மியான்மர் - தாய்லாந்தை உலுக்கிய நிலநடுக்கங்கள்.. உதவிக்கு தயாரான இந்தியா.. மோடி முக்கிய அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: அண்டை நாடான மியான்மர் மற்றும் தாய்லாந்தில் அடுத்தடுத்து 2 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளது. இதில் இருநாடுகளும் பாதிப்பை எதிர்கொண்டுள்ள நிலையில் உதவி செய்ய நம் நாடு தயாராக இருப்பதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

அண்டை நாடாக மியான்மர் உள்ளது. இந்நிலையில் தான் இன்று திடீரென்று மியான்மரில் அடுத்தடுத்து 2 நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இன்று காலை சுமார் 11.50 மணியளவில் முதலில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது 7.7 என்ற அளவில் ரிக்டர் அளவுகோலில் பதிவானது.

Earthquake Myanmar Narendra Modi

இதனால் பல கட்டடங்கள் குலுங்கின. மக்கள் அலறியடித்து வெளியே ஓடிவந்தனர். இந்த அதிர்ச்சியில் இருந்து மக்கள் மீள்வதற்குள் இரண்டாவது நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 6.4 என்ற அளவில் பதிவானது.

இந்த நிலநடுக்கம் என்பது மத்திய மியான்மரின் மான்வாவில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டிருந்தது. பல கட்டடங்கள் சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. மியான்மரில் முதற்கட்ட தகவலின்படி 3 பேர் வரை பலியாகி உள்ளனர். மியான்மரின் இந்த நிலநடுக்கம் எல்லையோரத்தில் உள்ள நம் நாட்டின் கொல்கத்தா, மணிப்பூர் தலைநகர் இம்பால், மேகலாயாவின் கிழக்கு காரோ மலைப்பகுதிகளில் உணரப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி மியான்மரின் அண்டை நாடாக உள்ள வங்கதேசம் மற்றும் தாய்லாந்திலும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. அங்கும் கட்டடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் அலறியடித்து வீட்டுக்கு வெளியே ஓடிவந்துள்ளனர். குறிப்பாக தாய்லாந்தில் அடுக்குமாடி கட்டடம் இடிந்து விழுந்துள்ளது. தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி சட்டுச்சாக் மாவட்டத்தில் உள்ள அடுக்குமாடி கட்டடம் இடிந்து விழும் வீடியோ வெளியாகி உள்ளது. பல சாலைகளில் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளன. மேலும் பாங்காங்கில் மொத்தம் 3 பேர் வரை பலியாகி உள்ளனர். மேலும் ஏராளமான மக்கள் இடிபாடுகளில் சிக்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

மியான்மர் மற்றும் தாய்லாந்தில் ஏற்பட்டுள்ள இந்த நிலநடுக்கங்கள் என்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மியான்மரில் தற்போது ராணுவ ஆட்சி நடக்கிறது. இதனால் உலக நாடுகள் உதவி செய்ய வேண்டும் என்று மியான்மர் நாட்டின் அரசு சார்பில் கேட்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் உதவிக்கு நம் நாடு தயாராகிவிட்டது.

இதுதொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது: மியான்மர் மற்றும் தாய்லாந்தில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கத்தை நினைத்து கவலையளிக்கிறது. அனைவரின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்காக பிரார்த்தனை செய்கிறோம். இந்தியா சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்க தயாராக உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தயார் நிலையில் இருக்க கேட்டு கொள்ளப்பட்டுள்ளது. மியான்மர் மற்றும் தாய்லாந்து அரசுகளுடன் தொடர்பில் இருக்கும்படி வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம் கேட்டு கொள்ளப்பட்டுள்ளது'' என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+