மே 3-ம் தேதி வரை இந்தியாவில் ஊரடங்கு... லாக்டவுனை மேலும் 19 நாட்களுக்கு நீட்டித்தார் மோடி
டெல்லி: மத்திய அரசு விதித்திருந்த ஊரடங்கு உத்தரவு இன்றுடன் முடியவிருந்த நிலையில் அதனை மே மாதம் 3-ம் தேதி வரை நீட்டித்துள்ளார் பிரதமர் மோடி.
அதன்படி நாளை முதல் மேலும் 19 நாட்களுக்கு நாடு தழுவிய அளவில் லாக்டவுன் நீட்டிக்கப்படுகிறது. ஏற்கனவே 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் மேலும் 19 நாட்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் இந்தியாவில் லாக்டவுன் காலம் 40 நாட்கள் ஆகிறது.

இதனிடையே ஊரடங்கை நீட்டிப்பது குறித்து நாட்டு மக்களுக்கு உரையாற்றிய அவர், லாக்டவுனால் மக்கள் படும் சிரமங்களும், துயரங்களும் தனக்கு புரிகிறது என்றும் இருப்பினும் கொரோனாவை ஒழிப்பதற்கு இதுவே சிறந்த வழிமுறை எனவும் தெரிவித்தார். மேலும், கொரோனா தொற்றை பொறுத்தவரை மற்ற நாடுகளை காட்டிலும் இந்தியாவில் கட்டுப்படுத்தப்பட்டிருப்பதாக கூறினார்.
நாடு முழுவதும் அரசுக்கு ஒத்துழைப்பு அளித்து ஊரடங்கை மக்கள் கடைபிடித்து வருவது கொரோனாவுக்கு எதிரான போரில் மேலும் உத்வேகத்தை தருவதாகவும், ராணுவ வீரர்களை போல் மக்கள் கட்டுப்பாடுகள் காக்கிறார்கள் எனவும் பிரதமர் மோடி குறிப்பிட்டு பேசினார். கொரோனா வைரஸ் விவகாரத்தில் பாதிப்புகள் அதிகமாவதற்கு முன்பே அதனை தடுப்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுவிட்டதாக கூறினார்.
இந்நிலையில் ஏப்ரல் 30-ம் தேதி வரை தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிபதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று உத்தரவு பிறப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது உள்ள கட்டுப்பாடுகளை வரும் மே மாதம் 3-ம் தேதி வரை நாடு தழுவிய அளவில் மக்கள் கடைபிடிக்க வேண்டும் என மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.
-
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications