இந்தியா - நேபாளம் இடையே சரக்கு போக்குவரத்து ரயில்.. இரு நாட்டு பிரதமர்கள் இன்று தொடங்கி வைத்தனர்!
டெல்லி : நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹல் பிரசந்தா, இன்று இந்திய பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசியுள்ளார். இந்தியா மற்றும் நேபாளம் இடையேயான சரக்கு ரயில் போக்குவரத்து சேவையை இரு நாட்டு தலைவர்களும் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
நேபாள பிரதமர் பிரசந்தா, டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று பிற்பகலில் வருகை தந்தார். அவருடன் நேபாள அரசின் உயர்மட்டக் குழுவினரும் வருகை புரிந்தனர். இந்தியா வந்துள்ள நேபாள பிரதமர் பிரசந்தாவுக்கு டில்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்தியா வருகை தந்துள்ள நேபாள பிரதமரை மத்திய வெளியுறவு இணை அமைச்சர் மீனாட்சி லேகி வரவேற்றார். நேபாள பிரதமரின் இந்திய பயணம் இந்தியா - நேபாள உறவுக்கு புதுப்பிக்கப்பட்ட உத்வேகத்தை அளிக்கும் என மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அரித்தம் பாக்சி கூறியுள்ளார்.
பிரதமர் மோடி உடன் சந்திப்பு : இன்று காலை 10.30 மணிக்கு மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார் நேபாள பிரதமர் பிரசந்தா. பின்னர் டெல்லியில் உள்ள ஹைதராபாத் மாளிகையில் பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசினார்.
பிரதமர் மோடியைச் சந்தித்து இரு நாடுகளுக்கு இடையிலான உறவு மற்றும் பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பு, இரு நாட்டு வர்த்தகம் குறித்து நேபாள பிரதமர் பிரசந்தா பேச்சுவார்த்தை நடத்தி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த மே 28ஆம் தேதி டெல்லியில் திறக்கப்பட்ட புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் இடம் பெற்றுள்ள இந்திய வரைபடத்திற்கு நேபாளம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அகண்ட பாரதம் என்ற தலைப்பில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் இந்திய வரைபடம் ஒன்று காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அதில் நேபாளமும் இடம்பெற்றுள்ளது. இது நேபாளத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது.
சரக்கு போக்குவரத்து ரயில் : இந்த விவகாரம் குறித்து இந்திய அரசிடம் எடுத்துச் செல்ல இருப்பதாக நேபாள பிரதமர் பிரசந்தா கூறியிருந்தார். நேபாள பிரதமர் பிரசந்தா, இந்த வரைபட சர்ச்சை தொடர்பாக இந்திய பிரதமர் மோடியிடம் பேசியதாக கூறப்படுகிறது.
மேலும், இரு நாட்டு பிரதமர்களும் இன்று இந்தியா மற்றும் நேபாளம் இடையே சரக்கு போக்குவரத்து ரயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளனர். இரு நாடுகளுக்கு இடையே ஒப்பந்தங்களுக்கான பரிமாற்றங்கள், பிரதமர் மோடி மற்றும் நேபாள பிரதமர் பிரசந்தா முன்னிலையில் நடைபெற்றன.
இதுபற்றி பிரதமர் மோடி பேசும்போது, போக்குவரத்து ஒப்பந்தங்கள் இன்று கையெழுத்திடப்பட்டுள்ளன. மக்களின் இணைப்பை அதிகரிக்க புதிய ரெயில் வழிகளை நாம் நிறுவியுள்ளோம். இந்தியா மற்றும் நேபாளம் இடையே நீண்டகால மின்சார வர்த்தக ஒப்பந்தமும் இன்று ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
இரு நாட்டு உறவு : இரு நாடுகள் இடையேயான மதம் மற்றும் கலாசார உறவுகள் மிக பழமையானது மற்றும் வலிமையானது. இதனை இன்னும் வலுப்படுத்தும் வகையில், ராமாயண பாதை தொடர்புடைய திட்டங்களை விரைவுப்படுத்த நாங்கள் திட்டமிட்டு உள்ளோம் எனக் கூறியுள்ளார்.

மேலும், இந்த சுற்றுப்பயணத்தின்போது இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர் ஆகியோரையும் நேபாள பிரதமர் பிரசந்தா சந்தித்துப் பேச உள்ளார். மேலும், உஜ்ஜைன் மற்றும் இந்தூருக்கும் செல்கிறார் பிரசந்தா.
4 நாள் பயணம் முடிந்து சனிக்கிழமை மாலை காத்மண்டுவுக்கு புறப்படுவார். பிரசந்தா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நேபாள பிரதமராக பதவியேற்ற பிறகு மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டு பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்!












Click it and Unblock the Notifications