“முஸ்லிம் லீக் வந்தே மாதரம் பாடலை வெறுத்ததால்.. நேரு அதை தேசிய கீதமாக ஆக்கவில்லை” - மோடி
டெல்லி: "முஸ்லிம் லீக் கட்சி வந்தே மாதரம் பாடலை வெறுத்தது. ஆகவே வந்தே மாதரம் பாடல் இஸ்லாமியர்களை எரிச்சல் அடைய செய்யலாம் என கருதிய முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு அப்பாடலை தேசிய கீதமாக ஆக்கவில்லை" என பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்திருக்கிறார்.
நாடாளுமன்ற மக்களவையில் வந்தே மாதரம் பாடல் குறித்த விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தின்போது பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் மற்றும் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவை கடுமையாக விமர்சித்துள்ளார். முஸ்லிம் லீக்-க்கு காங்கிரஸ் அடிபணிந்துவிட்டதாகவும், தேசிய பாடலை துண்டு துண்டாகப் பிரித்துவிட்டது என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். வந்தே மாதரம் பாடல் முஸ்லிம்களை தூண்டி விடும் என்று நேரு கூறியதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

பிரதமரின் இந்த பேச்சுக்கு கடும் கண்டனங்கள் எழுந்தன. எதிர்க்கட்சி எம்பிக்கள், வெட்கக்கேடு, வெட்கக்கேடு என்று முழங்கினர். அப்போது பிரதமர், கடந்த நூற்றாண்டில் சில சக்திகள் தேசியப் பாடலுக்கு துரோகம் இழைத்தன. யார் அதைச் செய்தார்கள் என்பதை அடுத்த தலைமுறைக்குச் சொல்வது நமது கடமை என கூறினார். முகமது அலி ஜின்னா தலைமையிலான முஸ்லிம் லீக், 1937-ல் வந்தே மாதரத்திற்கு எதிராக ஒரு இயக்கத்தைத் தொடங்கியபோது, காங்கிரஸ் மற்றும் நேரு அதனை எதிர்க்காமல், மாறாக, வந்தே மாதரம் குறித்து விசாரிக்கத் தொடங்கினர் என்று விமர்சித்திருந்தார்.
மேலும் பேசிய பிரதமர், "ஜின்னாவின் எதிர்ப்பிற்குப் பிறகு, பண்டித ஜவஹர்லால் நேரு, சுபாஷ் சந்திரபோஸிற்கு ஒரு கடிதம் எழுதினார். அதில், வந்தே மாதரத்தின் பின்னணியை தான் படித்ததாகவும், அது முஸ்லிம்களைத் தூண்டிவிட்டு எரிச்சலடையச் செய்யலாம் என்று தான் நினைப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். மேலும், வந்தே மாதரத்தின் பயன்பாட்டை, அதுவும் பங்கிம் சந்திரரின் வங்காளத்தில் எவ்வாறு பயன்படுத்தலாம் என்று ஆராய்வோம் என்றும் நேரு எழுதியிருந்தார்.
வந்தே மாதரம் 50 ஆண்டுகளை எட்டியபோது இந்தியா பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்தது. 100 ஆண்டுகளை எட்டியபோது அவசரநிலையின் பிடியில் இருந்தது. விடுதலைப் போராட்டத்திற்கு ஊக்கமளித்த இந்த பாடல், துரதிர்ஷ்டவசமாக அப்போது இந்தியாவின் ஒரு 'இருண்ட காலத்திற்கு' சாட்சியாக இருந்தது.
இப்போது, வந்தே மாதரம் பாடல் 150 ஆண்டுகளை நிறைவு செய்யும் இந்த வேளையில், 1947-ல் நமக்கு சுதந்திரத்தைப் பெற்றுத் தந்த பெருமையையும், நமது கடந்த காலத்தின் மகத்தான பகுதியையும் மீட்டெடுக்கும் ஒரு வாய்ப்பாக இது அமைகிறது. பங்கிம் சந்திர சாட்டர்ஜி 1875 நவம்பரில் எழுதிய இந்த பாடல், சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு விரைவாகவே ஒரு வலிமைமிக்க முழக்கமாக மாறியது" என்று கூறியுள்ளார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications