"எனக்கும், பிரதமருக்கும் மனைவி இல்லை".. ராகுல் சொன்னதுமே சத்தமாக சிரித்த எம்பிக்கள்.. என்ன நடந்தது? வீடியோ
டெல்லி: மகளிர் இடஒதுக்கீடு, தொகுதி மறுவரையறை மசோதாக்கள் இன்று எதிர்க்கட்சிகளால் லோக்சபாவில் தோற்கடிக்கப்பட்டன. முன்னதாக பரபரப்பான விவாதம் நடந்தது. அப்போது எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, ''எனக்கும், பிரதமருக்கும் மனைவி இல்லை'' என்று வேடிக்கையாக கூறியது அங்கிருந்த மத்திய அமைச்சர்கள், எம்பிக்கள் அனைவரும் குலுங்கி குலுங்கி சிரிக்க வைத்தது.
நாடாளுமன்றத்தின் 3 நாள் சிறப்பு கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. நாடாளுமன்றம் மற்றும் சட்டசபையில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது, மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களில் லோக்சபா தொகுதி மறுவரை செய்வது தொடர்பாக 3 மசோதாக்கள் நேற்று தாக்கல் செய்யப்பட்டன.

மத்திய சட்ட அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் 131-வது அரசியலமைப்பு சட்டத்திருத்த மசோதா 2026 (பெண்களுக்கான 33 இடஒதுக்கீட்டை நாடாளுமன்றம், சட்டசபையில் உறுதி செய்யும் மசோதா) மற்றும் மாநிலங்களுக்கான தொகுதி மறுசீரமைப்பு மசோதா 2026 (Delimitation Bill) 2026 ஆகியவற்றை அறிமுகம் செய்தார். அதேபோல் யூனியன் பிரதேச சட்டங்கள் (திருத்த) மசோதா, 2026-யை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிமுகம் செய்தார்.
அதன்பிறகு நேற்றும், இன்றும் விவாதம் நடந்தது. இதில் 3 மசோதாக்களும் எதிர்க்கட்சிகளால் தோற்கடிக்கப்பட்டன. முன்னதாக, இன்று 2வது நாளாக விவாதம் நடந்தது. இந்த விவாதத்தில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பங்கேற்று பேசினார். அப்போது ராகுல் காந்தி பேசுகையில், ''இந்த சபையில் உள்ள நாம் அனைவரும் பல்வேறு பெண்களிடம் வாழ்க்கை பாடங்களை கற்று கொண்டுள்ளோம். தாய், சகோதரிகள் இன்னும் சொல்லபோனால் மனைவிகளிடம் இருந்து நாம் பலவற்றை கற்று கொண்டு இருப்போம்.
ஆனால் பிரதமருக்கும், எனக்கும் மனைவி இல்லை. இதனால் மனைவியிடம் இருந்து கிடைக்கும் 'இன்புட்' எங்களுக்கு கிடைப்பது இல்லை. இருப்பினும் தாய், சகோதரிகள் எங்களுக்கு உண்டு'' என்றார். ராகுல் காந்தி இப்படி கூறியதுமே மத்திய அமைச்சர்கள், லோக்சபாவில் இருந்த எம்பிக்கள் அனைவரும் குலுங்கி குலுங்கி சிரித்தனர். மொத்த சபையுமே சிரிப்பலையில் மூழ்கியது. இந்த சமயத்தில் பிரதமர் மோடி, மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் உள்ளிட்டோரும் சபையில் இல்லை.
We and the Prime Minister don’t have wives, so we don’t get feedback from that angle. But I do have my mother and sister.
— @Moini (@moini_565) April 17, 2026
Yesterday, my sister managed in 5 minutes what I couldn’t in 20 years—make Amit Shah Ji smile.”
— Rahul Gandhi Ji 😂#DMKLiesExposed Starmer #PMModi pic.twitter.com/HztBrgMQvN
ராகுல் காந்திக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. பிரதமர் மோடி தனது மனைவியை விட்டு பிரிந்து வாழ்கிறார். இதனால் இருவருக்கும் மனைவியிடம் இருந்து எந்த 'இன்புட்டும்' கிடைப்பது இல்லை என்று கூறினார். அதன்பிறகு தொடர்ந்து ராகுல் காந்தி பேசுகையில், '' நான் எனது 20 வருட அரசியல் வாழ்க்கையில் செய்ய முடியாத ஒன்றை என் சகோதரி நேற்று 5 நிமிட பேச்சில் சாதித்தார். அது அமித் ஷாவை சிரிக்க வைத்தது'' என்றார். இதை கேட்டதும் அங்கிருந்த மத்திய அமைச்சர்கள், அனைத்து கட்சி எம்பிகளும் சத்தமாக சிரித்தனர். இதனால் லோக்சபா முழுவதும் சிரிப்பலையில் மூழ்கியது. பரபரப்பான நடந்து வந்த விவாதங்களுக்கு நடுவே ராகுல் காந்தியின் இந்த கருத்துகள் இன்று லோக்சபாவில் அனைவரையும் சிரிக்க வைத்தது.
முன்னதாக நேற்றைய தினம் லோக்சபாவில் நடந்த மசோதா மீதான விவாதத்தில் ராகுல் காந்தியின் தங்கையான பிரியங்கா காந்தி பங்கேற்று பேசினார். அப்போது அவர், ''2029 லோக்சபா தேர்தலுக்கு முன்னதாகவே பாஜகவை பலப்படுததும் நோக்கில் மத்திய அரசு இந்த மசோதாவை கொண்டு வந்ததுள்ளது'' என்று கூறியதோடு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, மவுரிய பேரரசர் சந்திரகுப்த மவுரியரின் ஆலோசகர் சாணக்கியருடன் ஒப்பிட்டு, "இன்று சாணக்கியர் இருந்திருந்தால், பாஜகவின் தேர்தல் வெற்றி திட்டத்தை பார்த்து வியந்திருப்பார்'' என்று கூறினார். இதனை கேட்டதும் சபையில் இருந்த அமித்ஷாவை சிரித்தார். இதனை தான் ராகுல் காந்தி இன்றைய தனது பேச்சில் கூறினார்.












Click it and Unblock the Notifications