதா? என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த ஹர்தீப் சிங் பூரி, இது தவறான கருத்து" என்றார். இது தொடர்பாக அவர் கூறுகையில், ஊடகங்களில் இதுபோன்ற ஒரு செய்தி பரப்பப்படுகிறது.

அதில் உண்மையில்லை. பெட்ரோல், டீசல் விலையை பொறுத்தவரை பல்வேறு காரணிகளை அடிப்படையாக வைத்து நிர்ணயிக்கப்பட்டுகிறது. சர்வதேச சந்தை விலை, போக்குவரத்து செலவீனங்கள், சுத்திகரிப்பு செலவு மற்றும் வரி ஆகியவற்றை வைத்தே எரிபொருள் விலை நிர்ணயிக்கப்படுகிறது" என்றார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications