Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அத்தனையும் ஆபாசம்.. நடுவானில் நிர்வாணம்! டென்ஷனான பைலட் செய்த காரியம் இருக்கே! மிரண்டுபோன பயணிகள்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: அமெரிக்காவில் நடுவானத்தில் சில பயணிகள் செய்த காரியத்தால் டென்ஷான, பைலட் செய்த காரியம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

டெக்னாலஜி நமது வாழ்க்கையை எளிமையாக்கி உள்ளது என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், அந்த டெக்னாலஜியை நாம் சரியாகப் பயன்படுத்துகிறோமா என்பது கேள்வி தான்.

சில நேரங்களில் நமது செயல்பாடுகள் டெக்னாலஜியை நமக்கு எதிராகவும் திருப்பிவிடும். அப்படியொரு சம்பவம் தான் அமெரிக்காவில் நடுவானில் நடந்துள்ளது.

 ஆப்பிள்

ஆப்பிள்

சர்வதேச அளவில் முதன்மையான மொபைல் நிறுவனம் ஆப்பிள். இந்த நிறுவனத்தின் ஐபோன் பல அட்டகாசமான வசதிகளைக் கொண்டதாகும். அப்படி இருக்கும் ஒரு வசதி தான் ஆப்பிளின் ஏர்டிராப். பலரும் இந்த ஏர்டிராப் வசதியைப் பாராட்டித் தள்ளினாலும் கூட இதில் இருக்கும் குறைபாடுகளைத் தவிர்த்து விட முடியாது. சமீபத்தில் அமெரிக்காவின் சவுத்வெஸ்ட் விமானத்தில் பயணிகள் ஏர்டிராப்பை கொண்டு செய்த செயல் விமானியை கடும் கோபத்தில் தள்ளி உள்ளது.

நிர்வாணம்

நிர்வாணம்

அதாவது விமானத்தில் இருந்து சில பயணிகள் ஏர் டிராப் மூலம் நிர்வாணப் படங்களைப் பகிர்வதுள்ளனர். இது ஒரு கட்டத்தில் எல்லை மீறிச் செல்லவே, பயணிகள் சிலர் இது தொடர்பாகப் புகார் அளித்துள்ளனர். மேலும், பணிப்பெண்கள் சிலருக்கும் இந்த நிர்வாணப் படங்கள் சென்றதாகக் கூறப்படுகிறது. இதனால் கடுப்பான பைலட், நிர்வாணப் படங்களை அனுப்புவதை நிறுத்தவில்லை என்றால் விமானத்தை மீண்டும் வந்த இடத்திற்குத் திரும்பிவிடுவேன் என்றும் பாதுகாப்பு அதிகாரிக்கும் இது குறித்துத் தெரிவிக்கப்படும் என்றும் மிரட்டி உள்ளார்.

 கடுப்பான பைலட்

கடுப்பான பைலட்

இதையெல்லாம் விமானத்தில் பயணித்த ஒருவர் வீடியோவாக பதிவு செய்து, தனது டிக்காட் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் அவர், "நல்ல கேட்டுக் கொள்ளுங்கள். இதை நீங்கள் தொடர்ந்து செய்தால், விமானத்தை நான் தரையிறக்கிவிடுவேன். போலீசாரிடம் சொல்ல வேண்டி இருக்கும். தேவையின்றி உங்கள் ஹாலிடேஸை கெடுத்துக் கொள்ளாதீர்கள். ஏர் டிராப்பில் நிர்வாணப் படங்களை அனுப்புவதை விட்டுவிட்டு, வேறு வேலை இருந்தால் பாருங்கள்" என்று காட்டமாகத் தெரிவிக்கிறார்.

 ஏர்டிராப் என்றால் என்ன

ஏர்டிராப் என்றால் என்ன

ஏர்டிராப் என்பது ஐபோனில் இருக்கும் ஒரு அட்டகாசமான வசதி. இதன் மூலம் வைஃபை அல்லது செல்லுலார் இணைப்பு இல்லாமல் iOS சாதனங்களுக்குப் புகைப்படங்கள், வீடியோக்களை அனுப்ப முடியும். இதில் தான் நிர்வாண படங்களை சில பயணிகள் அனுப்பி உள்ளனர். இதன் செட்டிங்கில் பாதுகாப்பு காரணங்களுக்காக contact only என்று மட்டுமே இருக்க வேண்டும். இல்லையென்றால், இப்படித்தான் யாரென்றே தெரியாதவர் கூட எது வேண்டுமானாலும் அனுப்பிவிடலாம்.

 என்ன நடந்தது

என்ன நடந்தது

விமானம் புறப்பட்டுக் கொஞ்ச நேரம் அனைத்து சுமுகமாகவே சென்றுள்ளது. அதன் பின்னரே, பயணிகளில் சிலர் நிர்வாணப் படங்களைப் பகிரத் தொடங்கி உள்ளனர். அப்படித்தான் ஐபோன் வைத்திருந்த பயணிகள் சிலருக்கு திடீரென நிர்வாணப் படங்கள் சென்றுள்ளன. இது தொடர்பாகப் பயணி ஒருவர் விமான குழுவிடம் புகாரும் அளித்துள்ளார். அதன் பின்னரே இந்தச் சம்பவம் குறித்து பைலெட்டிற்கு தெரியப்படுத்தப்பட்டு உள்ளது.

பாராட்டு

பாராட்டு

முன்பின் யாரேன்றெ தெரியாத நபர்களுக்கு நிர்வாணப் படங்களை அனுப்புவது என்பது தண்டனைக்குரிய குற்றமாகும். எனவே, இது குறித்துத் தெரிந்ததும் நிலைமையைச் சிறப்பாகக் கையாண்ட பைலட்டிற்கு இணையத்தில் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+