ஈரான் - அமெரிக்கா போரால் நெருக்கடி.. பிரதமர் மோடி டெல்லியில் அவசர மீட்டிங்! ஆலோசித்தது என்ன?
டெல்லி: கேஸ் சிலிண்டர், பெட்ரோல் போன்ற எரிபொருள் தட்டுப்பாடு தொடர்பாக பிரதமர் மோடி அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். மேற்கு ஆசிய போரால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தொடர்பாகவும், பெட்ரோல், டீசல், எரிவாயு, உரங்கள் இருப்பு உள்ளிட்டவை குறித்தும் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி கேட்டறிந்தார்.
ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து நடத்தி வரும் தாக்குதல் மூன்றாவது வாரத்தை தாண்டியுள்ளது. அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதிலடியாக ஈரான் வளைகுடாவில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

கச்சா எண்ணெய் விலை உயர்வு
ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ள நிலையில், சர்வதேச அளவில் எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என்று ஈரான் எச்சரித்தது. உலக கச்சா எண்ணை விநியோகத்தில் 20 சதவீதம் நடைபெறும் ஹார்முஸ் ஜலசந்தி முடக்கப்பட்டதால் கச்சா எண்ணை விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்தது. இந்தியாவும் எரிவாயு மற்றும் எண்ணெய் தேவைக்கு இறக்குமதியையே பெரிதும் நம்பியிருப்பதால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு இல்லையென்றாலும் எரிவாயு பற்றாக்குறை நிலவுகிறது.
மீள முடியாத அளவுக்கு தாக்குதல் நடத்துவோம்
வீட்டு உபயோக சிலிண்டர் கிடைத்தாலும் வணிக சிலிண்டர்கல் கிடைப்பதில் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால், நாடு முழுக்க ஹோட்டல்கள் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளன. வீட்டு சமையல் கேஸ் சிலிண்டர் விலையும் கூட்டப்பட்டதோடு, புக்கிங் கால இடைவெளியும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால், இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். போர் தொடங்கி மூன்று வாரம் ஆகியுள்ள நிலையில், உக்கிரம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டேதான் செல்கிறதே தவிர குறைந்தபாடில்லை.
ஹார்முஸ் ஜலசந்தியை 48 மணி நேரத்திற்குள் ஈரான் திறக்க வேண்டும். இல்லையென்றால் அந்த நாட்டின் மின் கட்டமைப்புகள் மீது மீள முடியாத அளவுக்கு தாக்குதல் நடத்துவோம் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்க அதிபர் டிரம்பின் இந்த கெடுவுக்கு ஈரான் என்ன மாதிரியான ரியாக்ஷனை கொடுக்கும் என்று தெரியவில்லை.
பிரதமர் மோடி அவசர ஆலோசனை
ஏற்கனவே எண்ணெய் விநியோக சங்கியில் பாதிப்பு ஏற்படுள்ள நிலையில், டிரம்பின் இந்த மிரட்டல் கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இத்தகைய நெருக்கடியான நிலையில், பிரதமர் மோடி இன்று உயர் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். மூத்த அமைச்சர்கள் அதிகாரிகள் இந்த ஆலோசனையில் பங்கேற்றனர்.
மேற்காசியாவில் வசிக்கும் இந்தியர்களின் பாதுகாப்பு மற்றும் ஹார்முஸ் ஜலசந்தி சிக்கல்கள் காரணமக ஏற்றுமதி, இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இதை தவிர்ப்பது எப்படி என்பது தொடர்பாக ஆலோசனை நடத்தியுள்ளார். இந்தியாவில் உர தட்டுப்பாடு ஏற்படாமல் இருப்பது உள்ளிட்டவைகள் தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது. எரிபொருள் விலை உயராமல் இருக்க என்ன மாதிரியான முடிவுகள் எடுக்க வேண்டும் என்பது தொடர்பாகவும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாக தெரிகிறது.
-
சவால்களுக்கு தயாராக வேண்டும்.. நீண்ட காலத்திற்கு தாக்கம் இருக்கும்.. ராஜ்யசபாவில் பிரதமர் மோடி பேச்சு -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
பிரதமர் மோடி - அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பேச்சு.. ஈரான் போருக்கு நடுவே நடந்த முக்கிய ஆலோசனை -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை?














Click it and Unblock the Notifications