மத்திய அமைச்சரவை மாற்றம்.. சுகாதாரத்துறைக்கு மண்டாவியா நியமனம்.. யாருக்கு என்ன துறை? - முழு லிஸ்ட்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மத்திய அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் புதிய அமைச்சர்களுக்கான இலாக்காக்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. புதிதாக உருவாக்கப்பட்ட மத்திய கூட்டுறவுத்துறைக்கு அமைச்சராக அமித் ஷா நியமனம் நியமிக்கப்பட்டுள்ளார். புதிய சுகாதாரத்துறை மத்திய அமைச்சராக மன்சுக் மண்டாவியா நியமிக்கப்பட்டுள்ளார்.

மத்திய அமைச்சரவையில் மிகப்பெரிய மாற்றம் இன்று செய்யப்பட்டது. 12 அமைச்சர்கள் ராஜினாமா செய்துள்ளனர். சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் உள்ளிட்ட முக்கிய அமைச்சர்கள் ராஜினாமா செய்துள்ளனர். மொத்தம் 12 பேர் எந்த புதிய பொறுப்பும் கொடுக்கப்படாமல் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். சதானந்த கவுடா, ரவி ஷங்கர் பிரசாத், தாவர்சந்த் கெஹ்லாட், ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க், டாக்டர் ஹர்ஷ் வர்தன், பிரகாஷ் ஜவடேக்கர், சந்தோஷ் குமார் கங்வார், பாபுல் சுப்ரியா, தோற்றே சஞ்சே, ரத்தன் லால் கட்டாரியா, பிரதாப் சந்திர சாரங்கி, தபஸ்ரீ சவுத்திரி ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.

PM Modi Cabinet Expansion: Full list of Union ministers and their portfolios

புதிதாக 43 அமைச்சர்கள் பதவி ஏற்று உள்ளனர். இதில் 15 பேர் அமைச்சர்களாகவும், 28 பேர் இணை அமைச்சர்களாகவும் பதவி ஏற்று உள்ளனர். இதற்கு முன் மத்திய இணை அமைச்சர்களாக இருந்த 7 பேர் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு இன்று கேபினட் அமைச்சர்களாக பதவியேற்றனர். பிரதமர் மோடி அமைச்சரவையில் தற்போது 36 பேர் புதுமுகங்கள் அமைச்சர்களாக இடம்பெற்றுள்ளனர்.

மத்திய அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் புதிய அமைச்சர்களுக்கான இலாக்காக்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. முழு அமைச்சரவை பட்டியல் பின்வருமாறு.

  1. பிரதமர் மோடி- பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியம், அணுசக்தி துறை, விண்வெளித் துறை, அனைத்து முக்கியக் கொள்கை சார்ந்த விவகாரங்கள், அறிவியல் தொழில்நுட்பம்
  2. ராஜ்நாத் சிங்- பாதுகாப்புத் துறை
  3. அமித்ஷா- உள்துறை, கூட்டுறவுத் துறை
  4. நிதின் கட்காரி- சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலை
  5. நிர்மலா சீதாராமன்- நிதி மற்றும் கம்பெனி விவகாரங்கள் துறை
  6. நரேந்திர சிங் தோமர் வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலன்
  7. டாக்டர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர்- வெளியுறவுத் துறை
  8. அர்ஜூன் முண்டா- பழங்குடியினர் நலன்
  9. ஸ்மிருதி இரானி- மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாடு
  10. பியூஷ் கோயல்- வர்த்தகம், தொழில் துறை; நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகம்
  11. தர்மேந்திர பிரதான் - கல்வி துறை
  12. பிரகலாத் ஜோஷி- நாடாளுமன்ற விவகாரங்கள், நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை
  13. நாராயண் தாட்டு ராணே- குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை
  14. சர்பானந்த சோனோவால்- துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து; ஆயுஷ்
  15. முக்தார் அப்பாஸ் நக்வி சிறுபான்மையினர் நலன்
  16. டாக்டர் வீரேந்திர குமார் - சமூக நீதி துறை
  17. கிரிராஜ் சிங் - கிராமப்புற மேம்பாடு, பஞ்சாயத்து ராஜ்
  18. ஜோதிராதித்ய எம் சிந்தியா- விமான போக்குவரத்து
  19. ராம்சந்திர பிரசாத் சிங்- எஃகு துறை
  20. அஷ்வினி வைஷ்ணவ்- ரயில்வே, தகவல் தொடர்பு, மின்னணு, தகவல் தொழில்நுட்ப துறை
  21. பசுபதி குமார் பரஸ்- உணவு பதப்படுத்துதல் தொழில்துறை
  22. கஜேந்திர சிங் செகாவத்- ஜல்சக்தித்துறை
  23. கிரண் ரிஜுஜூ- சட்டம்
  24. ராஜ் குமார் சிங்- மின்சாரம், புதுப்பிக்கத்தக்க மரபுசாரா எரிசக்தி துறை
  25. ஹர்தீப் சிங் புரி - பெட்ரோலியம், இயற்கை எரிவாய்
  26. மன்சுக் மண்டாவியா- சுகாதாரம், குடும்ப நலன், ரசாயனம் மற்றும் உரத்துறை
  27. புபேந்தர் யாதவ்- சுற்றுச் சஊழல், வனம், காலநிலை மாற்றம் மற்றும் தொழிலாளர், வேலைவாய்ப்பு துறை
  28. மகேந்திரநாத் பாண்டே- கனரக தொழில்கள் துறை
  29. பர்ஷோத்தம் ருபாலா- மீன்வளத்துறை, கால்நடை நலத்துறை, பால்வளத்துறை
  30. ஜி கிஷன் ரெட்டி- கலாசாரத்துறை, சுற்றுலா துறை, வடகிழக்கு மேம்பாடு
  31. அனுராக் சிங் தாக்கூர்- தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை, இளைஞர் நலன், விளையாட்டு துறை

