ஏர் இந்தியா விமான விபத்து குறித்த கட்டுரை.. கொதித்தெழுந்த விமானிகள் கூட்டமைப்பு.. பறந்த நோட்டீஸ்!
டெல்லி: ஏர் இந்தியா விமான விபத்து, விமானிகளின் அலட்சியம் காரணமாக நடைபெற்றது என்ற ரீதியில் அமெரிக்கா ஊடகங்கள் கட்டுரை வெளியிட்டு இருந்த நிலையில், இதற்கு கடும் கணடனத்தை இந்திய விமானிகள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. மேலும், கட்டுரைக்கு வருத்தம் தெரிவித்து, மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு கடந்த மாதம் 12 ஆம் தேதி ஏர் இந்தியா விமானம் புறப்பட்டு சென்றது. இந்த விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த ஒரே ஒரு பயணியை தவிர ஏனைய அனைத்து பயணிகளும் உயிரிழந்தனர். விமானம் விழுந்த இடத்தில் இருந்தவர்கள் உள்பட மொத்தம் 260 பேர் இந்த விபத்தில் பலியாகினர்.

ஏர் இந்தியா விமான விபத்து
நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக அண்மையில் முதல் கட்ட அறிக்கை வெளியானது. இந்த அறிக்கையில் விமானத்திற்கு எரிபொருள் சப்ளை செய்யும் ஸ்விட்ச் கட் ஆனதே காரணம் என்று தெரியவந்துள்ளது. விமானத்தில் தொழில் நுட்ப கோளாறு ஏற்படவில்லை என்பது விசாரணை அறிக்கை மூலம் தெரியவந்து இருப்பதாக ஏர் இந்தியாவும் கூறியுள்ளது.
இந்திய விமானிகள் கூட்டமைப்பு கண்டனம்
இதற்கிடையே, முதல் கட்ட அறிக்கையை வைத்து எந்த ஒரு இறுதி முடிவுக்கும் வந்துவிட முடியாது என மத்திய அரசு கூறியுள்ளது. இதற்கிடையேதான், ஏர் இந்தியா விமான விபத்து அறிக்கையை வைத்து அமெரிக்காவின் வால்ஸ் ஸ்டீரீட் ஜர்னல் மற்றும் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கட்டுரை ஒன்றை வெளியிட்டு இருந்தது. அதில், இ விமானிதான் கவனக்குறைவாக சுவிட்சை ஆஃப் செய்திருப்பார் என செய்தி வெளியிட்டு இருந்தன. இதற்கு இந்திய விமானிகள் கூட்டமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
விபத்து குறித்து தவறான தகவல்களை பரப்பக் கூடாது எனவும் மன்னிப்பு கோர வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அந்த நோட்டீஸில் கூறப்பட்டு உள்ளதாவது:- விசாரணை நடைபெற்று கொண்டு இருக்கும் போதே, பொறுப்பற்ற முறையில் அறிக்கை வெளியிட கூடாது.
மன்னிப்பு கேட்க வேண்டும்
ஊடக தர்மத்தை நிலைநிறுத்த வேண்டும் என்றும், பொதுமக்களை தவறாக வழிநடத்தும் தவறான தகவல்களைப் பரப்புவதைத் தவிர்க்க வேண்டும். வெளியான அறிக்கை இறந்து போன இரு விமானிகளை அவமதிக்கும் வகையிலும், அவர்களின் குடும்பத்தாருக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும் வகையிலும் இது உள்ளது.
அவர்கள் வருத்தம் தெரிவித்து, மன்னிப்பு கேட்க வேண்டும். விசாரணை முழுமையாக நிறைவடையும் வரை இது தொடர்பான எந்த தகவல்களையும் தெரிவிக்கக் கூடாது என்று தெரிவித்துள்ளது. மேலும் நோட்டீஸ்க்கு சட்டப்படி விளக்கம் அளிக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
ஏர் இந்தியா நிறுவன சி இ ஓ
முன்னதாக ஏர் இந்தியா விபத்து தொடர்பாக முதல் கட்ட அறிக்கை வெளியான சில நாட்கள் கழித்து, ஏர் இந்தியா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கேம்பல் வில்சன் சில முக்கிய கருத்துகளை கூறியிருந்தார். அவர் கூறுகையில், "ஏஏஐபி முதற்கட்ட அறிக்கையில் தங்களுக்கு எந்தவொரு பரிந்துரையும் வழங்கப்படவில்லை என்றும் இந்த விவகாரத்தில் முன்முடிவுகளைத் தவிர்க்குமாறும் கேட்டுக்கொண்டார். விமானம் அல்லது என்ஜினில் அல்லது அதன் பராமரிப்பில் சிக்கல்களும் கண்டறியப்படவில்லை" என்றும் கூறியிருந்தார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications