Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

“போர் நடந்தாலும்.. எரிபொருள் கொள்முதலில் பாதிப்பு இருக்காது”.. நாடாளுமன்றத்தில் மோடி உறுதி!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மத்திய கிழக்கில் ஏற்பட்டிருக்கும் போர் பதற்றம் காரணமாக, இந்தியாவுக்கு எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியிருந்தது. இந்நிலையில் இது குறித்து மக்களவையில் பிரதமர் மோடி விளக்கமளித்து வருகிறார். அவர் பேசுகையில், "போர் நடந்தாலும் எரிபொருள் கொள்முதலில் பாதிப்பு இல்லாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என்று உறுதியளித்துள்ளார்.

மத்திய கிழக்கில் போரினால் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகளுக்கு இரங்கல் தெரிவித்த மோடி, 3 வாரங்களுக்கு மேலாக ஈரான் போர் தொடர்கிறது; இதனால் உலகப் பொருளாதாரம் பாதிக்கப்பட்டிருக்கிறது என்று கூறியிருக்கிறார்.

PM Modi

உதவிக்கு தயாராக உள்ளது

மேலும் அவர் பேசியதாவது, "அதேபோல போர்ப் பகுதிகளில் சிக்கியிருக்கும் ஒவ்வொரு இந்தியருக்கும் சாத்தியமான அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டு வருகிறது. அரசு உணர்வுபூர்வமாகவும், விழிப்புணர்வுடனும், ஒவ்வொரு உதவிக்கும் தயாராகவும் உள்ளது. இந்திய தூதரகங்கள் தொடர்ந்து அறிவுறுத்தல்களை வெளியிட்டு வருகின்றன.

இந்தியர்களின் பாதுகாப்பு

இந்தியாவிலும், பாதிக்கப்பட்ட பிற நாடுகளிலும் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறைகளும், அவசர உதவி எண்களும் நிறுவப்பட்டுள்ளன. இவை பாதிக்கப்பட்ட நபர்களுக்கு விரைவான தகவல்களை வழங்குகின்றன. இந்த நெருக்கடியான சூழ்நிலையில் வெளிநாட்டிலும், உள்நாட்டிலும் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பே தலையாய முன்னுரிமையாக இருந்து வருகிறது.

பாதிக்க்பபட்டவர்களுக்கு உதவி

போர் தொடங்கியதிலிருந்து இதுவரை 3.75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்பியுள்ளனர். மேற்கு ஆசிய அரசுத் தலைவர்கள் பலருடன் நான் இரண்டு கட்ட தொலைபேசி உரையாடல்களை மேற்கொண்டேன், அவர்கள் அனைவரும் இந்தியர்களின் பாதுகாப்பிற்கு முழு உத்தரவாதம் அளித்தனர்.

துரதிருஷ்டவசமாக இந்த காலகட்டத்தில் சில இந்தியர்கள் உயிர் இழந்தனர், சிலர் காயமடைந்தனர். இத்தகைய கடினமான சூழ்நிலைகளில், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தேவையான உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

ஹார்முஸ் ஜலசந்தி

ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சரக்கு போக்குவரத்து போரின் ஆரம்பத்திலிருந்தே சவாலாக உள்ளது. கச்சா எண்ணெய், எரிவாயு, உரங்கள் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் இந்தியாவுக்கு இவ்வழியேதான் வருகின்றன. பெட்ரோல், டீசல், எரிவாயு விநியோகம் பாதிக்கப்படாமல் இருப்பதை அரசு உறுதிசெய்து வருகிறது, இதுவே எங்கள் முக்கிய கவனம்.

இந்தியாவின் எண்ணெய் இருப்பு

இந்தியாவின் எல்பிஜி தேவையில் 60 சதவீதம் இறக்குமதி செய்யப்படுகிறது. நிலையற்ற விநியோகம் காரணமாக, உள்நாட்டு விநியோகத்திற்கு அரசு முன்னுரிமை அளித்து வருகிறது. எல்பிஜி உற்பத்தியும் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவிடம் 5.3 மில்லியன் மெட்ரிக் டன்னுக்கும் அதிகமான பெட்ரோலிய இருப்பு உள்ளது. மேலும், 6.5 மில்லியன் மெட்ரிக் டன்னுக்கும் அதிகமான கூடுதல் சேமிப்பு ஏற்பாடுகளும் செய்யப்படுகின்றன. எண்ணெய் நிறுவனங்கள் வைத்திருக்கும் இருப்புக்கள் இதற்கு அப்பாற்பட்டவை.

விவசாயிகளின் நலன்

கடந்த 11 ஆண்டுகளில் இந்தியாவின் சுத்திகரிப்புத் திறன் கணிசமாக அதிகரித்துள்ளது. அரசு பல்வேறு நாடுகளின் சப்ளையர்களுடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளது. எங்கிருந்து சாத்தியமோ அங்கிருந்து எண்ணெய், எரிவாயு விநியோகம் தொடர்வதை உறுதி செய்கிறது. இந்திய விவசாயிகள் இந்தக் நெருக்கடியிலிருந்து பாதுகாக்கப்படுவர். இயற்கை விவசாயம் ஊக்குவிக்கப்பட்டு, அரசு தொடர்ந்து விவசாயிகளுக்கு உதவும்.

பிரதமர் மோடி வாக்குறுதி

இந்த மோதல் பொருளாதாரம், தேசிய பாதுகாப்பு, மனிதாபிமான ரீதியாக முன்னெப்போதும் இல்லாத சவால்களை இந்தியாவின் முன் வைத்துள்ளது. போர் நடைபெறும் மற்றும் பாதிக்கப்பட்ட நாடுகளுடன் இந்தியாவுக்கு விரிவான வர்த்தக உறவுகள் உள்ளன. நமது நாடாளுமன்றத்தின் ஒருமித்த குரல் உலகை சென்றடைவது அவசியம். கச்சா எண்ணெய், எரிவாயு தேவையின் பெரும்பகுதியை பூர்த்தி செய்யும் இந்தப் பிராந்தியம், உலக வர்த்தகத்திற்கும் மிக முக்கியமானது" என பேசியிருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+