இணை அமைச்சர்கள் (தனிப் பொறுப்பு)

  1. இந்திரஜித் சிங்- புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் மற்றும் திட்டம், கார்ப்பரேட் விவகாரங்கள்
  2. ஜிதேந்திர சிங்- அறிவியல், தொழில்நுட்பம், புவி அறிவியல் (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியம், அணுசக்தி, விண்வெளி ஆராய்ச்சி.

இணை அமைச்சர்கள்இணை அமைச்சர்கள்

  1. ஸ்ரீபத் யசோநாயக் - துறைமுகங்கள், சுற்றுலாத்துறை
  2. ஃபக்கன் சிங் குலஸ்தே- எஃகு துறை கிராமப்புற மேம்பாடு
  3. பிரஹலாத் சிங் படேல்- ஜல்சக்தி, உணவு பதப்படுத்துதல் தொழில்கள்
  4. அர்ஜூன் ராம் மேஹ்வால்- நாடாளுமன்ற விவகாரங்கள், கலாசார துறை
  5. வி.கே.சிங்- சாலைப்போக்குவரத்து, விமான போக்குவரத்து
  6. கிருஷன் பால்- கனரகம், மின்சாரம்
  7. தன்வே ராவ் சாஹேப் தாதாராவ்- ரயில்வே, நிலக்கரி, சுரங்கம்
  8. ராம்தாஸ் அத்வாலே- சமூக நீதி துறை
  9. சாத்வி நிரஞ்சன் ஜோதி- நுகர்வோர் நலன், பொதுவிநியோகம், கிராமப்புற மேம்பாடு
  10. சஞ்ஜீவ் குமார் பால்யான்- மீன்வளம், கால்நடை, பால்வளத்துறை
  11. நித்தியானந்த ராய்- உள்துறை
  12. பங்கஜ் சவுத்ரி- நிதித்துறை
  13. அனுப்பிரியா சிங் பட்டேல்- வர்த்தகம் மற்றும் தொழில்துறை
  14. டாக்டர் சத்யபால் சிங் பாகேல்- சட்டம், நீதித்துறை
  15. ராஜீவ் சந்திரசேகர்- திறன் மேம்பாடு; தகவல் தொழில்நுட்பம்
  16. சோபா கரந்த்லாஜே- வேளாண் துறை, விவசாயிகள் நலன்
  17. பானு பிரதாப் சிங் வெர்மா- சிறு, குறு, நடுத்தர தொழில்கள்
  18. தர்ஷனா விக்ரம் ஜர்தோஷ்- ஜவுளித்துறை, ரயில்வே துறை
  19. வி.முரளிதரன்- வெளியுறவுத் துறை, நாடாளுமன்ற விவகாரங்கள்
  20. மீனாக்‌ஷி லேகி- வெளியுறவுத் துறை, கலாசாரம்
  21. சோம் பிரகாஷ் - வர்த்தகம் மற்றும் தொழில்துறை
  22. ரேணுகா சிங் செரூதா- பழங்குடியினர் நலன்
  23. ராமேஷ்வர் தேலி- பெட்ரோலியம், இயற்கை எரிவாயு; தொழிலாளர், வேலைவாய்ப்பு
  24. கைலாஷ் சௌத்ரி- வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலன்
  25. அன்னபூர்ணா தேவி- கல்விதுறை
  26. ஏ நாராயணசாமி- சமூக நீதி மற்றும் மேம்பாடு
  27. கௌஷல் கிஷோர்- நகர்ப்புற விவகாரங்கள்
  28. அஜய் பட்- பாதுகாப்பு, சுற்றுலா
  29. பி எல் வெர்மா- வடகிழக்கு மேம்பாடு, கூட்டுறவுத்துறை
  30. அஜய் குமார்- உள்துறை
  31. சௌஹான் தேவுசின்ஹ்- தகவல் தொடர்பு துறை
  32. பகவந்த் குபா- புதிய, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, ரசாயன, உரத்துறை
  33. கபில் மோரேஷ்வர் பாட்டீல்- பஞ்சாயத்து ராஜ்
  34. பிரதிமா பௌமிக்- சமூக நீதி, மேம்பாடு
  35. டாக்டர் சுபாஸ் சர்கார்- கல்வித்துறை
  36. டாக்டர் பகவத் கிஷன்ராவ் கராட்- நிதித்துறை
  37. டாக்டர் ராஜ்குமார் ரஞ்சன் சிங் - வெளியுறவுத் துறை, கல்வி
  38. டாக்டர் பாரதி பிரவீன் பவார்- சுகாதாரம், குடும்ப நலன்
  39. பிஷ்வேஸ்வர் துடு- பழங்குடிநலன், ஜல்சக்தி
  40. சாந்தனு தாக்கூர்- துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து
  41. டாக்டர் முஞ்சபாரா மகேந்திரபாய்- பெண்கள், குழந்தைகள் மேம்பாடு, ஆயுஷ்
  42. ஜான் பர்லா- சிறுபான்மையினர் நலன்
  43. டாக்டர் எல் முருகன்- மீவளத்துறை, தகவல் ஒலிபரப்புத்துறை
  44. நிசித் பிரமாணிக்- உள்துறை; இளைஞர் நலன், விளையாட்டு

