இலங்கை, பாகிஸ்தானைவிட இந்தியாவில்தான் பெட்ரோல் விலை ரொம்ப காஸ்ட்லியா? இப்படியும் ஒரு சர்வே!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஹாங்ஹாங், ஜெர்மனி, இங்கிலாந்தைவிட இந்தியாவில் பெட்ரோல் விலை டாலர் மதிப்பில் குறைவு; அதேநேரத்தில் சீனா, பிரேசில், ஜப்பான், அமெரிக்கா, ரஷ்யா, பாகிஸ்தான், இலங்கையைவிட இந்தியாவில் பெட்ரோல் விலை அதிகம் என்கிறது BOB Economics Research அறிக்கை.

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. மத்திய, மாநில அரசுகள் வரிகுறைப்பின் மூலம் இத்தகைய விலை உயர்வை கட்டுப்படுத்த முடியும் என்கிற விவாதங்கள் நடந்து வருகின்றன. சர்வதேச சந்தைய்ல் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பதிருப்பதன் மூலம் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருகிறது.

Petrol Price in India more expensive than Pakistan, Sri Lanka?

இந்நிலையில் BOB Economics Research அறிக்கை ஒன்றை ஆய்வு செய்து வெளியிட்டிருக்கிறது. பல்வேறு நாடுகளின் பொருளாதார நிலைமை, பெட்ரோல்-டீசல் விலை ஆகியவற்றை ஒப்பிட்டு இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதில் இந்தியா தொடர்பாக குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

மொத்தம் 106 நாடுகளின் விலை விவரங்கள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டன. இந்தியாவில் 1 லிட்டர் பெட்ரோல் விலை 1.35 டாலராக உள்ளது. இது 42-வது இடத்தில் உள்ளது. சராசரியாக பெட்ரோ விலை என்பது 1.22 டாலராக உள்ளது. ஆஸ்திரேலியா, துருக்கி, தென்கொரியாவை ஒப்பிடுகையில் இந்தியாவில் எரிபொருட்கள் விலை வெகுதொலைவில் உள்ளன.

அமெரிக்கா, சீனா, ஹாங்ஹாங், பின்லாந்து, ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, கிரீஸ், பிரான்ஸ், போர்ச்சுகல், நார்வே ஆகிய நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியாவில் பெட்ரோல் விலை குறைவு. இந்த நாடுகளில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 2 டாலருக்கும் அதிகமாக உள்ளன.

வியட்நாம், கென்யா, உக்ரைன், வங்கதேசம், நேபாளம், பாகிஸ்தான், இலங்கை, வெனிசுலா ஆகிய நாடுகளில் இந்தியாவை ஒப்பிடுகையில் பெட்ரோல் விலை குறைவுதான். கடந்த மே 9-ந் தேதி இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+