கொரோனாவுக்கு முன்பு போல் தற்போதும் பெட்ரோல் பயன்பாடு அதிகரிப்பு!.. புட்டு புட்டு வைக்கும் புள்ளிகள்
டெல்லி: கொரோனாவுக்கு முன்பு இருந்தது போல் தற்போது பெட்ரோல் பயன்பாடு அதிகரித்துள்ளது.
கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட இந்த ஊரடங்கால் அத்தியாவசிய பணிகளைத் தவிர மற்ற வாகன ஓட்டிகள் வீட்டுக்குள்ளேயே கிடந்தனர்.
மேலும் தினந்தோறும் அலுவலகத்தில் வேலைபார்த்தவர்களுக்கு வீட்டில் வேலை பார்க்கும் வசதி இருந்தால் அவர்கள் வீட்டிலிருந்தபடியே பணியாற்ற வாய்ப்பு வழங்கப்பட்டது.

இந்தியாவின் எரிபொருள்
இதனால் வாகன நடமாட்டம் இல்லாமல் குறைந்ததால் இந்தியாவின் எரிபொருள் தேவையானது நாள் ஒன்றுக்கு 5 லட்சம் பீப்பாய் அளவுக்கு குறைந்தது. கடந்த மார்ச் மாதம் பெட்ரோல் பயன்பாடு, கொரோனாவுக்கு முன்பு இருந்த இயல்புநிலையை நெருங்கியது. இருந்தாலும் கொரோனா இரண்டாவது அலை காரணமாக கடந்த மே மாதம் மீண்டும் எரிபொருள் பயன்பாடு குறைந்தது.

எரிபொருள் பயன்பாடு
ஆனால் ஊரடங்கு தளர்த்தப்பட்டதால் ஜூன் மாதம் எரிபொருள் பயன்பாடு அதிகரிக்க தொடங்கியது. இந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் பெட்ரோல் பயன்பாடு மேலும் அதிகரித்தது. மொத்தம் 23.70 லட்சம் டன் பெட்ரோல் உபயோகிக்கப்பட்டது. இது கடந்த ஆண்டு ஜூலை மாதத்துடன் ஒப்பிடும்போது 17 சதவீதம் அதிகம்.

ஜூலை மாதம்
கொரோனாவுக்கு முன்பு அதாவது கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23.90 லட்சம் டன் பெட்ரோல் விற்பனை ஆகியிருந்தது. அதே நிலையை தற்போது எட்டியுள்ளது. கடந்த மாதம் 54.59 லட்சம் டன் டீசல் விற்பனை ஆகியுள்ளது. இது கடந்த ஆண்டு ஜூலை மாதத்துடன் ஒப்பிடுகையில் 12.36 சதவீதம் அதிகம்.

தீபாவளிக்குள் விற்பனை
ஆனால் 2019ஆம் ஆண்டு ஜூலை மாதத்துடன் ஒப்பிடுகையில் 10.9 சதவீதம் குறைவு. தீபாவளிக்குள் டீசல் விற்பனையும் கொரோனாவுக்கு முன்பிருந்த நிலையை எட்டும் என்று இந்திய எண்ணெய் கழக தலைவர் வைத்யா தெரிவித்துள்ளார். விமானங்கள் முழுமையாக இயக்கப்படாததால், விமான எரிபொருள் விற்பனை கணிசமாக குறைந்துள்ளது. ஆனால், சமையல் எரிவாயு பயன்பாடு, ஊரடங்கு காலத்திலும் அதிகரித்தே வருகிறது. எரிபொருள், சமையல் எரிவாயுக்களின் விலை அதிகரித்தாலும் மக்கள் அதிகளவில் பயன்படுத்துவது இந்த புள்ளிவிவரங்கள் மூலம் தெரிகிறது. இதற்கு காரணமாக இந்த கொரோனா காலகட்டத்தில் பைக், கார் மூலம் சொந்த ஊரிலிருந்து பணி செய்யும் ஊருக்கு திரும்பியிருக்கலாம்.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங்












Click it and Unblock the Notifications