புதிய மத்திய அமைச்சரவையில் இடம்பெறும் 43 அமைச்சர்கள்

கேபினெட் அமைச்சர்கள்

  1. நாராயண் தாட்டு ராணே
  2. சர்பானந்த சோனோவால்
  3. டாக்டர் வீரேந்திர குமார்
  4. ஜோதிராதித்ய எம் சிந்தியா
  5. ராம்சந்திர பிரசாத் சிங்
  6. அஷ்வினி வைஷ்ணவ்
  7. பசுபதி குமார் பரஸ்
  8. கிரண் ரிஜிஜூ
  9. ராஜ் குமார் சிங்
  10. ஹர்தீப் சிங் புரி
  11. மன்சுக் மண்டாவியா
  12. புபேந்தர் யாதவ்
  13. பர்ஷோத்தம் ருபாலா
  14. ஜி கிஷன் ரெட்டி
  15. அனுராக் சிங் தாக்கூர்

புதிதாக நியமிக்கப்பட்ட இணை அமைச்சர்கள்

  1. பங்கஜ் சவுத்ரி
  2. அனுப்பிரியா சிங் பட்டேல்
  3. டாக்டர் சத்யபால் சிங் பாகேல்
  4. ராஜீவ் சந்திரசேகர்
  5. சோபா கரந்த்லாஜே
  6. பானு பிரதாப் சிங் வெர்மா
  7. தர்ஷனா விக்ரம் ஜர்தோஷ்
  8. மீனாக்‌ஷி லேகி
  9. அன்னபூர்ணா தேவி
  10. ஏ நாராயணசாமி
  11. கௌஷல் கிஷோர்
  12. அஜய் பட்
  13. பி எல் வெர்மா
  14. அஜய் குமார்
  15. சௌஹான் தேவுசின்ஹ்
  16. பகவந்த் குபா
  17. கபில் மோரேஷ்வர் பாட்டீல்
  18. பிரதிமா பௌமிக்
  19. டாக்டர் சுபாஸ் சர்கார்
  20. டாக்டர் பகவத் கிஷன்ராவ் கராட்
  21. டாக்டர் ராஜ்குமார் ரஞ்சன் சிங்
  22. டாக்டர் பாரதி பிரவீன் பவார்
  23. பிஷ்வேஸ்வர் துடு
  24. சாந்தனு தாக்கூர்
  25. டாக்டர் முஞ்சபாரா மகேந்திரபாய்
  26. ஜான் பர்லா
  27. டாக்டர் எல் முருகன்
  28. நிசித் பிரமாணிக்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+