ஏர்போர்ட்டிற்கு வண்டியை விடுங்க.. சல்மானுக்காக விதிகளை மீறிய மோடி.. சவுதி மேல் இவ்வளவு பாசமா பாஸ்?
சவுதி முடிஇளவரசர் சல்மானை வரவேற்பதற்காக பிரதமர் மோடி விதிமுறைகளை மீறியது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video

டெல்லி: சவுதி அரேபியாவின் முடிஇளவரசர் சல்மானை வரவேற்பதற்காக பிரதமர் மோடி விதிமுறைகளை மீறியது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
பாதுகாப்பு ஒப்பந்தம் உள்ளிட்ட முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதற்காக சவுதி முடிஇளவரசர் முகமது பின் சல்மான் இந்தியா வந்து இருக்கிறார். இரண்டு நாட்களுக்கு முன் பாகிஸ்தான் சென்ற சல்மான் தற்போது இந்தியா வந்துள்ளார்.
இன்று இந்தியாவுடன் 5 முக்கிய ஒப்பந்தங்களை சல்மான் கையெழுத்திட உள்ளார். இதில் ராணுவம் சம்பந்தப்பட்ட ஒப்பந்தங்களும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

நேரில் சென்று அழைத்தார்
ரியாத்தில் இருந்து கிளம்பி நேற்று இரவு 9.20 மணிக்கு சல்மான் டெல்லி விமான நிலையம் வந்தடைந்தார். சல்மானை பிரதமர் மோடி நேரடியாக விமான நிலையம் சென்று வரவேற்றார். இதனால் டெல்லியில் விமான போக்குவரத்து அப்போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. விமான நிலையத்திலேயே அவருக்கு பெரிய வரவேற்பு கொடுக்கப்பட்டது.

ஏன் தவறு
நேற்று பிரதமர் மோடி இதற்காக விதிமுறைகளை மீறி இருக்கிறார். பொதுவாக இந்திய பிரதமர் ஒருவர் வெளிநாட்டு தலைவரை நேரடியாக விமான நிலையத்தில் வரவேற்க மாட்டார். வெளியுறவுத்துறை அமைச்சர்தான் வரவேற்பார். ஆனால் பிரதமர் மோடி, இந்த விதிகளை புறந்தள்ளிவிட்டு, சல்மானுக்காக விமான நிலையத்திற்கே வந்து இருக்கிறார்.

பெரும் சர்ச்சை
பிரதமர் மோடியின் இந்த செயல் நிறைய கேள்விகளை, சர்ச்சைகளை எழுப்பி இருக்கிறது. சல்மான் முக்கியமான தலைவர்தான் ஆனாலும் இந்தியாவின் பாதுகாப்பு பிரச்சனையாக இருக்கும் நேரத்தில் இது தேவையா என்று பலர் கேள்வி எழுப்பி உள்ளனர். பிரதமர் மோடியே இது போல விதிமுறைகளை மீறுவது எப்படி சரியாக இருக்கும் என்று பலரும் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள்.

முன்பு
இதற்கு முன்பே பிரதமர் மோடி இதேபோல் ஒருமுறை செய்துள்ளார். அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா இந்தியா வந்தபோது, பிரதமர் மோடி நேரடியாக விமான நிலையம் சென்று வரவேற்றார். அதன்பின் இப்போது சல்மானுக்காகத்தான் மோடி இப்படி செய்துள்ளார். பிரதமர் மோடி சல்மானை அந்த அளவிற்கு மதிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications