தமிழகத்தின் கலாச்சார அடையாளமாக திகழும் பொங்கல் விழா! பிரதமர் மோடி வாழ்த்து!
டெல்லி: தமிழகத்தின் கலாச்சார அடையாளமாக பொங்கல் திகழ்கிறது என பிரதமர் மோடி வாழ்த்துக் கூறியிருக்கிறார்.
தமிழர் திருநாளாம் பொங்கல் விழா உலகெங்கும் வாழும் தமிழ் பெருங்குடி மக்களால் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
வீட்டுப்பொங்கல், மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல் என அடுத்தடுத்து மூன்று நாட்களுக்கு கிராமங்கள் தோறும் பொங்கல் விழா போட்டிகள் களைக்கட்டத் தொடங்கியுள்ளன.

மோடி வாழ்த்து
இந்நிலையில் பிரதமர் மோடி தமிழக மக்களுக்கு விடுத்துள்ள பொங்கல் வாழ்த்துச் செய்தியில், தமிழகத்தின் எழுச்சிமிக்க கலாச்சாரத்தின் அடையாளமாக பொங்கல் திகழ்கிறது என பெருமிதம் தெரிவித்திருக்கிறார். மேலும், இந்த சிறப்பு வாய்ந்த நாளன்று அனைவருக்கும் குறிப்பாக உலகெங்கும் உள்ள தமிழ் மக்களுக்கு எனது வாழ்த்துகள் என பிரதமர் மோடி தனது டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

பொங்கல் விழா
மேலும், இயற்கையுடனான நமது பிணைப்பும் நமது சமூகத்தின் சகோதரத்துவ உணர்வும் இன்னும் ஆழமாவதற்கு நான் பிரார்திக்கிறேன் என அவர் தெரிவித்திருக்கிறார். பொங்கல் விழாவில் கலந்துகொள்ள பிரதமர் மோடி கடந்த 12-ம் தேதி தமிழகம் வருவதாக இருந்த நிலையில், கொரோனா பரவல் காரணமாக அந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அமித்ஷா வாழ்த்து
பிரதமர் மோடியை தொடர்ந்து பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அனைத்து தமிழ் நண்பர்களுக்கும் பொங்கல் வாழ்த்துகள் என தமிழிலேயே தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியிருக்கிறார். மேலும், இந்த மங்களகரமான திருநாள் அனைவரது வாழ்விலும் அளவற்ற மகிழ்ச்சியையும், நல்லிணக்கத்தையும் நல்ல ஆரோக்யத்தையும் வழங்கட்டும் எனத் தெரிவித்திருக்கிறார்.
Recommended Video

ராகுல் வாழ்த்து
இதனிடையே ராகுல்காந்தி விடுத்துள்ள பொங்கல் வாழ்த்துச் செய்தியில், தமிழ் மொழி பேசும் சகோதர, சகோதரிகளுக்கு தமது பொங்கல் வாழ்த்தை தெரிவித்துக் கொள்வதாகவும் ஆரோக்கியதுடனும், மகிழ்ச்சியுடனும் வாழ வேண்டும் என வாழ்த்துவதாகவும் தெரிவித்திருக்கிறார். கடந்தாண்டு இதே பொங்கல் திருநாளில் மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டை காண வருகை புரிந்த ராகுல்காந்தி, மதுரையில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்துகொண்டார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications